Posts

Showing posts from April, 2019

TNTJக்கும் இலங்கையில் நடந்த தீவிரவாத சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையா?

Image
ஸஹ்ரான் கடந்த காலங்களில் TNTJ ன் கீழ் இருந்து செயல்பட்டார் என்பது பொய்யா ?  மதுரை   சத்தாம்   உசேன் மீதும்   அவரது   கைக்   குழந்தை மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களே அவர்கள் ஸஹ்ரானின் ஆட்களா?  வெள்ளிக்கிழமை   ஜும்ஆ   தொழுது   விட்டு   வந்த   கம்பம்   ஜபருல்லாஹ்   அவர்களை   கொலை   செய்ய   முயற்சி   செய்தார்களே   அவர்கள் ஸஹ்ரானின்   NTJ க்காரர்களா?  வேலுார் இபுறாஹீமை கொலை செய்ய முயற்சி செய்தார்களே அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களா? https://mdfazlulilahi.blogspot.com/2019/04/tntj_27.html தலைப்பில் உள்ள முதல் கேள்விக்கு சம்பந்தம் இல்லை என்ற ஒரே வார்த்தையில் பதில் கூறி இருந்தால் TNTJ யினர் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வராது .  ஆனால் , TNTJ க்கும் சம்பவம் செய்தவர்களுக்கும் கடந்த காலத்தில் தொடர்பே இருக்கவில்லை . அவர்களை யார் என்றே தெரியாது  என்ற பொய்களுடன் தீவிர வாதத்தை துடைத்தெறிய TNTJ பெரும் பங்காற்றி வருகிறது .  கடந்த 40 ஆண்டுகளாக(?) தீவிரவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது போன்ற பொய்களையும் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் அவர்களைக

ஆன்மீகத் தலைவர் சிறந்தவரா அரசியல் தலைவர்கள் சிறந்தவர்களா? தவ்ஹீதுவாதிகள் நேசிப்பது யாரை?

Image
யாருக்கு மரணம் எப்பொழுது வரும் எந்த ரூபத்தில் வரும் என்று யாரும் சொல்ல முடியாது. அதற்கு இப்போதைய இலங்கை சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு.   பீ . ஜே . மீதுள்ள குற்றம் குறைகளை வெளிப்படுத்தியவர்கள் என்று கூறப்படும் என் போன்றவர்களும் இயல்பாகவே அவரை நஞ்சாக வெறுக்கக் கூடிய எதிரிகளும் அவரை எதிர்த்து ஒரே மேடையில் முனாழரா , முஜாதலா செய்த மாற்று கருத்து உடையவ மவுலவிகளும் மாங்கா மடையர்களையும் கூ முட்டைகளையும் கொண்ட அறிஞர் குழுவும்   சரி . அவரது பேச்சில் ஈர்ப்பு - ஸிஹ்ர் இருக்கிறது என்பதை மறுக்க மாட்டார்கள் ,   மறுக்க முடியாது . அப்படிப்பட்ட சிறந்த பேச்சாளர். எந்த ஆய்வில் ஈடுபட்டாலும் ஆணி வேறு அக்கு வேறாக பிரித்து விளக்கக் கூடிய   பேரறிஞர் பீ . ஜே . https://mdfazlulilahi.blogspot.com/2019/04/blog-post_22.html   1980 களில் அவர் எந்த ஊருக்குப் பேசப் போனாலும் முதலில் அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஆலிம்களிடமுள்ள குறைகளை விமர்சித்துப் பேசுவார் . அந்த பிரபலமான பெரிய பெரிய ஆலிம்களின் குடும்பத்து இளைஞர்கள் உட்பட அந்த ஆலிம்களின் பக்தர்களாக பரம சீடர்களாக இருந்த இளைஞர்களெல்லாம் சரிதானே என்று தலையை ஆட

இப்படிப்பட்டவர்கள் தான் நீங்கள் பாசமும் நேசமும் வைத்துள்ள தலைவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Image
தலைவர்   தானாகவா   வந்தார் ? திரைமறைவில் நடந்தது என்ன?.  தலைவா தலை வா என கத்தியவர்கள் அரங்கத்தைப் பார்த்தார்கள். அந்தரங்கத்தில் நடந்தது என்ன? தேர்த் தள் திருவிழாக்களை விஞ்சிய தேர்தல் திருவிழா தமிழக அளவில் முடிந்து விட்டது . இதே மாதிரி தேர்த்தல் திருவிழா பரபரப்பின் போது ஒரு கட்சியின் நகரச் செயலாளராக இருந்த   முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டார் . சில நாட்களில் அவர் இருந்த முஸ்லிம் அல்லாத கட்சியின் மாநில தலைவர் தேர்தல் பிரச்சார பயணமாக அந்த மாவட்டத்திற்கு வந்தார். அருகில் உள்ள சிமெண்ட் பேக்டரி ஓனரின் கெஸ்ட் ஹவுஸில் தங்கி னா ர் .  https://mdfazlulilahi.blogspot.com/2019/04/blog-post_18.html மறைந்த நகரச் செயலாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி அளிக்க இன்று மதியம் தலைவர் வருகிறார் . இப்படி கார்களிலும் வேன்களிலும் டிரக்கர்களிலும் ஒலி பெருக்கிகள் நகர் முழுவதும் அலறின . அது அந்த அளவுக்கு ஆட்டோக்கள் இல்லாத காலம். மதியம் தலைவர் வருகிறார் என்றதும் மதிய உணவு கூட உண்ணாமல் தொண்டர்கள் பசி பட்டினியுடன் மறைந்த நகரச் செயலாளரி