கேள்வி கேட்போம் பதில் சொல்ல வாருங்கள் என்றால் வருவார்களா?
கேள்வி கேட்க வாருங்கள் என்றால் வருவார்கள். நாங்கள் கேள்வி கேட்போம் பதில் சொல்ல வாருங்கள் என்றால் வருவார்களா? வந்தார்கள், அவா்கள் யார்? வால் போஸ்ட்டா்கள் ஒட்டவில்லை. பிட் நோட்டீஸ்கள் வினியோகிக்கவில்லை. 29.11.12 வியாழன் அன்று நிகழ்ச்சி நடத்திய இடத்தில் மாலை 6 மணிக்கு மேல் அமைத்திருந்த ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தோம். இஷாவுக்குப் பின் 8 மணிக்கு மார்க்கம் சம்பந்தமாக நாங்கள் கேள்வி கேட்போம். நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல வாருங்கள் என்று அழைத்தோம். வந்தார்கள் பதில் சொன்னார்கள் அவா்கள்தான் சிறார்கள். கேள்வி -1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்னவா் யார்? இந்தக் கேள்விக்கு அரசியல் கட்சிகளிலுள்ள பெரியவா்களாக இருந்தால் அண்ணா சொன்னார் என்று சிலரும். கலைஞா் சொன்னார் என்று சிலரும். சொல்லி இருப்பார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பதைச் சொன்னால் தலைவன் அண்ணல் அவா் சொல்லிய சொல்லை எந்நாளும் மறந்தது இல்லை என்ற பாடலை பாடியும் காட்டி இருப்பார்கள். சிறுவா்களோ ஏழையி...