திண்ணை வள்ளல்களும் தெருத் திருடர்களும்.
நமது முன்னோர்களுக்கு
மார்க்கம் தெரியாது. நமக்குத்தான் மார்க்கம்
தெரியும். ஏனென்றால் முஹம்மது(ஸல்) அவர்கள்
நபியாக ஆகி 1300 ஆண்டுகள் ஆகியும்
நமது தாய் மொழியில் குர்ஆனும் ஹதீஸ்களும் தரப்படவில்லை.
நமது காலத்தில்தான் நுால்களாக மட்டுமன்றி வலைகளிலும் எளிதில் குர்ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. ஆகவே நாம்தான் மார்க்கத்தை முழுமையாக அறிந்தவர்கள் என்று பீற்றிக் கொள்கிறோம்.
கிரகணங்கள் ஏற்பட்டால் சாப்பிடக் கூடாது, வெளியில் போகக்
கூடாது திக்ரு செய்ய வேண்டும் என்பார்கள். கிரகணங்கள் ஏற்பட்டால் நபி(ஸல்) அவர்கள்
பள்ளிவாசலை நோக்கி விரைவார்கள். கிரகணங்கள் முடியும் வரை தொழுவார்கள் என்ற
ஹதீஸ்களை தெரிகின்ற வரை முன்னோர்களை மூட நம்பிக்கையாளர்கள் என்று விமர்சித்தோம்.
விஞ்ஞானத்தில் ஆதாரம் இல்லை என்றோம்.
நன்மை அமல்களில்
இருக்கின்றதா? மார்க்கத்தை அறிவதில் இருக்கின்றதா? நமது முன்னோர்கள் கட்டிய வீடுகளில் அவர்களின் வள்ளல் தன்மையால் திண்ணை இருந்தது.
நாம் கட்டும்
வீடுகளில் திண்ணை இல்லை. அது மட்டுமல்ல
நாம் கட்டிய வீடுகள் தெருவையும் திருடி நிற்கிறது. ஸம் – தண்ணீர்த் தொட்டி, டூ வீலரை ஏற்ற படி
என படிப்படியாக தெருக்களை திருடுகிறோம்.
நமது வாப்பா, வாப்பா உடைய வாப்பா வள்ளல் தன்மையால் தங்கள் பாகத்தில் இருந்து திண்ணை அமைத்தார்கள். வெயில் மழை காலங்களில் வழிப் போக்கர்கள் ஒதுங்க,
பயன்படுத்த உதவினார்கள். நல்லது கெட்டதுகளுக்கு சென்றால் அக்கம் பக்கம் உள்ள திண்ணைகள் நாம் அமரவும் பயன்பட்டன.
இன்று குர்ஆன்
ஹதீஸ்களை தெளிவாக தெரிந்த நாம் கட்டிய வீடுகள். நல்லது கெட்டதுகளுக்கு
செல்லும் நம்மையும் நடுத் தெருவில் நிற்க வைத்து விட்டன.
நமது முன்னோர்களுக்கு
முன் மாதிரி யார்? நமக்கு முன்
மாதிரி யார்?
நபி(ஸல்) அவர்கள்
அமைத்த வீட்டில் திண்ணை இருந்தது. அந்த திண்ணையில்
தங்கி வாழ்ந்தவர்களைத்தான் அஸ்ஹாபுஸ் ஸுப்பா – திண்ணைத் தோழர்கள் என்று கூறுகிறோம். ஆக நமது முன்னோர்கள் கட்டிய திண்ணைக்கு முன் மாதிரி அல்லாஹ்வின் துாதர்(ஸல்)
அவர்கள்தான்.
நபி வழி நபி வழி என வாய் கிழிய பேசுபவர்கள். நபி வழியில் இல்லை. நபி வழியை
பேணவில்லை. நமது முன்னோர்கள்
நபி வழியை பேணி உள்ளார்கள்.
நாம் நபி
வழியில் திண்ணை அமைக்கவில்லை. மட்டுமன்றி தெருவையும் திருடுகிறோமே. அது யார் வழி? தெரு
என்பது பொது சொத்து. பொது சொத்துக்களை
அபகரிப்பவன் யார் வழியில் உள்ளவன்.
நமது முன்னோர்கள் வாசல் வழியில்
நிற்பது கூடாது என்பார்கள். நடை பாதைகளில் நிற்பது ஆகாது என்பார்கள். காரணம்
சாலைக்கு அதன் உரிமையை கொடுத்து விடுங்கள்’ என்ற நபி மொழியை பேணிய செயல் அது. இன்று நபி வழி என்று சொல்லும்
நாம் பாதைகளை அபகரிப்பவர்களாக உள்ளோம்.
பிரச்சாரம் பிரச்சாரம் என்ற பெயரால் விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் செல்பவர்களாக பிரச்சாரகர்கள் உள்ளார்கள். அது போன்ற தீய பிரச்சாரகர்களை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக
நேற்று இஷாவுக்குப் பின் நாம் ஆற்றிய உரையிலிருந்து
http://mdfazlulilahi.blogspot.in/2017/09/blog-post_5.html
http://mdfazlulilahi.blogspot.in/2017/09/blog-post_5.html
Comments