பர்மா முஸ்லிம்களுக்காக போராடக் கூடாதா?

இன்றைய பஜ்ருக்குப் பின் நாம் ஆற்றிய உரையிலிருந்து.

தினமும் ஐந்து முறை பாங்கு சொல்கிறோம். அந்த பாங்கில்  4 ஒரே விதமாக உள்ளது. பஜ்ர் பாங்கு மட்டும் வித்தியாசப்படுகிறது. அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம் என்பது பஜ்ரு பாங்கில் கூடுலாக உள்ள வார்த்தையாகும்.

இப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது மழை கால பாங்கு வித்தியாசப்படும். உங்கள் இல்லங்களிலே தொழுது கொள்ளுங்கள் கூடாரங்களிலே தொழுது கொள்ளுங்கள் என்ற பொருள்பட ஸல்லூ ஃபிர் ரிஹால் என்று சொல்லப்படும். இதற்கு ஹதீஸ் ஆதாரம் இருக்கிறது என்று சொன்ன நாம் சபையில் அந்த ஹதீஸை கூறவில்லை. அந்த ஹதீஸ் இதுதான்.

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்' (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், '(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணையிடுவார்கள்' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி (666)
பர்மா முஸ்லிம்களுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் 70 ஹாபிழ்கள் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் ஒரு மாத காலம் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு எதிராக குனூத் ஓதினார்கள். (புகாரி 1002)
நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹுலிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான் உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொல்வார்கள். (அபூதாவூத் 1231,அஹ்மத் 2610, புகாரி 1003,1004)
இந்த குனூத்தை 3:128 வது வசனத்தின் மூலம் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்ற கருத்தும் உள்ளது. 3:128வது வசனம் உஹத் யுத்தத்தின் போது  அருளப்பட்டது என்று ஸஹீஹ் முஸ்லிமில் 1791 ஆவது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். (ஆதாரம்: புகாரி 4560)
பர்மா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடு என்று பிரார்த்திக்கலாம். இதற்கு காரணமானவர்களை அப்படிச் செய் இப்படிச் செய் என அல்லாஹ்வுக்கு நாம் கட்டளை இடுவது போல் நமது பிரார்த்தனைகள் இருக்கக் கூடாது.
பர்ழான தொழுகையில் குனுாத் ஓதலாம் என்றால் பள்ளி நிர்வாகம் கூடி மஷுரா செய்யனும் அது இது என நீளும். நம் தகுதிக்கு தக்கவாறு சுன்னத் தொழும்பொழுது 2 ஆவது ரகஅத்தில் குனுாத் ஓதலாம்.

துாதரகங்களுக்கு முன்னால் நின்று  போராட தகுதி இருந்தும் போராடாமல் தங்கள் மீதான குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காக தெருக் கூத்தாடியவர்களைத்தான் நேற்று இஷாவுக்குப் பின் பேசிய நாம் விமர்சித்தோம். பர்மா முஸ்லிம்களுக்காக போராடக் கூடாது என்று நாம் சொல்லவில்லை.


துாதரகங்களுக்கு முன்னால் நின்று  போராடும் தகுதி, வசதி நமக்கு இல்லை. ஆகவே சுன்னத் தொழும்பொழுது பர்மாவில் பாதிக்கப்படும் முஸ்லிம்களை பாதுகாக்குமாறு துஆச் செய்வோம். அநியாயக்காரர்களை யா அல்லாஹ் நீ பார்த்துக் கொள் என்று அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம். 
பர்மா சம்பந்தமாக நமது முந்தைய வெளியீட்டைக் காண கீழே உள்ள தலைப்பை கிளிக் செய்யவும் 

பர்மா ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் தரும் படிப்பினைகள்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு