எம் எஸ்ஸும் முரண்பட்ட ஜும்ஆ உரையும் பாகம் 4
மஸ்ஜித் முபாரக்கைச் சார்ந்தவர்கள் எஸ்டிபி,தமுமுக,ஜாக் இவர்களிடம் ஒப்பந்தம் போடுகிறார்களாம்.எம் எஸ் சுலைமான் கடையநல்லூர் டவுண் கிளை மர்கஸில் நடத்திய ஜும்ஆ உரையில் சொன்ன பொய்களில் இதுவும் ஒன்று.இந்த இயக்கங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டால் நல்லது என்று காதிர்கனியாகிய நான்தான் எழுதியது.அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கும் முபாரக் பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அதை அவர்கள் பரிசீலனை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை.என்னவோ எம் எஸ் சுலைமான் அந்த ஒப்பந்தத்தில் சாட்சி கையொப்பம் போட்டது மாதிரி பொய்யான தகவலைத் தந்துள்ளார்.வெளியில் யார் எதைப் பேசினாலும், சொன்னாலும் உடனே ஜும்ஆவில் பேசிடலாமா?எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கக் கூடியவர்கள் இதைக் கேட்கவேண்டாமா?ததஜவை வேண்டுமானால் சொல்லலாம் ஒப்பந்தம் போடுவதற்கு யாரென்று கூட பார்க்க மாட்டார்கள்.ஏனென்றால் திடல் தொழுகையில் ததஜ தர்கா வாசிகளோடு ஒப்பந்தம் போட்டவர்கள்தானே.ஜும்ஆவில் உண்மையைப் பேசுங்கப்பா!அல்லது சொல்றது பொய்தான் என்றால் உங்கள் பாணியில் பொருந்த பொய் சொல்லுங்கப்பா.
தொழுகைக்குப் போன இடத்தில் கதவைப் பூட்டிவைத்து அடித்துவிட்டார்கள்.என்று ஜும்ஆ உரையில் அண்டப்புளுகு,ஆகாசப் புளுகு எம் எஸ் சுலைமான் பேசியுள்ளார்.முபாரக் பள்ளியில் பாங்கு சொல்லி இகாமத் சொல்லி தொழுகை நடந்துகொண்டிருப்பதைத் தெரிந்து பள்ளிக்கு எதிர்ப்புறமுள்ள கடையில் தங்கச் செயின் புகழ் ததஜ நெல்லை மேற்குமாவட்டத் தலைவர் பைசல் என்பவர் அவருடன் சிலர்கள் டீ குடித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழுகை எப்போது முடியும் என்று எதிர்பார்த்து காத்திருந்து இமாம் ஸலாம் கொடுத்து முடிந்ததும் உள்ளே நுழைந்து தொழுதவர்களை தாக்கிவிட்டு வடிவேல் பாணியில் என்னை அடித்துவிட்டார்கள் அடித்துவிட்டார்கள் என்று சொன்ன பைசல் காவல்துறையில் என்ன புகார் கொடுத்துள்ளார் என்று பார்க்க வேண்டாமா?அதுமட்டுமா நாங்கள்தான் அடித்தோம் என்று உங்கள் கன்னத்தில் அடித்தமாதிரி தங்கச் செயின் புகழ் ஒரு ஆடியோவில் பேசியுள்ளதை கேட்டீர்களா? நீங்கள் எங்கே கேட்கப் போகிறீர்கள் எதைப் பேசச் சொன்னார்களோ அதைப் பேசிவிட்டு ஜும்ஆ முடிந்ததும் கிடைப்பதை வாங்கிக்கொண்டு போகக்கூடியவர் தானே இதையெல்லாம் கேட்கவா நேரம் இருக்கும்?
சகோதரர்களே! எம் எஸ் சுலைமான் ஜும்ஆஉரையில் முபாரக் பள்ளியைச் சார்ந்தவர்கள் அடித்துவிட்டார்கள் என்று சொல்லுகிறார். முபாரக் பள்ளியில் பிரச்சனை ஏற்படுத்திய கதாநாயகன் பைசல் நாம்தான் அடித்தோம் என்று சொல்லுகிறார்.இதே பைசல் சைபுல்லாஹ் சமாதானத்திற்கு அழைதார் நாங்கள் அங்கு சென்றோம் எங்களை அடித்துவிட்டார்கள் என்றும் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். அட்டாச் பைலை பாருங்கள் முரண்பாடுகள் தெரியும்.தொழுகைக்காக வந்தோம் என்று சொல்லுகிறார்,சமாதானத்திற்கு சைபுல்லாஹ் அழைத்தார் என்று சொல்லுகிறார், சூனியத்தை ஆதரிக்கிறார்கள் அதனால் அபகரிக்க வந்தோம் என்று சொல்லுகிறார்,காயிதேமில்லத் திடலில் பிரச்சனை முபாரக் பள்ளியைச் சார்ந்தவர்கள் ஏற்படுத்து கிறார்கள் அதற்காகத்தான் வந்தோம் என்று சொல்லுகிறார்.எது உண்மை?ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். முரண்பாட்டின் மொத்த உருவமே ததஜ என்று மீண்டும் உறுதியாகிறது. இதைத்தான் உங்கள் சகாக்கள் கேட்டதற்கு அவர்களைப் பார்த்து கொள்கையற்றவர்கள் என்று சொன்னீர்களோ!.
ஏம்பா ஒவ்வொரு ஜும்ஆவிலும் முபாரக் பள்ளியைப்பற்றியோ ஸைபுல்லாஹ்வைப் பற்றியோ பேசுகிறீர்கள் என்று கேட்டால் அபூஜஹ்லைப்பற்றி பேசவில்லையா,பிர்அவ்னைப்பற்றி பேசவில்லையா என்று சில கொள்கைகள் வரம்புமீறி பதில் கொடுக்கிறார்கள்.நபி (ஸல்) அவர்கள்கூட அபூஜஹ்லைப் போன்றவர்களைப் பற்றி பேசும்போது கூட உண்மையைத்தான் சொன்னார்கள்.ஆனால் உங்களிடத்தில் எதிலாவது உண்மையிருந்ததா? பொய்யையே குறிக்கோளாக கொண்டவர்களிடம் உண்மையையை எதிர்பார்க்கமுடியாது. எது பொய் எது உண்மையை என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ்வின் உதவிகொண்டு ததஜவைப் பிரிந்து வந்ததற்குப் பிறகு எம் எம் ஜேயின் பணிகள் விண்ணை முட்டும் அளவிற்கு சென்றுகொண்டிருப்பதை பொறுக்கமுடியாமல் தன்னுடைய இயலாததனம் என்ற போதையில் ஏறி விரக்தியின் வெளிப்பாடுதான் முபாரக் பள்ளி மீட்புக்குழு என்ற முகநூல்வழியாக வெளிப்பட்டு அடாவடித்தனத்தின் உச்சகட்டத்திற்கு சென்று தொழுது கொண்டிருந்த வர்களைத் தாக்கி மூக்கறுபட்டு மக்களுக்கு மத்தியில் “சீ” என்று காரித்துப்பும் அளவிற்குச் சென்று கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையையும் இழந்துவிட்டார்கள்.
ஒன்றுக்கு நான்குதடவைகள் கடையநல்லூர் மக்களிடம் பள்ளிக்காக வசூல் செய்து பள்ளிஎன்று பதிவு செய்யாமல் ததஜவின் மாநில சொத்துக்காக பத்திரப்பதிவு செய்ததை மக்கள் மறக்கவில்லை .ஐந்தாவது தடவையாக அதே பள்ளிக்கென்று வசூல் செய்தபோது கடையநல்லூர் மக்களிடம் சொல்லடிபட்டதை நினைத்துப் பார்க்கி றார்கள்.அய்யகோ!இவ்வளவு அலைந்து திரிந்து சொற்பத் தொகையை பெற்றுக்கொண்டு அதை நோட்டீஸ் அடிக்கவும் வால் போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்தி நடுத்தெருவில் நிற்பதை எண்ணிப் பார்க்கிறார்கள். இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் மஸ்ஜித் முபாரக் மீட்புக்குழு என்ற முகநூல் முகவரி.
எம் எம் ஜே பள்ளிவாசலோடு ஒரு அலுவலகத்தைக் கட்டி அதிலிருந்துகொண்டேஅல்லாஹ்வின் உதவிகொண்டு போன் மூலமாக வசூல்செய்து பலகோடி ரூபாய்க்கு முறையாக செலவு செய்து பள்ளிவாசல் கட்டிடங்களை எழுப்பும்போது என்ன செய்ய? குர்ஆன்,ஹதீஸை சொல்லிக்கொண்டு இந்த இரண்டுக்கும் மேலாக பைலா ஒன்றை ஏற்படுத்தி தானும் குழப்பமாகி மக்களையும் குழப்பத்திலாக்கிக் கொண்டிருக்கும் ததஜ விரக்தியின் உச்சத்திற்கு சென்று நாம் உண்மையை சொல்கின்றோமா?பொய்யை சொல்கின்றோமா?என்பது தெரியாமல் சூனியத்தால் பிரமை யூட்டப்பட்டதுதான் முபாரக் பள்ளியில் ததஜவினரால் ஏற்படுத்தப்பட்ட இந்த அடாவடித்தனம். இந்த அடாவடித்தனங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
சகோதரர்களே! எம் எஸ் சுலைமானும்,ததஜ நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் பைசலும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையும்,காவல்துறையில் புகார் செய்த அந்த மனுவையும் அட்டாச் பைலில் பார்க்க...
சத்தியம் நிலைத்து நிற்கும் அசத்தியம் நிச்சயம் அழியும்.
இப்படிக்கு
கதிர்கனி எம் ஐ எஸ் சீ
Comments