இளம் பெண்களின் தடம் புரண்ட வாழ்க்கை!
இளம் பெண்களின் தடம் புரண்ட வாழ்க்கை!
சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் அன்னிய ஆடவர்களுடன் வழி தவறிப் போகின்ற காரியங்கள் அதிகறித்துள்ளது.
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது.
ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு அவர்களின் மானம் கப்பலேறுவது, அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை.வெள்ளம் தலைக்கு மேல் போன பின்புதான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
திருமணமானஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான் இது
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த இளைஞர். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை துரோகம் . மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது.
படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்லா பந்த பாசத்தினையும் மறந்து காதல் காமவைரசில் குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள்.
அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் வாட்ஸப் தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார்.
அடிப்படை கோளாறு:
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள்.
அனால் அந்தக் குழந்தைகள் பெரியவரானதுடன் தங்களுடைய குடும்ப கவ்ரவம் பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை. மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் மனமிக்க துணையாக எண்ணுகிறார்கள்.
இவைகளை தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்....இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர் ஆன், 5:1)
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன். பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தனது தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள்.
தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள். ஆனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அத்தனையும் மாறிவிட்டது
அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள்.
பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள்.
அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்... மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ)காரியங்களில் நிலைத்து விடமாட்டார்கள். (அல்குர் ஆன், 3:135)
சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல்போன் அதிக நேரம் உபயோகிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள்.
அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் மனதுபாதிக்கப்பட்டு கற்புபாதிக்கப் பட்டு வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினி லெப்டாப்குகுவாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் ட்டேபில் செல்போனில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது அதனை கவணிக்க தவரிவிடுகின்றார்கள்.
சிலர் பர்ஸ்னல் விசயத்தில் தலையிடக்கூடாது என கூறுகின்றார்கள். எது பர்ஸ்னல்
மானங்கெட்ட காரியங்கள் அருவருப்பான விசயங்கள் இவையெல்லாம் பர்ஸ்னலா?
பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு பல குடும்பங்களிலும் பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல்லொழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும். உலக கல்வியைவிட மானமும் ஒழுக்கமும் கவ்ரவமும் மார்க்கமும் முக்கியமானது.
பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த நாட்டில் ஆண்களுடன் பெண்கள் சகஜமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக்கூடாது மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப்படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
குழந்தைகள் பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா? ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்.
(நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அல்லாஹ் தெளிவாக விளக்குகிறான். (அல்குர் ஆன், 2 : 221)
அன்புடன்
MS.ரஹ்மத்துல்லாஹ்
நாச்சியார்கோவில்
Comments