பாபரி மஸ்ஜிதும் பைத்துல் முகத்திஸும்.

ஆக்கம்:- பெரம்பலூர் மாவட்டம் நாஸர் அலி கான்

பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ஆறாத வடுவாக இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் பதிந்து விட்டது. அந்த டிசம்பர் 6. ஆம் மறக்கத்தான் முடியுமா? அந்த நாளை? அவர்கள் தகர்த்தது பள்ளிவாசலை மட்டுமல்ல. மதச் சார்பற்ற ஜனநாயகத்தையும் இருபது கோடி முஸ்லிம்களின் உள்ளங்களையும்தான்.

எவ்வளவு பெரிய அநியாயம்., ஆன்மீகத்தின் பெயரால் செய்யப்படும் போது மட்டும் நியாயமாகி விடுமா? பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும். அதைத் தொடர்ந்து பல உயிர்கள் பலியானதும் சட்ட ரீதியாக தவறு என இந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு ஆய்வாளர்களும் அறிஞர்களும் கூறி இருப்பதை விட அதிகமாக நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை.

நம்பிக்கையே ஆதாரம்.

வேண்டுமானால் விளங்குவதற்காக சில உதாரணங்களைக் கூறலாம். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் அது இந்துக்களின் இடம்தான் என்ற நம்பிக்கையே ஆதாரம் என அவர்களே கூறுகின்றனர்.

சென்னையில் மாநகராட்சி இயங்கி வரும் ரிப்பன் பில்டிங் இன்றும் அதே பெயரால் பள்ளிக்கூட பாட புத்தகங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ரிப்பன் பிரபுவால் கட்டப்பட்டதுதான் அந்தக் கட்டிடம் என்பதற்கு நாமே சாட்சியாகவும் இருக்கிறோம்.

இன்று ரிப்பன் பிரபுவின் வாரிசுகள் இங்கிலாந்தில் இருந்து வந்து இந்தக் கட்டிடம் எங்களுக்கே சொந்தம் எனக் கேட்டால் நாம் கொடுத்து விடுவோமா?

மாட்டோம் மாட்டவே மாட்டோம்.

சுதந்திரத்துக்கு முன்பு இங்கு வாழ்ந்த ஆங்கிலேயரின் வாரிசுகள் வந்து இந்தியாவில் எம் பாட்டனார் சொத்து இன்னது இன்னது இருந்தது என ஆவணங்களைக் காட்டினால் தற்போது அதற்கு உரிமையாளராக இருக்கும் இந்திய குடிமக்களிடம் இருந்து பறித்து அதனை ஒப்படைப்போமா? மாட்டோம் மாட்டவே மாட்டோம்.

காரணம் 1947க்குப் பின் அரசியல் சாசனப்படி அனுபவிப்பவர்களே உரிமையாளர்கள் என்றும் ரிப்பன் பிரபு என்ற ஆங்கிலேயர் கட்டியது தமிழக அரசுக்கே சொந்தம் என்றும் சட்டம் பேசுவோம். அதே போன்ற சாதாரண சட்டத்தைக் கொண்டே பாபரி மஸ்ஜித் இடத்தை நானூறு ஆண்டுகளாக அனுபவித்தும் அதன் தேவையுடையவர்களாகவும் இருக்கும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க மனம் வரவில்லையே. நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெறியாட்டம் போடுகின்றன யூதக் கூட்டங்கள்.

அங்கே பாலஸ்தீனத்தில் தூய்மையான வீடு என்ற பொருள் உடைய பைத்துல் முகத்திஸ் எனும் அல் அக்ஸா பள்ளி வாசல் நிலையைப் பார்ப்போம். அதன் சுற்றுப் புறமும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர். ஐ.நா.வை எல்லாம் மதிக்காமல் அதை அடைந்தே தீருவோம் என அநியாயமாக முஸ்லிம்களைக் கொன்று வெறியாட்டம் போடுகின்றன யூதக் கூட்டங்கள்.

அது எங்கள் கனவு பூமி எனக் கூறிக் கொண்டு கனவை நனவாக்க முஸ்லிம்களை கருவறுத்துக் கொண்டு முற்றிலும் இஸ்லாத்தை அழித்துவிட துடிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பிஞ்சு முதல் மூதாட்டி வரை மனித உடல்கள் துப்பாக்கியால் துளைக்கப்படுவதைப் பார்க்கின்றோம்.

ஆன்மீகத்தின் பெயரால் நரவேட்டையாடும் கீழ்தரமான மனிதர்களை நடுநிலையாளர்கள் இனம் காண வேண்டும். அயோத்தியில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்களாக மதம் மாறி (அல்லாஹ் காப்பாற்றுவானாக) பாபரி மஸ்ஜித் ராமர் கோயிலாகவும், பாலஸ்தீனத்தில் அல்அக்ஸா பகுதி மக்கள் யூதர்களாகவும் மதம் மாறி (அல்லாஹ் காப்பாற்றுவானாக) பைத்துல் முகத்திஸ் யூத கோவிலாகவோ மாறிவிடுமேயானால் உலகில் எந்தப் பகுதியில் வாழும் முஸ்லிமும் (அந்த இடங்களுக்காக) சிறிதும் கவலையோ வருத்தமோ அடைய மாட்டான்.

காரணம் வணக்கஸ்தலங்கள் அப்பகுதியில் வாழும் மக்கள் பயன்படுத்தவே. முற்றிலும் மதம் மாறிய பின் அந்த இடம் தேவைப்படாது. மாற்று கொள்கையை தேர்ந்து எடுத்தாலும் அவர்களின் நம்பிக்கையை மதித்து அவர்கள் வணங்குவதை ஏசாமல் வாழ வேண்டும் என்றுதான் இறைவன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றான்

கடந்த காலத்தில் புத்த மத மற்றும் ஜைன மத கோவில்களாக இருந்தவைகளெல்லாம் இன்று இந்துக் கோயில்களாக மாறி இருப்பதை தெளிவான வரலாறு மூலமும் சில கட்டிட வேலைப்பாட்டைக் கொண்டும் உணர முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை திராவிடர்கள் இயற்கையை மட்டும் வணங்கி வந்ததால் அக்கால கோயில்கள் அதிகம் இல்லை. புத்த ஜைன கோயில்களை ஏன் இந்துக் கோவில்களாக மாற்றினீர்கள் என்றும் யாரும் கேட்கவில்லை. ஏன் என்றால், (அந்த பகுதிகளில்) அந்த மதத்தைச் சார்ந்தவர்களே இல்லாத போது இது போன்ற வினாவே எழுப்ப முடியாது. ஆனால் பாபரி மஸ்ஜித், பைதுல் முகத்திஸ் இஸ்லாமியர்களால் ஒரே இறைவனை வணங்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தவை. ஆதனை அபகரிப்பது அநியாயம் இல்லையா?

... நீங்கள் செய்பவற்றை இறைவன் நிச்சயமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:1)

ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றினால். நியாயமான அரசு கண்மூடிக் கொண்டு இருக்காது என்பதை தமிழக அரசு சங்கராச்சாரியார் கைது மூலம் நிரூபித்து உள்ளதைப் பார்க்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற நியாய வாக்கை நிலை நாட்டிய தமிழக அரசை பாராட்டிய எதிர் கட்சியையும் பார்க்கிறோம். குற்றவாளி எவராக இருந்தாலும். தண்டிக்கப்பட வேண்டும். என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பாபரி மஸ்ஜித் இடிப்பின் முக்கிய குற்றவாளிகள் ஆளும் கட்சியில் இருந்தபோது எதிர் கட்சியாக இருந்த காங்ரஸ் அதனை தட்டிக் கேட்டு வெளிநடப்பு செய்தனர். இப்போது அவர்கள் கையில்தான் ஆட்சி இருக்கின்றது. சிறுபான்மைக்கு பாதுகாப்பாக அமையும் என்று தமிழகத்தைப் பொறுத்தவரை நாற்பதுக்கு நாற்பது இடங்களை வென்று கொடுத்த சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கும் ஆட்சி என்ன செய்யப் போகிறது?

பெரம்பலூர் நாஸர் அலி கான் அவர்கள் உடைய கேள்வியாக மட்டும் இது இருக்கவில்லை. களவாடிய உணர்வு உடையவர்களை தவிர உண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் கேள்வியாகவும் இது இருக்கிறது. http://mdfazlulilahi.blogspot.com/2004/12/blog-post_06.html

மத்தியில் இருக்கும் ஆட்சி என்ன செய்யப் போகிறது? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

Comments

muslimeen said…
Bismillahirrahumanirraheem

your opinion is wrong.Masjidhul aqsa is first qibla.it is the relation with muslim ummah.not palestine muslim only.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.