கொள்ளையர்கள் குறி வைக்கும் மஞ்சி வீட்டு தெரு என்ற பசீரப்பா தெரு

மேலப்பாளையம் மக்களே உஷார்! உ‍ஷார்!! உஷார்!! என்ற இதனை வாட்ஸப்பில் நமக்கு அனுப்பியவர்கள் பஷீரப்பா தெருவைச் சார்ந்த இந்த இருவர்கள் தான்

 கீழே உள்ள மாதிரி தங்கத்தால் ஒரு சின்ன வீடு கட்டத்தான் ஆசை கபூர் கவிழ்த்து விட்டான் 

கப்பலில் இரும்பு வியாபாரம் செய்கிறோம். இதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறேன்.

ஒரு லடச ரூபாய் தந்தால் மாதந்தோறும் லாபக்காசு இருபதினாயிரம் தருவேன் என நமதூர் மக்களிடம் கபூர் என்ற ஏமாற்று பேர்வழி சுமார் 50 கோடிக்கும் மேல் மேல் சுருட்டி கொண்டு தலைமறைவாகி விட்டான்.

இவனிடம்  ஏழைகள் முதல் 7 வருடங்கள் மார்க்க கல்வி கற்ற( தவ்ஹீது?) ஆலிம்ஷாக்கள் வரை பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஏராளம்.

இதில் வீட்டினை விற்று இந்த பிராடு காரனிடம் பணம் கொடுத்தவர்களும் உண்டு.

வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தெரியாமல் நகைகளை விற்று இந்த பிராடு கபூரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் உண்டு.

பணம் பறி போய் 6 வது வருட நினைவஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,

மேலப்பாளையம் காஜா நாயகம் தெரு ( குண்டு தெரு) வை சேர்ந்த தண்டன் வீட்டை சேர்ந்த ஒருவர் லட்ச ரூபாய்க்கு மாதம் 4 ஆயிரம் தருவதாக கூறி பண வேட்டையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

கபூர் என்பவன் தன் பிராடு தொழிலை ஆரம்பிக்கும் போது,மஞ்சி வீட்டு தெரு என்ற பசீரப்பா தெருவில் தான் துவங்கினான்.

அதே போல் இந்த நபரும் இதே தெருவை மையமாக வைத்து தனது தொழிலை துவங்கியுள்ளதாக தெரிகிறது.

இயக்கங்கள்,அமைப்புகள் இது போண்ற ஆசாமிகளை கண்டறிந்து காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுங்கள்.

ஆகவே மக்களே ஏமாந்தது போதும்,இனியாவது உஷாராயிருங்கள்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு