பிறருக்காக தேர்தல் வேலை செய்யலாம் அவர் மட்டும் போட்டி இடக் கூடாது என்ற நிலைபாடா?
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பா? என்பது பற்றிய விபரத்தை காணும் முன் இன்றைய வரலாறாக ஆகி விட்ட நேற்றைய செய்திகளை நினைவு கூறுவது அவசியமாக இருக்கிறது. எனவே அதனை முதலில் பார்ப்போம். ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து ஜவாஹிருல்லாஹ் அவர்களுடையது மட்டுமல்ல. சகோதரர் சம்சுல்லுஹா, பி.ஜே. ஆகியவர்களுடைய கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது. 1988இல் துபை வந்திருந்த அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் பாளையில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி சகோதரர் சம்சுல்லுஹா அவர்கள் மூலம் பி.ஜே.யிடம் கலந்த போது ஹராம் என்று கூறி விட்டார்கள். ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு, ஓட்டுப் போடுவது ஹராம் என்ற கொள்கை பி.ஜே.யின் அண்ணன் பி.எஸ். அலாவுதீன் உட்பட எஸ்.ஐ.எம்.(சிம்)முடன் தொடர்புடைய எல்லா மவுலவிகளிடமும் இருந்தது. 1995. ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என அருட்செல்வன் என்ற புனைப் பெயரில் ஜவாஹிருல்லாஹ் எழுதினார். 1996. அந்த ஜவாஹிருல்லாஹ் த.மு.மு.க துணைத் தலைவராக இருக்க பி.ஜே. த.மு.மு.க அமைப்பாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது தேர்தலை கண்டு...