தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கிறான்?
நான் யாரையும் தாக்கி பேசி விடக் கூடாது என்ற நோக்குடன் முன் பின் அணைகளுடன் தலைப்பை தந்துள்ளார்கள். திங்கள் கிழமை தலைப்பைக் கொடுத்தும் வழக்கத்துக்கு மாறாக புதன் வரை இழுத்தடித்தார்கள் என்று நமது உரையை துவங்கினோம்.
இமாம் முஅத்தின்கள் பற்றிய சிறப்புகளைக் கூறினோம். அதே நேரத்தில் இன்று மக்களிடம் ஹை லைட்டாக உள்ளது பற்றியும்
பேசினோம். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கிறான்.
விபச்சாரம் செய்து விட்டான் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவன் மார்க்கம் சொன்னால் ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை.
விபச்சாரம் செய்த தலைவர்களுக்கெல்லாம் பெரிய தலைவன் ஷய்த்தான்.
அயோக்கியத் தனங்கள் அத்தனைக்கும் பெரிய இமாம். யாரு? ஷய்த்தான். அந்த ஷய்தான் வந்து இது குர்ஆன் வசனம் என்று சொன்னால் அது குர்ஆன்
வசனமாக இருந்தால் ஏற்க வேண்டும் அதுதான் இஸ்லாம்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் பித்ர் ஜகாத் பொருள்களை பாதுகாத்துக் கொண்டு இருக்கும்பொழுது ஒருவன் இரண்டு முறை திருடி விடுகிறான். மூன்றாம் முறை திருடும்பொழுது அபூஹுரைரா(ரலி) அவர்கள் பிடித்து விடுகிறார்கள். அவன் ஆயத்துல் குர்சியை சொல்லிக் கொடுக்கிறான் விட்டு விடுகிறார்கள். இந்த செய்திளை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம்.
இதைப் அறிந்த நபி(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்? சொன்னவன் ஷைத்தான். அவன் சொன்ன செய்தி உண்மை என்றார்கள். சொன்னவன் ஷைத்தான் அதனால் அவன் சொன்னதை ஏற்காதே என்று சொல்லவில்லை.
எனவே ஷைத்தானின் அடிமைகளாக இருந்து விபச்சாரம் உட்பட அசிங்கங்களை செய்து விட்டவர்கள். என் பிரச்சாரத்தை முடக்க சதி என்று கூவினால் அவன் பொய்யன் என்று அர்த்தம். அவன் விபச்சாரம் செய்தவன் என்று அர்த்தம்.
தலைவர், நிரந்தர
தலைமைக்குத் தகுதியானவர், உண்மையாளர் என்று பீற்றிக் கொள்ளும் தொண்டர்களால் என் தலைவன் சுத்தமானவன் என்று சத்தியம் செய்து சர்ட்பிகேட் கொடுக்க முடியவில்லை. இதைவிட வேறு வெட்கக் கேடு ஒரு தலைவனுக்கு உண்டா?
உன் தலைவன் உண்மையாளன் விபச்சாரம் செய்யாதவன், யோக்கியன் என்று நீ நம்பினால் அல்லாஹ்வின் பெயரால் நீ உத்திரவாதம் கொடு என்றால் பே முழி முழிக்கிறான். வெட்கித் தலை குனிந்து
தலைதெறிக்க ஓடுகிறான்.
என் தலைவன் நல்லவன்,
யோக்கியன் என்று தொண்டனால் சத்தியமிட்டு சொல்ல முடியாத விபச்சாரகன்தான் அமைப்பின் வழி காட்டும் தலைவனாக உள்ளான். என்பதை பதிவு செய்தோம்.
பாங்கு சொல்வதற்குள்ள
நன்மையையும், முதல்
சஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி
போட்டு பெற முயற்சிப்பார்கள்
பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார்
பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட
ஜீவராசிகள் எல்லாம் அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள்
யார் சப்தத்தை கேட்டால் ஷய்த்தான் ஓடுவான்?
اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا
مَّوْقُوْتًا
நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
قال: قال رسول الله - صلى الله عليه وسلم -:الإمام ضامنٌ والمؤذن مؤتمن اللهم أرشد الأئمة واغفر للمؤذنين அபூ தாவூத் 517
அல் இமாம்
ளாமினுன் இமாம் என்பவர் பொறுப்புதாரி நம்பிக்கைக்குரியவர்
வல் முஅர்ரின்
முஃதமன் முஅர்ரின் மக்களால் நம்பப்படுகிறவர்
அல்லாஹும்ம அர்ஷித் அல் அஇம்மா யா அல்லாஹ் இமாம்களுக்கு நேர்வழி காட்டுவாயாக
வஃக்பிலில் முஅர்ரினீன் பாங்கு சொல்கின்ற முஅர்ரின்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக
ஆகிய ஆயத்து ஹதீஸ்களுடன் முஅத்தினும் இமாமும் எப்படி இருக்க வேண்டும் என்றும் விளக்கினோம்.
Comments