மோடியும் முஸ்லிம்கள் கண்ட மோடியின் முன்னோர்களும்.

திருநெல்வேலி டவுண் சாலியா தெரு மஹ்மூதிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் 2.11.07 வெள்ளியன்று ஆற்றப்பட்ட ஜுமுஆ உரையின் சுருக்கமான தொகுப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 2002இல் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டதா, மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்ததா என்றால் இல்லை நிச்சயமாக இல்லை. 2002இல் குஜராத்தில் மோதல் ஏற்படவுமில்லை. அதனால் கலவரம் நடக்கவுமில்லை. 2 அணிகள் மோதிக் கொண்டால்தான் அதற்குப் பெயர் கலவரம், மோதல் என்பதாகும். 2002இல் குஜராத்தில் எதுவும் தானாக நடக்கவில்லை. நரேந்திர மோடியால் நடத்தப்பட்டது. நரேந்திர மோடியின் சதி திட்டப்படி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்தான் இது. இதை முஸ்லிம்களே மறந்து 2002இல் குஜராத்தில் கலவரம் நடந்தபோது என்று சொல்லிக் கொண்டும் போஸ்ட்டர்களாக ஒட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆக இதிலும் நரேந்திர மோடி வென்று விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு இந்துக்களுக்கும் முதலில் புரிய வைக்க வேண்டும்.

எனவே 2002இல் குஜராத்தில் கலவரம் நடந்த போது மூவாயிரம் முஸ்லிம்களை கொன்ற நரேந்திர மோடி என்று எழுதவோ பேசவோ கூடாது. சதி திட்டம் தீட்டி இந்துக்களையும் முஸ்லிம்களையும் கொன்ற நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடு என்றே போராட வேண்டும். முஸ்லிம்களை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டிய நரேந்திர மோடி முதலில் கொலை செய்தது இந்துக்களைத்தான். அவனை நம்பியுள்ள இந்துக்களை, நம்பி வந்த இந்துக்களை, கர சேவைக்கு என வந்த இந்துக்களை, இந்து மதப் பணி என நம்பி வந்த இந்துக்களைத்தான் ரயில் பெட்டியினுள் பூட்டி வைத்து உயிரோடு தீ வைத்துக் கொளுத்திக் கொன்றான். இதைத்தான் நாம் ஒவ்வொரு இந்துக்களுக்கும் முதலில் புரிய வைக்க வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் புதிய ஒன்று அல்ல.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது முதல்வர் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள அவனே அவனது மாநிலத்தில் கலவரம் என்ற பெயரால் தாக்குதல்களை நடத்தியுள்ளான். முஸ்லிம்களை கொன்று குவித்து, தீ இட்டுக் கொழுத்தி, ஊரை விட்டு வெளியேற்றியுள்ளான். ஆட்சியாளர்கள் தங்கள் பட்டம், பதவி, புகழை தக்க வைத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களை கொன்று குவிப்பதும், தீ இட்டுக் கொழுத்துவதும், ஊரை விட்டு வெளியேற்றுவதும் இஸ்லாமிய வரலாற்றில் புதிய ஒன்று அல்ல. இறைத் தூதர்களான நபிமார்களும் நல்லடியார்களும் சந்தித்தவைகள்தான்.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக நெருப்பில் போட்டார்கள்.

நம்ரூத் எனும் கொடியவன் ஆட்சியின் போது நான் முஸ்லிம் என்று சொன்னவர் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள். எனவே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் கொள்கைக்கு எதிரான நம்ரூத் எனும் கொடியவன் கட்சியை அதாவது கொள்கையைச் சார்ந்த பிரமுகர்கள் ஆலோசனை சொன்னார்கள். அவரை( நபி இப்றாஹீம் (அலை) அவர்களை) நெருப்பிலிட்டு எரியுங்கள். தீயில் பொசுக்கி விடுங்கள். பெரியதொரு நெருப்புக் கிடங்கை கட்டி எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள் என்றெல்லாம் ஆலோசனை கூறினார்கள். இவற்றை திரு குர்ஆனில் 21:68, 29:24, 37:97 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான். அது மட்டுமல்ல அந்த பிரமுகர்கள் ஆலோசனைப்படி நபி இப்றாஹீம் (அலை) அவர்களை முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக நெருப்பில் போட்டார்கள் என்பதையும் 21:69, 29:24 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான்.

விறகு கட்டைகள் போல் எரித்து பொசுக்கியுள்ளான் நரேந்திர மோடி.

இதே மாதிரிதான் நரேந்திர மோடி என்ற கொடியவன் ஆட்சியில் அவனது பி.ஜே.பி. கட்சியையும் கொள்கையைச் சார்ந்த பிரமுகர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஆலோசனை சொல்லி உள்ளார்கள். அந்த ஆலோசனைப்படி குஜராத்தில் உள்ள அப்பாவிகளை முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீயிலிட்டு விறகு கட்டைகள் போல் எரித்து பொசுக்கியுள்ளான் நரேந்திர மோடி.

கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள் என்று கொடிய ஆட்சியாளன் சொன்னான்.

பிர்அவ்ன் என்ற கொடியவன் அவனது ஆட்சியில் நபி மூஸா(அலை) அவர்களையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்க மாட்டேன். அவர்களது ஆண் மக்களை கொல்வோம் என்றான் என்பதை அல்குர்ஆன் 7:127,141 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. பிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகிய மூவரும் சேர்ந்து நபி மூஸா(அலை) அவர்களை நம்பிய சமுதாயத்தவரின் ஆண் மக்களை கொன்று விடுங்கள் என்றார்கள் என்பதை அல்குர்ஆன் 40:24,25 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. மூஸாவை கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள் என்று கொடிய ஆட்சியாளன் சொன்னான் என்பதை அல்குர்ஆன் 40:26 ஆவது வசனம் கூறுகின்றது. அதாவது மூஸாவை நானே கொல்வேன் என கொக்கரித்துள்ளான் கொடிய ஆட்சியாளன் பிர்அவ்ன். நம்ரூத் எனும் கொடியவன் ஆட்சியில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களை கொன்று விடுங்கள் என்று கூறியதை அல்குர்ஆன் 29:24ஆவது வசனம் சொல்லிக் காட்டுகின்றது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டுள்ளார்கள்.

இஸ்ரவேலர்கள் நியாயமின்றி நபிமார்களை அநியாயமாக கொன்றார்கள் என்பதை அல்குர்ஆன் 2:61,87,91, 3:21,112,181,183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்ய மக்கா காபிர்கள் சூழ்ச்சி செய்தனர் என்பதை அல்குர்ஆன் 8:30 ஆவது வசனம் கூறுகின்றது. யூதப் பெண்மணி உணவில் விஷம் வைத்து இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை கொலை செய்ய முயற்சித்ததையும் யூதர்கள் கொலை செய்ய முயற்சித்ததையும் ஹதீஸ்களில் காண்கிறோம். இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது சமுதாயமும். முன்னர் வந்த நபிமார்களும் அவர்களது சமுதாயமும் கொடிய ஆட்சியாளர்களாலும் அவர்களது ஆட்களாலும் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே கொல்லப்பட்டுள்ளார்கள். கொலை முயற்சிகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதே மாதிரிதான் நரேந்திர மோடி என்ற கொடியவன் ஆட்சியில் அவனாலும் அவனது ஆட்களாலும் குஜராத்தில் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம்களின் கை, கால் உறுப்புகளை வெட்டி சேதப்படுத்தினான்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களைப் பார்த்து உங்களை மாறு கால் மாறு கை வெட்டுவேன். சிலுவையில் அறைவேன் என்று எகிப்தை ஆண்ட பிர்அவ்ன் என்ற கொடிய ஆட்சியாளன் சொன்னான் என்பதை அல்குர்ஆன் 7:124, 26:49 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. உங்களை மாறு கால் மாறு கை வெட்டி, பேரீட்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன் என்றும் கொடிய ஆட்சியாளன் பிர்அவ்ன் சொன்னான் என்பதை அல்குர்ஆன் 20:71 ஆவது வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை அவர்களைப் பார்த்து நீங்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்று ஆட்சியாளன் பிர்அவ்ன் சொல்லிக் கொண்டிருந்தான் என்பதை அல்குர்ஆன் 7:114, 26:42 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்களாக ஆன ஒரே காரணத்துக்காக மாறு கால் மாறு கை வெட்டி அவர்களது உறுப்புகளை சேதப்படுத்துவேன் என்றான் கொடிய ஆட்சியாளன் பிர்அவ்ன். இதே போல்தான் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக நரேந்திர மோடி என்ற கொடிய ஆட்சியாளன் குஜராத்தில் முஸ்லிம்களின் கை, கால் உறுப்புகளை வெட்டி சேதப்படுத்தினான்.

ஊரை விட்டும் வெளியேற்றுங்கள் அவர்கள் சுத்தமான மனிதர்களாக இருக்கிறார்கள்.

லூத்(அலை) அவர்கள் காலத்திலிருந்த வழி கெட்டவர்கள் லூத்(அலை) அவர்களையும் அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும் பார்த்து, "இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள். இவர்கள் தூய்மையான மக்களாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்" இதை அல்குர்ஆன் 7:82,83 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. லூத்தே நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவர் என்று கூறினார்கள். இதை அல்குர்ஆன் 26:167 ஆவது வசனம் கூறுகின்றது. லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள் அவர்கள் சுத்தமான மனிதர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார்கள் இதை அல்குர்ஆன் 27:56 ஆவது வசனம் கூறுகின்றது.

அசிங்கம் பிடித்த மானங்கெட்டவர்களால் வெளியேற்றப்பட்டார்கள்.

பரிசுத்தமானவர்கள் மிகத் தூய்மையானவர்கள் என்பதற்காக லூத்(அலை) அவர்களும் அவரது குடும்பத்தாரும் அன்றைய அசிங்கம் பிடித்த மானங்கெட்டவர்களால் வெளியேற்றப்பட்டார்கள். அதே மாதிரி அந்நிய பெண்களை கற்பழித்தவர்கள். அதற்கு சாமியை சாட்சியாக ஆக்கியவர்கள். பெருமையாக மனைவியை அருகில் வைத்துக் கொண்டே சொல்லிக் காட்டியவர்கள். ஆகிய சுரேஷ; ரிச்சர்ட் என்ற அசிங்கம் பிடித்த மானங்கெட்டவர்களால் குஜராத் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை ஊரை விட்டு வெளியேற்ற மக்கா காபிர்கள் சூழ்ச்சி செய்தனர் என்பதை அல்குர்ஆன் 8:30 ஆவது வசனம் கூறுகின்றது. திட்டமிட்டார்கள் என்பதை 9:13 ஆவது வசனமும் அதற்கான முயற்சிகளை செய்தார்கள் என்பதை 17:76 ஆவது வசனமும் கூறுகின்றது. இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் ஊரை விட்டு வெளியேற்றினார்கள் என்பதை அல்குர்ஆன். 9:40, 47:13,60:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் அவர்களது வீடுகளையும் சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதை அல்குர்ஆன் 59:8 ஆவது வசனம் கூறுகின்றது. எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காகவே அவர்கள் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்று அல்குர்ஆன் 22:40 ஆவது வசனம் கூறுகின்றது. இதே மாதிரிதான் திட்டமிட்டு, சூழ்ச்சி செய்து, அதற்கான முயற்சிகளை செய்து குஜராத் முஸ்லிம்கள் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

டெஹல்கா மூலம் வெளிப்படுத்தியவன் யார்?

நீங்கள் ஒரு மனிதனை கொலை செய்தீர்கள். அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன். இது அல்குர்ஆன் 2:72 ஆவது வசனம் ஆகும். இது மூஸா (அலை) அவர்கள் காலத்தில் நடந்ததை சொன்னாலும் சிந்தித்துப் பார்த்தால் குஜராத்துக்கும் பொருந்தும். குஜராத் கொலைகள் பற்றி டெஹல்கா வெளிப்படுத்தி இருக்கிறது. டெஹல்கா மூலம் வெளிப்படுத்தியவன் யார்? அல்லாஹ்தான் என்பதற்கு ஆதாரமாகத்தான் அல்குர்ஆனின் 2:72 ஆவது வசனம் இருக்கிறது.

இன்றும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

'{ஐபே உம்மையும் உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்கு திரும்ப வேண்டும் என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்டவர்கள் கூறினார்கள். இதை அல்குர்ஆன் 7:88 ஆவது வசனம் கூறுகின்றது. ஓவ்வொரு சமுதாயத்திலும் உள்ள "காபிர்கள் அவர்களிடம் வந்த இறைத் தூதர்களிடம், உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். இதை அல்குர்ஆன் 14:13 ஆவது வசனம் கூறுகின்றது. இந்த வசனங்கள் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு இதே நிலையை இதே வசனங்களை இன்றும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கொடிய ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கையையும் செய்துள்ளான்.

எகிப்தை ஆண்ட கொடிய ஆட்சியாளன் பிர்அவ்னைப் பார்த்து "இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. (இந்த) பூமியில் (நீங்கள்தான்) மிகைத்து (மெஜாரிட்டியாக) இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை வந்து விடுமானால் அதிலிருந்து காப்பாற்றுபவர் யார்? என்று நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர் கூறினார். இதை 40:29 ஆவது வசனம் கூறுகின்றது. பிர்அவ்னே நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். இதை அல்குர்ஆன் 17:102 ஆவது வசனம் கூறுகின்றது. இந்த வசனங்களின் மூலம் முன்னதாகவே இப்படியெல்லாம் கொடிய ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கையையும் செய்துள்ளான் என்பதை அறிகிறோம். இதே மாதிரி மோடி என்ற கொடிய ஆட்சியாளனுக்கும் முஸ்லிம் அமைப்புகள் மூலம் அல்லாஹ் எச்சரிக்கை செய்தான்.

உயரமாக கட்டி இருந்த மாட மாளிகைகளையும் அல்லாஹ் தரை மட்டமாக ஆக்கி விட்டான்.

கொடிய ஆட்சியாளன் பிர்அவ்னின் சமுதாயம் படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் விவசாயப் பலன்களை குறைத்தும் அல்லாஹ் தண்டித்தான் என்பதை அல்குர்ஆன் 7:130ஆவது வசனம் கூறுகிறது. பிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக கட்டி இருந்த மாட மாளிகைகளையும் அல்லாஹ் தரை மட்டமாக ஆக்கி விட்டான் என்பதை அல்குர்ஆன் 7:137ஆவது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான். இதே மாதிரிதான் பாபரி மஸ்ஜித் இடிக்க 1987இல் இருந்தே பயிற்சி எடுத்த குஜராத்தில் 2001 ஆம் ஆண்டு; பூகம்பம் ஏற்பட்டது. உயரமாக கட்டி இருந்த மாட மாளிகைகள் தரை மட்டமாக ஆகின. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பல்லாயிரக் கணக்கில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த இந்துக்களுக்கு முஸ்லிம்கள்தான் பல முறை ரத்தம் கொடுத்து உதவினார்கள். அதன் பிறகுதான் 2002இல் மூவாயிரம் முஸ்லிம்களை மோடிகள் கொன்று குவித்தார்கள்.

அதே கதி நரேந்திர மோடிகளுக்கு ஏற்படும் என்ற நமது ஈமான் உறுதியானது.

இறைத் தூதரின் முன் எச்சரிக்கையையும் படிப்பினை பெறுவதற்காக இறைவன் வழங்கிய தண்டனைகளையும் கண்டு கொள்ளாத கொடிய ஆட்சியாளன் பிர்அவ்ன் திருந்தவே இல்லை. எனவே அவனையும் அவனது கூட்டத்தாரையும் அல்லாஹ் கடலைப் பிளந்து அதில் மூழ்கடித்தான். இதை அல்குர்ஆன் 2:50, 10:90, 20:78, 44:24 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிம்கள் கண்ட மோடியின் முன்னோர்களான பிர்அவ்னுக்கும் அவனது கூட்டத்தாருக்கும் ஏற்பட்ட அதே கதி நரேந்திர மோடிகளுக்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படும். இந்த நமது நம்பிக்கை (ஈமான்) உறுதியானது. நமது இந்த நம்பிக்கை வீண் போகாது. அதே நேரத்தில் மோடியின் முன்னோர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்களின் முன்னோர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளைகளைப் பாருங்கள். அதாவது நரேந்திர மோடிகளுக்கு நமது மார்க்கத்தின் தீர்ப்பு என்ன? என்பதைப் பாருங்கள்.

இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்.

பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. என்று அல் குர்ஆன் 5:33 ஆவது வசனத்திலும், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்தி பழிவாங்குதல் என்று அல் குர்ஆன் 5:45 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

என் கவுண்டர் பண்ணுங்கள்.

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள். (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - (இன்றைய பாஷையில் என் கவுண்டர் பண்ணுங்கள்.) என்று அல் குர்ஆன் 4:89 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்.

(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; என்று அல் குர்ஆன் 2:191ஆவது வசனம் கூறுகிறது. முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்தால் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இது போன்ற ஆயத்துகளில் உள்ள கட்டளைப்படி தண்டனைகளை நிச்சயமாக நிறைவேற்றி இருப்போம். குஜராத்தில் முஸ்லிம்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றி இருப்போம்.. குஜராத்தில் முஸ்லிம்களை வெட்டிய அவர்களை எங்கே காணக்கிடைப்பினும் வெட்டி இருப்போம். முஸ்லிம்களாகிய நாம் ஆட்சியில் இல்லாததால்தான் போர் செய்யாமல் போராடி வருகிறோம். த.மு.மு.க. போராட்டங்களை அறிவித்துள்ளது. இதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இன்று நெல்லை மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் கடையநல்லூர், ஏர்வாடி, மேலப்பாளையம் என த.மு.மு.க.வின் போராட்டங்கள் நடைபெற உள்ளன. இந்திய ஆட்சியாளர்கள் இதனை உணர்ந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

ஆட்சி பொறுப்புகளை புறக்கணிக்கக் கூடாது.

இன்னும் குறிப்பாக குஜராத் விஷயத்தில் ஜிஹாது கடமையாகி விட்டது என்று சொல்லக் கூடியவர்கள் சிந்தித்து உணர வேண்டும். இந்த ஆயத்துகள் பொதுவான கட்டளைகள் அல்ல. பொது மக்களை நோக்கி இடப்பட்ட கட்டளைகள் அல்ல. ஆட்சியாளர்களை நோக்கியே சொல்லப்பட்டுள்ள சட்டங்கள். இந்த ஆயத்துக்களையே நன்கு சிந்தித்தாலும், முன் பின் வசனங்களைப் பார்த்தாலும் தெளிவு கிடைக்கும். ஆட்சியில் இல்லாதவர்கள் பொது மக்கள் எண்ணினால் தண்டனை எனும் பெயரால் மாறுகால் மாறு கை வாங்கலாம், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் என பழி வாங்கலாம். போலீஸ் பிடிக்க வந்தால் தடுக்க முடியுமா? ஆட்சியில் இல்லாதவர்கள் தண்டனை வழங்கியதற்காக ஆட்சியில் உள்ளவர்கள் வழங்கும் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா? இதையே ஆட்சியாளர்கள் தண்டனையாக வழங்கினால் யார்தான் கேட்க முடியும்? தடுக்க முடியும்? எனவே முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக வர வேண்டும். வருவதற்கு உரிய முயற்சிகளை செய்ய வேண்டும். எவனோ ஒரு மடையன் சொல்லும் முட்டாள்தானமான சொல்லை நம்பி ஆட்சி பொறுப்புகளை புறக்கணிக்கக் கூடாது.

நாம் சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றங்களுக்கும் செல்ல வேண்டும்.

இஸ்லாமிய சிந்தனையற்றவர்களையும் சமுதாய உணர்வற்றவர்களையும் முஸ்லிம் பெயர் தாங்கிகளையும் நம் உயிரை பணயம் வைத்து சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றங்களுக்கும் அனுப்பினோம். அனுப்பிய நாமோ நடு ரோட்டில் நின்று போராடுகிறோம். நமது உழைப்பில் சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றங்களுக்கும் சென்ற எவனாவது எந்த முஸ்லிமாவது மோடி விவகாரத்தை மன்றங்களில் பேசினானா? பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட உடன் 15 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகள் ஆகி விட்டது எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த 15 ஆண்டில் 22 முறை இந்த கமிஷன் நீடிக்கப்பட்டுள்ளது. 17 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது கமிஷனின் தலைவர் லிபரான் அமெரிக்காவில் இருக்கிறார். மன்றங்களிலுள்ள எவனாவது எந்த முஸ்லிமாவது இதுவரைக் கேட்டானா? எனவே நாம் சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றங்களுக்கும் செல்ல வேண்டும்.

தண்டனை சட்டங்களை நிறைவேற்றும் கடமை ஆட்சியாளர்களுக்கே உரியது.

மேலும், கைதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; (4:89) என்ற கட்டளைப்படி பொது மக்கள் அவர்களை கைதியாகப் பிடித்துக் கொள்ள முடியுமா? உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து வெளியேற்றுங்கள் (2:191) என்ற கட்டளைப்படி பொது மக்கள் அவர்களை வெளியேற்ற முடியுமா? அல்லது நாடு கடத்தப்படுதல்; (5:33) என்ற கட்டளைப்படி நாடு கடத்த முடியுமா? எனவே இந்த ஆயத்துக்களே தண்டனை சட்டங்களை நிறைவேற்றும் கடமை ஆட்சியாளர்களுக்கே உரியது என்பதற்கு ஆதாரமாக உள்ளன. எனவே ஜிஹாது எனும் பெயரால் சட்டத்தை கையில் எடுக்காமல் நரேந்திர மோடிகளுக்கு தண்டனை வழங்குமாறு ஆட்சியாளர்களை வலியுறுத்தி போராடுவோம். வரக் கூடிய தேர்தல்கள் மூலம் இனி நாமே சட்டமன்றங்களுக்கும் பாராளுமன்றங்களுக்கும் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நமது தலைமையை வலியுறுத்துவோம்.

நம்பிகைக் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

வலா தஹினூவ் வலா தஹ்ஸனூவ் வஅன்துமுல் அஃலவ்ன இன் குன்தும் முஃமினீன். என்ற அல் குர்ஆனின் 3:139 ஆவதான இந்த ஆயத்தை அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். குறிப்பாக த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இந்த ஆயத்தை படித்து விட்டுத்தான் அவரது உரையை துவங்குவார். இந்த ஆயத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா? "தளர்ந்து விடாதீர்கள், (அதாவது தைரியத்தை இழந்து விடாதீர்கள்) கவலைப்படாதீர்கள், (ஈமான் எனும்) நம்பிகைக் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்" இதுதான் அந்த ஆயத்தின் பொருள். எனவே தளர்ந்து விடாமல் எல்லா வகையிலும் போராடுவோம். வெற்றி பெறுவோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.