காலம் கடந்தாலும் பேசும் படங்கள் திருடப்பட்ட தன் இடங்களை பரிதாபமாக அது தேடி அலைகிறது..

மழை வெள்ளத்தை சபிக்காதீர்கள்.. திருடப்பட்ட தன் இடங்களை ஏரிகளையும், குளங்களையும் பரிதாபமாக அது தேடி அலைகிறது..-அலைன் மைதீன்

சென்னையில் கொடூர மழை !!! - பாலிமர் நியூஸ் ..
சென்னையில் பேய்மழை !!! - புதியதலைமுறை....
சென்னையில் தீவிர மழை !!! - சன் நியூஸ்...
சென்னையில் இரவு முழுவதும் மழை - தந்தி டிவி....
மழைக்காலத்தில் மசாலா பஜ்ஜி செய்வது எப்படி..?? ஜெயா நியூஸ் !!

"ஹலோ இப்போ நல்லா டவர் எடுக்குதே! எங்க இருக்கீங்க?"
"டவர் மேல தான் இருக்கேன். வீடு தண்ணிக்குள்ள இருக்கு!"

நான் சிறுவயதில் பள்ளியில் ஒரு கதை  படித்தேன் அது இன்று உண்மையானது
உறவுகளே சற்று படித்து பாருங்கள்
பின் பகிரலாம்,
கதை
         ஒரு பால்வியாபாரி தினமும் பாதிக்கு பாதி தண்ணீர் சேர்த்து விற்றுவந்தார்
     நிறைய பணமும் சம்பாதித்தார்
    மேலும் ஒரு மாடுவாங்க எண்ணி பால் விற்ற காசை எடுத்துக்கொண்டு சந்தைக்கு புறப்பட்டார்
   சந்தைக்கு வெகுதூரம் போக வேண்டும் களைப்பாகிவிட்டார்
களைப்பை போக்க ஒரு ஆற்று ஓரமாக மரத்தடியில் அமர்ந்தார்
களைப்பில் நம் அழகை இர சுந்தரைபோல் நன்கு தூங்கிவிட்டார் (காசு முடிச்சை தலைபகுதியில் வைத்துவிட்டு)
அருகே மரத்திலிருந்த குரங்கொன்று அந்த காசு முடிச்சியை தூக்கிகொண்டு அருகிலிருந்த மரத்தின்மீது ஏரிகொண்டது
விழித்து பார்த்த பால் வியாபாரி குறங்கு  பணபையை பார்த்து அதிர்ச்சியானான்.
பின் அந்த குரங்கிடம் கெஞ்சினான் கதரினான் அழுதான் இருதியில் குறங்கு அந்த பணமுடிச்சை அவிழ்த்து ஒரு காசை போட்டது
மகிழ்ச்சியானான்
பின் அடுத்த காசை அருகிலிருநத ஆற்றில் போட்டது மீண்டும் கதரினான் பின் தரையில் ஒரு காசு போட்டது
இப்படியே தரையிலும் தண்ணீரிலும் ஒவ்வொரு காசாபோட்டதாம்
பால்காரனுக்கு அப்போதுதான் புரிந்தது தண்ணீர் ஊற்றி சம்பாதித்த காசு தண்ணீரிலே போச்சு என்று
பின் அவன் தண்ணீர் சேர்தே பால் விற்கவில்லையாம்.
உண்மை
அதே போலதான் தமிழக அரசுக்கு தீபாவளி தண்ணீர் (மது) விற்பனையில் கிடைத்தது 401 கோடி இல்ல 500 கோடி அத்தனையும் (வெள்ள நிவாரனத்துக்காக) தண்ணிலயே செலவாகுது
இது நீதி கதையே யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!
 
                                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை நீர் ஒதுங்க முடியாத அவலநிலையை உருவாக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் எத்தனையோ ஏரி,கண்மாய்,குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் சுயநல கட்டிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் மழைநீர் ஒதுங்க இடம் இல்லாவிட்டால்  மழை நீர்  வேறு எங்கு போகும்?

வேறு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் அதாவது மழை நீர் தங்கும் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்குள் தான் மழை நீர் தங்கும்.

அதன் செய்திகள் தான் தற்போதைய ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.

தான் ஓய்வெடுக்கும் நீர் நிலைப்பகுதிகளை கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் மீதான கோபத்தில் இதுவரை 113 பேரை தமிழகத்தில் கொன்று விட்டது மழை.

இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லுவேன் என்றும் கொக்கரித்து வருகிறது.இந்த மழையின் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு இயந்திரங்கள்.

தனது முழு ஆளுமையை கொண்டு மழையின் வன்முறையிலிருந்து மக்களை ஓரளவு காப்பாற்றி விடலாம் என நினைக்கும் அரசு அடுத்த ஆண்டு மழையின் தாக்குதலை எப்படி எதிர் கொள்ள போகிறது?

மழையின் கோரப்பிடியிலிருந்து மக்களை முழுமையாகவும் நிரந்தரமாகவும் பாதுகாக்க வேண்டுமென்று அரசு இயந்திரங்கள் நினைக்குமானால்...உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து ஏரி,கண்மாய்,குளங்களை கண்டெடுத்து அவைகளை கையகப்படுத்த வேண்டும்.

அவ்வாறு கையப்படுத்தும் நீர் நிலைப்பகுதிகளை தூர் வாரி,ஆழப்படுத்தி மழை நீர் செல்வதற்கான வழிகளையும் சீர்படுத்தி வைத்தால்...அடுத்த ஆண்டின் மழை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தனது இருப்பிடம் சென்று அமைதியாய் உறங்கும். 

மக்களும் நிம்மதியாய் உறங்குவர்.இதை சிந்திக்க வேண்டியது அரசு மட்டுமல்ல,பொதுமக்களும் தான்.     (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

நல்ல பதிவு. இயற்கை திருப்பி அடித்தால தாங்க இயலாது என்பதை அரசும மக்களும உணர வேணடும,  

ஏனோ தானோ எனறு குப்பையைப் போட்டு சாக்கடையை அடைக்க வைத்தார்கள் இயற்கை சாக்கடையை வீட்டில கொண்டு கொட்டியது தான் நம் கண்டது நரகலுடன்
தென்றல் கமால் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு