இங்கேதான் படியே இல்லையே!!

படி இருந்தால்தானே படியில் பயணம் நொடியில் மரணம்? இங்கேதான் படியே இல்லையே!!

தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களில் கும்பகோணம் டெப்போ பஸ்கள் பெரும்பாலும் நன்றாக இருக்கின்றன. மகா மட்டமாக இருப்பது மதுரை டெப்போ பஸ்களே. சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, குமரி வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் தொலை தூர பஸ்களின் சீட்டுகள் மகா மட்டமாக உள்ளன. அதுவும் சாதாரண கட்டணங்கள் கிடையாது.

இது பற்றி 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 19,20களில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இஸ்லாமிய மாநாட்டு தீர்மானங்களில் கூறப்பட்டிருக்கிறது. தவ்ஹீதை பிழைப்பாக ஆக்கி கொண்டவர்கள் கையில் தீர்மானம் போட்ட அமைப்பு சிக்கிக் கொண்டதால் இந்த தீர்மானங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுவிட்டன.

ராமேஸ்வரத்தில் பாம்பனில் இருந்து இயக்கப்படும் ஒரு அரசுப் பேருந்தில் படிக்கட்டே இல்லை.
படியில் பயணம், நொடியில் மரணம் என்று அரசுப் பேருந்துகளில் எழுதும் எதுகை-மோனை வசனங்களுக்கு பஞ்சமில்லை.

ஆனால், இந்த பஸ்சில் பின்பக்க படிக்கட்டே உடைந்து விழுந்துவிட்ட நிலையில் முன் பக்க வாசல் வழியாகவே பயணிகள் ஏறி, இறங்க வேண்டிய அவலத்தில் உள்ளனர்.

பாம்பன்-வேர்க்கோடு இடையே ரொம்ப காலமாக ஓடும் இந்த டப்பா பேருந்தை மாற்ற வேண்டும், அட்லீஸ்ட் படிகட்டையாவது மாட்ட வேண்டும் என கோருகின்றனர் இப் பகுதியினர்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு