தமிழகத்து பெண் கஸ்தூரியின் நிலை உண்மையும் பொய்யும்
அஸ்ஸலாமு அலைக்கும்
- ரியாத்திலிருந்து அபு ஃபாயிஸ்
கையை இழந்து மருத்துவமனையில் வாடும் தமிழக பெண் கஸ்தூரி - ஒரு நேரடி ரிப்போர்ட்.
ந்யூஸ் 7 தொலைக்காட்சி முதன் முதலில் இந்த செய்தியை வெளியிடும் போது கூறப் பட்ட இரண்டு நபர்களில் ஒருவரான சகோ. ராஜ் முகம்மதுவை அழைத்துக் கொண்டு, ரியாத் விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனை முதல் மாடி அறை எண் 18இல் தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற சகோதரியை சந்தித்தோம்.
சுமார் 2 மணி நேரம் அவருடன் இருந்தோம். இதற்கு முன்னர், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பார்த்து சில விவரங்களை தெரிந்து கொண்டோம்.
சுமார் 2 மணி நேரம் அவருடன் இருந்தோம். இதற்கு முன்னர், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பார்த்து சில விவரங்களை தெரிந்து கொண்டோம்.
(குடும்ப சூழ்நிலை) வரதட்சனை கொடுமை, குடி முதலான சமூகக் கொடுமைகளின் காரணமாக, 55 வயதில் தன் பிள்ளைகளின் நலனை மட்டுமே நாடி வீட்டு வேலை செய்து, சிறிது பொருள் ஈட்டிச் செல்ல சவுதி அரேபியா தலை நகரில் உள்ள ஒரு சவுதி செல்வந்தரின் 75 வயது மனைவிக்கு பணிப் பெண்ணாக, தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற ஏழை பெண்மணி 2 மாதங்களுக்கு முன் வந்துள்ளார். வந்த இடத்தில், இரண்டு மாதங்களில் எந்த ஒரு பெரும் அசம்பாவிதமும் நடக்க வில்லை. இதை அவரே கூறினார். ஆனால் கை துண்டான சம்பவம் நடந்த அன்று, இரண்டு சேலைகளை சேர்த்து கட்டி, முதல் மாடியில் இருந்து பால்கனி வழியாக ரோட்டில் இறங்கி தப்பியோட செய்த முயற்சியின் போது, கை துண்டிக்கப் பட்ட நிலையில் கீழெ விழுந்துள்ளார். அவர் இருந்த அறையின் கதவு உட்பக்கம் தாள் போடப் பட்டிருந்ததாக FIR இல் உள்ளது. கஸ்தூரியும் சம்பவம் நடக்கும் முன் எஜமானியம்மாளைத் தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.
அந்த பெண்ணிடம் "உண்மையும், நியாயமும் எப்போதும் தோற்காது " என்று கூறி, குர்ஆன் தமிழ் மொழி பெயர்பை நிதானமாக படிக்குமாறு பணித்தோம்.
ஆனால் இந்த சம்பவத்தை தமிழகத்தில் உள்ள சங் பரிவாரக் கும்பல் தவறான, பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். சரியான தகவல்களை சேகரித்து தர வேண்டிய தூதரகமும் இந்த விவகாரத்தில் மெத்தன போக்கையே கையாண்டு வருவது கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இந்தியா ஒளிர்கிறது என்று தவறாக சித்தரித்த சங்பரிவாரக் கும்பல், தற்போது ஜன நாயக இந்தியாவை எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள் என்று உலகமே தற்போது பெருங் கவலை கொண்டுள்ளது.
நான் எடுத்துக் கொண்ட புகைப் படம் இத்துடன் இணைத்துள்ளேன். என்னுடன் இருப்பவர் ஈரோடைச் சேர்ந்த சலீம் என்ற சகோதர ர், கடந்த 20 நாட்களாக இந்த பெண்ணை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டுள்ளார் தன்னையும், தன் தாயின் வயதை அடைந்த கஸ்தூரியையும் படைத்த ஏக இறைவனுக்காக இந்த பணியை தனது ஓய்வு நேரத்தில் செய்து கொண்டிருப்பதாக கூறியது சங்பரிவார பாஸிஸ பொய் கும்பலுக்கு எதிராக ஓங்கப் பட்ட நவீன ஆயுதமோ என்ற எண்ணத்தை தோற்று வித்தது.
எனவே வரதட்சணை, குடி பழக்கம் போன்ற சமூக கொடுமைகளை எப்படி களை எடுப்பது போன்ற நற்செயல்களில் அரசும், இந்திய ஜன நாயகமே தங்கள் கையில் வந்து விட்டது போல் நினைத்துக் கொண்டுள்ள சங் பரிவாரக் கும்பலும் ஈடுபட வேண்டும். இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் கருத்துக்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும்
Best Regards, ShaNawas
http://www.madawalanews.com/2015/10/saudi.html
Comments