Posts

Showing posts from October, 2004

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம்

Image
கருவியல் ஆராய்ச்சியா ளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்தி ற்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு! கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம். ‘ மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும் ” (2:228)  என்கிறது அத்திருவசனம். மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில்  ‘ இத்தா ’  இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும் ‘‘ விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும் ’’ (2:228)  என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார். ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு ( Finger Printing)  ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே ,  டி.என்.ஏ. ரேகைப் பத...

கள்ள உறவு தொடர்ந்து கருவானதால் உருவான பிரச்சனையை

...'தாங்கள் தலித் கலை இலக்கிய குழவினர் நடத்திய விழாவில் பங்குகொண்டதோடு பொதுப்பணத்தை தானமாக அள்ளிக்கொடுத்துள்ளீர்களே இச்செயலை என்னவென்பது?  மவுலவி ஷம்சுல் லுஹாவிற்கு, குமரி மாவட்டம் திட்டுவிளையிலிருந்து சகோதரர் அபுபக்கர். அன்புள்ள அறிஞர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ. தாங்கள் ஓர் அறிஞர் என இதுவரை எண்ணி ஏமாந்த என்னைப் போன்ற தவ்ஹீதுவாதிகளுக்கு, தங்களின் உண்மை நிலையை உணர வைத்தமைக்கு நன்றி. இறையச்சம் என்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் எடுத்துச் சொல்லாதவற்றையெல்லாம் கூறி இறையச்சத்தை அளிக்கத்துணிந்த உங்களிடம் இறையச்சத்தை எதிர்பார்க்க முடியாதென்பதால், வெறும் எதார்த்தத்தின் அடிப்படையில் தங்களது கடிதத்திற்கு பதிலளிக்க விரும்புகிறேன். பெறுநர் என்று தங்களது கடிதத்தில் தமுமுக என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு, என்னைப் போன்ற பலருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளதால், நான் தமுமுகவை சாராதிருந்தாலும் பதிலளிக்கும் உரிமை அளிக்கப்பட்டவனாகிறேன். அந்த அடிப்படையிலேயே தங்களுக்கு இதனை எழுதுகிறேன். ஒரு இயக்கத் தலைமை, அவ்வியக்கத்தின் நிர்வ...

பாதிப்பை ஏற்படுத்தியவனும், பாதிக்கப்பட்டவனும் சமமே எனும் ரீதியில் பேசக்கூடாது.

பாதிப்பை ஏற்படுத்தியவன் தண்டிக்கப்பட்டாக வேண்டும். பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் அளித்தாக வேண்டும். அன்புச்சகோதரர் A.R. பரகத் அலி அவர்களுக்கு, நம் அனைவரின் நல்லெண்ணத்திற்கும், முயற்சிகளுக்கும் சிறந்த கூலியை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக. சமரசம் அல்லது சமாதானம் என்று பேசும்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியவனும், பாதிக்கப்பட்டவனும் சமமே எனும் ரீதியில் பேசக்கூடாது. பாதிப்பை ஏற்படுத்தியவன் தண்டிக்கப்பட்டாக வேண்டும். பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் அளித்தாக வேண்டும். அண்ணன் PJஅவர்களின் அதிரடியான அவசரக்குடுக்கை செயலினால் இயக்கமும், சமுதாயமும் பாதிக்கப்பட்டு பிளவுபட்டு நிற்பதாய் வருத்தப்படக்கூடிய தாங்கள், ஒரு சமரச திட்டத்தை முன்வைக்கும்பொழுது அதன் பலனாக எதனை அடைய வேண்டுமென்ற குறிக்கோளை தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய குறிக்கோளாக தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றிலுள்ள முக்கிய அம்சம்  எல்லா முஸ்லிம்களும் வரவேற்பார்கள். வெறுப்பவர்கள் கூட விரும்புவர்  அரசியல் கட்சிகள் ஆச்சரியப்படுவார்கள்  பிற இயக்கங்களுக்கு முன்னுதாரணமாய் அமையும்  அகில இந்தியாவிற்கே தலைமை ஏற்று வழி நடத்தப்படலாம்  அத்துடன் அல்லா...
அல்லாஹ்வின் திருப்பெயரால்.. பேரன்பிற்குரிய சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் அறிந்த வரையில் நீங்கள் இளம் வயதிலேயே நல்ல மார்க்கம் ஞானம் உள்ளவர். நல்ல தாயி, நல்ல சமுதாயப் பற்றுள்ளவர். சமீபத்தில் தமுமுகவில் இருந்து சகோ. பி.ஜெ. அவர்கள் விலகிய பின்னர், நடக்கும் சம்பவங்களும், அதற்கு உங்கள் போன்றவர்கள் சகோ. பி.ஜெ. அவர்களின் சமுதாயத்தை அழிக்கும் தீவிரவாதத்துக்கு துணை போவதும் எந்த வகையில் நியாயம்? சகோதரர் பி.ஜெ. அவர்கள் தானாகவே விரும்பி தமுமுக-வில் இருந்து விலகியுள்ளார்? பின்னர் தமுமுக தன்னை விலக்கி விட்டதாக கூறுகிறாரே ஏன்? அத்துடன் தமுமுக நிர்வாகிகளின் ஒருவரான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை விசுகிறாரே ஏன்?. அவரது நடவடிக்கைகளுக்கு நீங்களும் துணை போகின்றீர்கள் இது நியாயமா? இந்தக்காலக்கட்டத்தில் தமுமுக-வின் செயல்பாடுகள் சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா? தமுமுக என்ற பேரியக்கம் அவசியத்திலும் அவசியம் என்பது அனைவருக்கும், ஏன் பி.ஜெக்கும் நன்றாகத் தெரிந்திருந்தும், தமுமுகவை அழித்தே தீருவேன் என்றும், தமும...

பின்னத்தூர் பின்னனி

உணர்வு வார இதழ் ஆசிரியருக்கு கணக்கப்பட்டு ஹஜ்ஜி முஹம்மது எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கம் (வரஹ்) உணர்வின் 20-26 ஆகஸ்ட் இதழை மிகவும் தாமதமாக பார்க்க நேரிட்டது. பின்னத்தூர் பின்னனி என்ற தொகுப்பில்: 'பின்னத்தூர் பின்னணியை ஆராய நமது செய்தியாளரை அனுப்பினோம். அவர் சம்மந்தப்பட்ட எல்லா தரப்பினரையும் சந்தித்து திரட்டிய தகவல்களைத் தருகிறோம்' என்று குறிப்பிட்டு ஒரு தலைபட்சமாக எழுதியுள்ளீர்கள். அச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டவன் முழுக்க முழுக்க நான்தான். என் புகைப்படத்தைப் போட்ட நீங்கள் என்னைச் சந்தித்தீர்களா? அல்லது கள்ளத்தொடர்பு என்ற வார்த்தையில் அலாதியான இன்பம் கொண்டு கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிடப்படும் அத்தொடர்பிற்கு உரித்தான அப்பெண்மணியை சந்தீத்தீர்;களா? அல்லது எனது சொந்த ஊரான கணக்கரப்பட்டு கிராமம் சென்று எனக்கும் உங்களால் அப்பாவி என்று கூறப்பட்ட என் முதல் மனைவிக்குமிடையே என்னென்ன பிரச்சனைகள் இருந்தன? நீங்கள் மிக விரும்பி குறிப்பிடும் அந்த கள்ளத்தொடர்புக்கு காரணம் என்ன? என்பதை பற்றி விசாரித்தீர்களா? அதையெல்லாம் செய்யாமல் உண்மையை அறியும் உணர்வே இல்லாமல் த.மு,மு,க. இயக்கத்தை கேவலப்படுத...

த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? புதுக் காரணம் கூறியுள்ள பி.ஜே.

உண்மையான மனம் திறந்த மடல் 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இப்பொழுது டி.என்.டிஜே. என்ற அமைப்பில் இருக்கும் பீ.ஜைனுல்ஆப்தீன் உலவி அவர்களே! தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதுபோல் மக்களை நம்ப வைக்க அதற்குரிய வாசகங்களை உங்கள் விருப்பப்படி அமைத்து உங்கள் கைப்பட எழுதிய முக்கிய அறிவிப்பை பத்திரிக்கையில் வெளியிட்டீர்கள். தங்களது அந்த முக்கிய அறிவிப்பு வெளியானதும் முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் எனும் பெயரில் விளக்க இதழ் வெளியிட்டோம். அதில் கடந்த காலங்களில் நீங்கள் ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் வெளியேறும்போதெல்லாம் முதலில் கூறிய காரணத்தையும் பிறகு அது அல்ல என்று வேறு ஒரு காரணத்தையும் கூறி வந்துள்ளதை நினைவூட்டி இருந்தோம். மேலும் நீங்கள் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் த.மு.மு.க.விலிருந்து விலகவில்லை என்பதையும் திட்டமாக எழுதியதுடன் த.மு.மு.க.வுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டின் சொத்துப் பிரச்சனைதான் காரணம் என்பதையும் விளக்கி எழுதி இருந்தோம். அந்த இதழ் வெளியானதும் உங்களைப் பற்றி தெரியாத உங்கள் பின்னால் உள்ளவர்களில் உங்கள் வார்த்தைப்படி 18, 20 வயது பாலகர்களெல்லாம் எ...

சிறையில் வாடும் முஸ்லிம்களின் அவலம் பாரீர்.

கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்தியாவில் எந்த வழக்குகளாக இருந்தாலும் அது பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே போனாலும் கைதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜாமீன் கொடுத்து விடுகின்றனர். 7 ஆண்டுகளாகியும் ஜாமீன் கொடுக்கப்படாத கைதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை, தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.  7 ஆண்டுகளாகியும் ஜாமீன் கிடைக்காத நிலையில் கைதிகளாக உள்ள உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் குஷ்டம், காதில் சீல் வடிதல், டி.பி, கண் பார்வை மங்கல், மன நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி விட்டனர். சரியான மருத்துவம் இன்றி மேலும் மேலும் நோய்களின் பாதிப்புகள் கூடிக் கொண்டே போகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர்,கடலூர், பாளை, கோவை என தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைதிகளாக உள்ளனர்.  இதில் சமுதாய பிரச்சனைகளை ஒட்டிய கைதிகளாக உள்ளவர்கள் 365 பேர். கோவை சிறையில் மட்டும் 250 பேர் உள்ளனர். அதில் 166 பேர் கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதிகளாக உள்ளவர்கள்.  இவர்களில் அரசாங்கம் கூறி உள்ள குற்றச்சாட்டுப்படி பார்த்தாலும் குண்டு வெடிப்பு குற்றவாளிக...

அலாவுதீனும் அற்புத விளக்கமும்.

உண்மையான மனம் திறந்த மடல் 2. அரங்கத்தில் த.ஜ.வின் துணைத் தலைவர் என்று கூறிக் கொண்டு அந்தரங்கத்தில் அறங்காவலராக பதிவு செய்துள்ள பீ.ஜைனுல்ஆப்தீன் உலவி அவர்களே! சென்னையில் ஏ.எஸ். அலாவுதீன் தாக்கப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தியை உண்மைபடுத்த வேண்டும் என்ற நோக்கில் உள்ளீர்கள். எனவே நீங்கள் அபகரித்துள்ள வார இதழை அலாவுதீன் சிறப்பு இதழாக வெளியிட்டுள்ளீர்கள்.  அதில் உள்ளவற்றை உங்களைப் பற்றி தெரியாதவர்கள் நம்பலாம். உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் நம்புவார்களா? அலாவுதீன் சிறப்பு இதழில் உள்ளவைகள் யாவும் பொய்களே என்பதுதான் உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் நிலை. அதில் உள்ளவற்றை நம்ப வேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்தமான சத்தியத்தை  நீங்கள் செய்ய வேண்டும். நம்பவும் முடிந்ததில்லை. மறுக்கவும் முடிந்ததில்லை. 1997 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் தொடராக கொலைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் இளைஞர்களை தூண்டி விட்டு ஜிஹாது பற்றியும் காவல்துறை அதிகாரிகளை இழிவு படுத்தியும் மேடைகளில் தீவிரமாக பேசி வந்த ஷம்சுல்லுஹா கைது செய்யப்பட்டார்.  அப்பொழுது 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக...