தேர்தல் முடிவுகள் இறை வசனத்தின் பார்வையில்

நம் அனைவருக்கும் புனிதமிகு ரமழானின் நற்பாக்கியங்கள் கிடைக்கட்டுமாக!

16.5.2016 திங்கள்கிழமை அன்று தமிழக சட்ட மன்ற தேர்தல் நடந்தது. அன்று லுஹர் தொழுது விட்டு மிஹ்ராபில் இருந்தபடி இமாம் அவர்கள்அவருக்கு எதிரில் இருந்த முஅத்தின் மற்றும் ஜமாஅத் பிரமுகருடன் ஓட்டு போட்டது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களில் ஒருவர்பள்ளியில் அரசியல் பேச வேண்டாம்என்றார்.


சுன்னத் தொழுது முடித்த நாம்பள்ளியில் அரசியல் பேசக் கூடாது என்றால் சூரத்துல் ரூம் ஓத முடியாதே. திருமறையின் பல வசனங்களை ஓத முடியாதே”  என்று கூறி விட்டு வந்து விட்டோம்



19.5.2016 கோவையில் இருந்த நாம் தேர்தல் முடிவால் வருத்தத்தில் இருந்த சகோதரரிடம் சொன்னோம். சூரத்துல் ரூம் அத்தியாயத்தில் நமக்கு ஆறுதல் இருக்கின்றது போய் படியுங்கள் என்று.


திருமறை குர்ஆன் 30ஆவது அத்தியாயத்தின் பெயர் அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்றே அந்த அத்தியாயத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரோம் என்பது கிறிஸ்தவர்களால் ஆளப்பட்ட நாடு. ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம். கிறிஸ்தவ அரசாங்கத்தின் பெயரிலேயேதான் திருமறை குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது. இது அரசியலா இல்லையா

திருமறை குர்ஆனில் உள்ள 6666 ஆயத்துக்களில் சுமார் 422 வசனங்கள் அரசியல் ஆட்சி அதிகாரம் சட்டங்கள் பற்றி கூறுகிறது. ந்த ”ரூம்” அத்தியாயத்தில் என்ன சொல்லப்படுகிறது.

ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. (ரோம் வாசிகள் தோல்வியடைந்து விட்டனர்). 30:2


அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். 30:3.


(அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (வெற்றி அடைவார்கள். வெற்றி தோல்வி என்ற) விஷயம் இதற்கு முன்னரும், இதற்குப் பின்னரும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றியடையும்) அந்நாளில் நம்பிக்கையாளர்கள் (முஸ்லிம்கள்) அல்லாஹ்வின் உதவியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். 30:4.


அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். 30:5
(இது) அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் தனது வாக்குறுதியை மீற மாட்டான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் 30:6


திரும்பத் திரும்ப படியுங்கள். இந்த வசனம் இன்று நமக்கு ஆறுதல் சொல்வது போல் இருக்கும். நமக்காக அருளப்பட்டது போல் இருக்கும். திருமறை குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களும் இப்படித்தான் இருக்கின்றன. குடும்பப் பிரச்சனையா அது சம்பந்தமான வசனங்களைப் பார்த்தால் தீர்வு சொல்லும்.

கொள்கைக் குழப்ப பிரச்சனையா? அது சம்பந்தமான வசனங்களைப் பார்த்தால். குழப்பங்கள் கொள்கைகளுமில்லை. இஸ்லாமிய கொள்கையில் குழப்பங்கள் இல்லை என பதில் தரும்

கல்வியா? செல்வமா? வீரமா? நீதியா? அரசியலா? அனைத்திற்க்கும் விளக்கம் இருக்கிறது. நாம்தான் சூழலுக்கு தகுந்த தீர்வைக் காண திருமறையை திறக்காமல் இருக்கிறோமே.

கிறிஸ்தவர்களின் அரசாங்கமான ரோமப் பேரரசு விரைவில் வெற்றி பெறும்.  அதாவது கிறிஸ்தவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள். அதையும் அல்லாஹ் எப்படி சொல்லிக் காட்டுகிறான். 

அல்லாஹ்வின் உதவியினால் கிறிஸ்தவர்கள் வெற்றி அடைவார்கள் என்று. அது மட்டுமா?  இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான்  என்றும் கிறிஸ்தவர்கள் அரசாங்கம் பெற இருக்கும் வெற்றி பற்றி உறுதி அளிக்கிறான். இது அரசியலா இல்லையா? 


இதைத்தான் அல்லாஹு அக்பர் என்று கைகளை கட்டிக் கொண்டு தொழுகையில் இமாம் மிஹ்ராபில் நின்று படித்து(ஓதி)க் காட்டுகிறார். மொழி தெரியாதவர்கள் இது ஒரு வேத வசனம் என்ற நிலையில் மட்டுமே படிப்பார்கள் செவிமடுப்பார்கள். 


அரபிகள் மற்றும் அரபி மொழி தெரிந்தவர்கள் இது அரசியல் சம்பந்தமானது என்று புரிந்து நிற்பார்களா இல்லையா

இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்றால் அல்லாஹு அக்பர் என்று கைகளை (தக்பீர்) கட்டிக் கொண்டு தொழுகையில் நின்று இமாமோ நாமோ இதை படிக்க (ஓத) முடியுமா? 


மேலும் கிறிஸ்தவர்கள் வெற்றி பெறும் அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் சொல்லிக் காட்டுகிறான் ஏன்?  இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இரு வல்லரசுகளில் ஒன்று பாரசீகம். மற்றொன்று ரோம். 


பாரசீக சாம்ராஜ்யத்தினர் நெருப்பை வணங்கக் கூடிய முஷ்ரிக்களாக இருந்தார்கள். ரோம் சாம்ராஜ்யத்தினரோ வேதம் உடைய கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இந்த இரு வல்லரசு நாடுகளும் மோதிக் கொண்டன. அந்த மோதலில் கிறிஸ்தவர்களின் ரோமபுரி சாம்ராஜ்யம் தோல்வியடைந்து விட்டது.  

இதை மக்காவில் உள்ள இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். முஸ்லிம்களைப் போலவே தங்களிடம் வேதம் இருக்கிறது என்று கூறிக் கொள்ளும் கிறிஸ்தவர்களின் ரோமபுரி சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது. நம்மைப் போல் பல தெய்வ கொள்கை உடைய பாரசீக சாம்ராஜ்யம் வெற்றி பெற்று விட்டது. எனவே முஸ்லிம்களை நாம் வெற்றி பெறுவோம் என்று பேசிக் கொண்டனர். 

அப்போதுதான் வேதக்காரர்களான கிறிஸ்தவர்களின் ரோமபுரி பேரரசு மிகச் சில ஆண்டுகளிலேயே மீண்டும் வெற்றி பெறும் என்ற இந்த வசனங்கள் அருளப்பட்டன. 

இந்த வசனங்கள் (30:2,3,4) முன்னறிவிப்பாகும். இந்த முன்னறிவிப்பின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே ரோமாபுரி வெற்றி பெற்று,. பாரசீகம் தோற்கடிக்கப்பட்ட அதிசய நிகழ்ச்சி நடந்து முடிந்தது. முன்னறிவிப்பும் நிறைவேறியது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சான்றாக உள்ள நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சியும் இருக்கின்றது.


இந்த வசனங்கள் என்றும் பொருந்தும். அரசியலில் முஃமின்கள் வருந்தும் வண்ணம் பின்னடைவோ தோல்வியோ ஏற்பட்டால் முஸ்லிம்களின் எதிரிகள் கொண்டாடி மகிழலாம். முனாபிக்குகளும் எழுச்சியுடன் முஸ்லிம்களின் எதிரிகளுடன் கை கோர்த்து கொண்டாடலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. 


மிகச் சில (அதாவது 5) ஆண்டுகளிலேயே அல்லாஹ்வின் உதவியினால் முஃமின்கள் வெற்றி அடைவார்கள் அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி இறுதி நாள் வரை நற்செய்தி கூறி முஃமின்களுக்கு தெம்பூட்டிக் கொண்டிருக்கிறது சூரா அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்ற அந்த அத்தியாயம்.

நன்றி; மக்கள் உரிமை

http://mdfazlulilahi.blogspot.in/2016/06/blog-post_6.html 

படித்து விட்டீர்களா?

முஸ்லிம்களுக்கு

எது வெற்றி எது தோல்வி?

நீங்கள் லட்சியத்திற்காக ஓட்டுக் கேட்டவர்களா? லட்சங்களின் பங்குகளை பெற ஓட்டு கேட்டவர்களா? உங்கள் செயல்பாடுகளே பதில் தரும்.






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.