தேர்தல் நேரங்களில் தண்ணி பட்ட பாடாகப் படுவது எது?
அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் நேரடியாக கலந்து கொண்ட போர்களில் மிக மிக முக்கியமானது பத்ரு , உஹது , அஸ்ஹாப் ( கன்தக் ), முரைஸி ( பனுா முஸ்தலிக் ), தாயிப் , கைபர் , மக்கா , ஹுனைன் ஆகியவை. இவை எட்டிலும் புறம்படும்பொழுதே நேரடியாக கலந்து கொள்ள கிளம்பி விடுகிறார்கள் . இப்படி புறப்படும்பொழுது தோழர்களில் ஒருவரை மதீனாவுக்கு கலீபாவாக - பிரதிநிதியாக நியமித்து விட்டுத் தான் போவார்கள். ஆட்சியாளர் வெளியில் போனால் அந்த பொறுப்பில் ஒருவரை வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதிலும் முன் மாதிரி நபி ( ஸல் ) அவர்கள்தான் . இப்பொழுது உள்ளவர்கள் விமானத்திலே பறப்பதிலேதான் குறியாக இருக்கிறார்களே தவிர . பிரதிநிதியாக யாரையும் நியமிக்கத் தயாராக இல்லை . பிரதிநிதியாக யாரையும் நியமிக்காத நிலையிலேயே அதிபதியாகப் போனவர்கள் , அகதிகளாகவும் கைதிகளாவும்தான் திரும்புகிறார்கள் . பல நாட்டு அதிபதிகளின் நிலை இன்று இப்படித்தான் உள்ளது . ஏனெனில் நபி ( ஸல் ) அவர்கள் போல் எல்லா தரப்பு மக்களாலும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் அல்ல இவர்கள் . இந...