بسم الله الرحمن الرحيم = 786 என்பது எப்படி வந்தது?
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதற்கு பதிலாக 786 என்ற நம்பரை எழுதி வருகிறார்கள். இப்படி எழுதக் கூடாது என்பதற்கு குர்ஆனில் உள்ள ஆதாரங்களையும் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் எத்தனையோ அறிஞர்கள் விளக்கி விட்டார்கள்.
அதை புரியாமல் 786 போடக் கூடியவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த 786 எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்பதையாவது அவர்கள் விளங்கி இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. எனவே இந்த 786 ஐ யார் உருவாக்கினார்கள்? எப்படி உருவாக்கினார்கள் என்பதை விளக்கினாலாவது புரிந்து விளங்கி விலகுவார்கள் விலக்குவார்கள் இன்ஷhஅல்லாஹ். இந்த எதிர் பார்ப்புடன் இதனை வெளியிடுகிறோம்.
இந்த நம்பர்களை உருவாக்கியவர்கள் யார்?
786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லி விளக்கும் விதமாகவும் சமீபத்தில் ஒரு மெயில் வந்தது. அதில் நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு 4. என்று சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கி இருந்தார். இறைவனோ, இறைவனின் தூதரோ அங்கீகரிக்காத இந்த நம்பர்களை உருவாக்கியவர்கள் யார் யூதர்கள்.
யூத, கிறிஸ்தவர்களின் தாய் மொழியும் அரபிதான்.
இந்த நம்பர்களை யூதர்கள்தான் உருவாக்கினார்கள் என்று சொன்னால் யூதர்களுக்கு அரபி தெரியுமா? என தமிழக முஸ்லிம்கள் ஆச்சரியப்படுவார்கள். காரணம் அரபிகள் என்றால் முஸ்லிம்களாக மட்டுமே இருப்பார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கா காபிர்களின் தாய் மொழியும் அரபிதான். மக்கா, மதீனாவை சூழ்ந்து வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் தாய் மொழியும் அரபிதான். இதை பலர் தங்களது பிரச்சாரங்களில் கூற கேட்டு இருக்கிறார்கள். ஆனால் சிந்தித்து விளங்கவில்லை. அதனால்தான் அன்றும் இன்றும் அரபுநாடுகளிலுள்ள யூத, கிறிஸ்தவர்களின் தாய் மொழியும் அரபிதான் என்றால் ஆச்சரியப்படுகிறார்கள்.
பகவத் கீதை கூட அரபியில் இருக்கிறது.
அரபுநாடுகளிலுள்ள யூத, கிறிஸ்தவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என முகமன் கூறுவார்கள். சுகம் விசாரிக்கும் வண்ணம் கைப ஹாலக் என கேட்டால் அல்ஹம்துலில்லாஹ் என்பார்கள். அவர்களில் அப்துல்லாஹ் என்ற பெயருடையவர்களும் இருக்கிறார்கள். குர்ஆன் அரபி மொழியில் இருப்பது போல் அரபு நாட்டு கிறிஸ்தவர்களின் பைபிலும் அரபியில் இருக்கிறது.
இதை அரபக வாழ் தமிழ் மக்களில் லைபரரி சென்று வருபவர்கள் அறிவார்கள். ஏன் பகவத் கீதை கூட அரபியில் இருக்கிறது. 561 பக்க நூலான அது பி.டி.எப்.பைலாக நம்மிடமே இருக்கிறது. பல மதத்தவர்களின் மொழியாக தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என எல்லா மொழிகளும் இருப்பது போல்தான் அரபியும் மொழியும் இருக்கிறது.
யூதர்கள் கொடுத்துள்ள நம்பரை பாருங்கள்.
அரபியை தாய் மொழியாகக் கொண்ட யூதர்கள் ஒவ்வொரு அரபி எழுத்துக்கும் ஒவ்வொரு நம்பரை அமைத்துள்ளார்கள். ا அலிப் முதல் ى ய வரை உள்ள அரபி எழுத்துகளுக்கு யூதர்கள் கொடுத்துள்ள நம்பரை பாருங்கள்.
என குழப்பமாக இருக்கிறது அல்லவா. இதற்குப் பெயர்தான் அப்ஜத் கணக்கு என்பார்கள்.
அப்ஜத் கணக்கு என யூதர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.
மண்டைக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத இந்தக் கணக்கை உருவாக்க அப்ஜத், ஹவ்வஸ்,ஹுத்தீ, கலிமன்,ஸஅபஸ், கறஷத், தகிர், ழள்ளஃக். என வார்த்தைகளை அரபியை தாய் மொழியாகக் கொண்ட யூதர்கள் உருவாக்கி உள்ளார்கள்.
ا அலிப் முதல் ى ய வரை உள்ள அரபி எழுத்துகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் திரும்ப வராதவாறு உருவாக்கி உள்ளார்கள். இந்த அர்த்த மற்ற வார்த்தைகளின் முதல் வார்த்தையாக اَبْجهٌ அப்ஜத் என்பது உள்ளது. எனவே இதற்கு அப்ஜத் கணக்கு என யூதர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.
யூதர்களின் இந்த கணக்கை நமது பகுதிகளில் 'அலிப், பே' பாட நூலில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். அதாவது மக்களால் 'அலிப், பே' குர்ஆன், எஸ்ஸர்னல் குர்ஆன் என சொல்லப்படும் நூலின் முடிவில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக காயிதா பக்தாதி என்ற நூலின் 24ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றிருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இத்துடன் இணைத்துள்ளோம்.
ஆரம்ப பாட நூலிலா? 'அலிப், பே' பாட நூலிலேயா?
ஆரம்ப பாடம் படித்தவர்கள், படித்து கொடுக்கிறவர்கள், ஆலீம்கள் ஆக யாராக இருந்தாலும் சரி. ஆரம்ப பாட நூலில் இடம் பெற்றுள்ள இதை கவனத்தில் கொள்ளவே இல்லை. காரணம் இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. எனவே இதை யாரும் கண்டு கொள்ளவதே இல்லை.
இதைப் பற்றி அறிந்தவர்கள் சொன்ன பிறகுதான் ஆரம்ப பாட நூலிலா? 'அலிப், பே' பாட நூலிலேயா? இஸ்லாத்தில் இல்லாத இதையா? இடம் பெறச் செய்திருக்கிறார்கள். என வருத்தத்துடன் கேட்கிறார்கள். நாம் படித்தபொழுதும் படித்துக் கொடுத்தபொழுதும் இதை கவனிக்கவே இல்லையே என ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
786 வருவதாக யூதர்கள் கணக்கு செய்துள்ளார்கள்.
இஸ்லாத்தில் இல்லாத பால் கிதாபு யூதர்கள் எழுதியதுதான். யூதர்களின் அந்த பால் கிதாபை வைத்து தல்ஸமாத் எனும் ஜோசிய தொழில் செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் யூதர்களின் இந்த அப்ஜத் கணக்கை பயன்படுத்தி ஜோசியம் சொல்லி வருகிறார்கள். இந்த அப்ஜத் கணக்குபடிதான் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதற்கு 786 வருவதாக யூதர்கள் கணக்கு செய்துள்ளார்கள்.
ஹரே கிருஷ்ணா என்பதற்கும் 786தான் வருகிறது.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் بسم الله الرحمن الرحيم என்பதில் உள்ள 'பே' 2, 'ஸீம்' 60, 'மீம்'40, 'லாம்' 30, 'ஹே' 5, 'றே' 200, 'ஃஹே' 8, 'மீம்' 40, 'நூன்' 50, 'றே' 200, 'ஃஹே' 8, 'ய' 10, 'மீம்' 40, இவற்றைக் கூட்டினால் 693 தான் வரும். பிஸ்மிக்கு அடுத்து ல்லாவுக்கு முன்பாக இடையில் உள்ள அலிபுக்கு 1. ல்லாவில் இரண்டாவது லாமுக்கு 30. ஹிக்கும் ர்க்கும் இடையில் உள்ள அலிபுக்கு 1. லாமுக்கு30. னிர்றஹீமில் னிக்கும் ர்க்கும் இடையில் உள்ள அலிபுக்கு 1. லாமுக்கு30. ஆக786 என கணக்கு செய்துள்ளார்கள். யூதர்களின் இந்தக் கணக்குபடி ஹரே கிருஷ்ணா என்பதற்கும் 786தான் வருகிறது. இஸ்லாத்தில் இல்லாத 786 பற்றி இன்னுமுள்ள விபரங்களை அறிய கீழ் காணும் இஸ்லாமிய சைட்டுகளை பாருங்கள்.
786 என்றால் என்ன?
786 ஓர் விளக்கம். எஸ்.எம். மீரான் ஆலீம் மதுக்கூர்.
786
இஸ்லாத்தில் இல்லாத 786 ஐ முஸ்லிம்கள் பயன்படுத்தியதால் வந்துள்ள விபரீதங்களை பாருங்கள்.
786 " அல்லாவின் தொலைபேசி எண்?
ஆகஸ்ட்7, 2006- 786என்ற அந்த மந்திர எண்- இந்தப்புது 2000ம் ஆண்டின் ஆறாவது வருஷம், 7வது நாள் எட்டாவது மாசம் - பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு இது மிகவும் முக்கியநாள் என்பதோடு, வானசாஸ்திர, கணித, மற்றும் சரித்திர அடிப்படையிலும் மிகவும் அரிதான ஒன்று. இந்த மாதிரியான இணைப்பு ஒரு நூற்றாண்டிற்குப்பிறகு இப்போதுதான் திரும்புகிறது.
இது போன்ற அரிதான அடுத்த இணைப்பிற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதிருக்கும். 786 என்ற இந்த எண் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டு வார்த்தையான Bismillah'r Rahmanai'r Rahim (நன்மைகள் தருபவரும் கருணை வெள்ளமுமான அல்லாவின் பெயரால்) என்பதன் எண்ணிக்கை அளவு (geometrical value) எனப்படுகிறது.
நாம் பிள்ளையார் சுழி போடுவதுபோல, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லீமும் திருமணப் பத்திரிக்கையிலோ அல்லது எழுதும் கடிதங்களிலோ 786 என்று எழுதிவிட்டுத்தான் பத்திரிகை அல்லது கடிதங்களைத் துவங்குகிறார்கள். http://www.nilacharal.com/tamil/current/tamil_news_273.asp
குறிப்பாக 786 என்ற எண் அல்லாவின் போன் நம்பரா? பரிசுத்த ஆவி இட்லியை அவிக்குமா? இந்து என்றால் திருடர்கள் என்று எல்லா மதத்தினரையும் இழிவுபடுத்தியிருந்தனர்
Comments