அந்த அணியிலிருந்து விலகி நம் பக்கம் வந்துவிட்டவர்கள் யார்? யார்?

இரண்டாவது முயற்சி ஹிஜ்ரி 1, ஷவ்வால் மாதத்தில் நடந்தது.   கணிக்கப்பட்டபடி கி.பி. 623 ஏப்ரல் மாதம். குறைஷிகளின் பெருங் கூட்டம் ஒன்று மக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. சிரியாவை நோக்கி பொருள்களுடன் போய்க் கொண்டிருக்கிறது என்ற தகவல் வந்தது.

இந்த தகவல் அடிப்படையில் மக்காவாசிகளை முறியடிப்பதற்கான முயற்சி நடக்கிறது. அதற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) முஹாஜிரை இதற்கு தலைவராக ஆக்கினார்கள். அவருடன் சுமார் 60 லிருந்து  80 வரையிலான தோழர்களை அனுப்பினார்கள். உத்தேசமான எண்ணிக்கை விபரம்தான் அறிவிப்புகளில் கிடைக்கிறது. இதிலும்  அன்சாரிகள் கிடையாது. அனைவரும் முஹாஜிர்கள்தான்.


அங்கே வியாபார கூட்டத்துக்கு தலைமை தாங்கி வருபவர் அபூஸுஃப்யான். ஒவ்வொரு முறையும் ஆள் மாற்றி மாற்றி தலைமை ஏற்று வருவார்கள். கடந்த முறை அபுஜஹ்ல் வந்தான். அது மாதிரி இந்த முறை அபூஸுஃப்யான் வருகிறார். 


பத்தன் ராபிக்என் இடத்தில் அபூஸுஃப்யான் குழுவை முஹாஜிர்கள் எதிர் கொள்கிறார்கள். அபூஸுஃப்யானுடன் வந்தவர்கள் பெரும் கூட்டமாக இருந்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் வில்லிலிருந்து அம்பெய்து சண்டை செய்ய ஆரம்பித்தார்கள். அம்பு எய்திடும் சண்டை சூடு பிடிக்கும் முன் என்ன நடந்தது தெரியுமா? 

அபூஸுஃப்யானின் ந்த அணியிலிருந்து விலகி 2 பேர் நம் பக்கம் வந்துவிட்டார்கள். இந்த சம்பவம் அபூஸுஃப்யான் அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆச்சரியப்பட்ட அபூஸுஃப்யான் அவர்களும் பிற்காலத்தில் நம் பக்கம் வந்து விட்டார்.   இங்கு உண்மை நிலை என்னவென்றால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள். மனத்தளவில் ஈமான் கொண்டு விட்டவர்கள்.


மக்காவை விட்டு போக வழி இல்லாமல் இருந்தவர்கள். ஹிஜ்ரத்  செய்து மக்காவில் இருந்து போக முடியாத சூழல். போனால் போட்டு தள்ளி விடுவார்கள் என்ற நிலை. எனவே பொறுத்து இருந்தார்கள். எப்படியாவது மதீனாவுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்து இருந்தார்கள்.


அந்த எண்ணத்தோடுதான் அபூஸுஃப்யான் அவர்களின் வியாபாரக் கூட்டத்துடன் சேர்ந்தார்கள். போய் விட்டு திரும்பி வரும்பொழுது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களோடு வந்து சேர்ந்து விட்டார்கள். 

எஞ்சி உள்ளவர்கள் வேறு வழியின்றி அவர்கள் கொண்டு வந்த பொருள்களுடன் தப்பித்தால் போதும் என ஓடிப் போய் விட்டார்கள். இவர்கள் இருவரும் அவர்களின் பொருளுடன் வந்து விட்டார்கள். இதில் அம்பு எய்தல் நடை பெற்றது. மற்றபடி, கடுமையான சண்டை துவும் நடைபெறவில்லை. யாரும் கொல்லப்படவில்லை. பொருளாதாரங்களும் முடக்கப்படவில்லை.


முஹாஜிர்களிலேயே பொருளுடன் வந்தவர்கள் இந்த இரண்டு பேர்தான். எல்லா முஹாஜிர்களும் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி வந்தார்கள். பொருளோடு வந்தவர்கள் இவர்கள் இரண்டு பேர்தான். 

அந்த அணியிலிருந்து விலகி நம் பக்கம் வந்துவிட்டவர்கள் யார்? யார்? ஒருவர் அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானிஇன்னொருவர் உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி. இந்த இரண்டு மக்காவாசிகளும் பொருளுடன் வந்து சேர்ந்ததுதான் இந்த முயற்சியில் கிடைத்த பலன்.  


இந்த முயற்சியின் போதும் பயன்படுத்தப்பட்ட கொடியின் நிறமும் வெள்ளைதான். ந்தக் கொடியை  மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல்முத்தலிப் இப்னு அப்துல் மனாஃப் (ரலி) ஏந்தியிருந்தார்கள். இவர் அப்துல் முனாஃப் குடும்பத்தைச் சார்ந்தவர். குறைஷி குலத்துக்காரர். ரசூல்(ஸல்) அவர்கள் மதீனா வந்து குறிப்பிட்ட காலம் ஆனதற்குப் பிறகு ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் இவரும் ஒருவர். 

இந்த மாதிரி முயற்சிகள்தான் பத்ராக ஆனது. இதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த முயற்சிகளையெல்லாம் பார்க்கிறோம். பொதுவாக போர்கள் என்றாலே முதலில் பத்ரு இரண்டாவது உஹது என்று தான் பெரும்பாலானவர்கள் மனதில் பதிந்து இருக்கிறது.


அதற்கு முன்னால் எந்த மாதிரி போர் தடுப்பு முயற்சிகளெல்லாம் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் செய்து இருக்கிறார்கள். இந்த முயற்சிகளுக்கும் பத்ரு போருக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் எந்த சம்பந்தமும் கிடையாது. 

ஆனால் இந்த மாதிரியான போர் தடுப்பு முயற்சிதான் பத்ரும். ஆனால் அது போராக எப்படி மாறுகிறது. அதை போராக ஆக்கியது காபிர்களா? முஸ்லிம்களா? அல்லது அல்லாஹ்வா? 

பத்ரில் போர் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருந்தது. பத்ருப் போர் பத்ருப் போர்  என்று சொல்லித் திரிந்தது யார்? காபிர்களா? முஸ்லிம்களா? இதுதான் அதில் நாம் அறிந்து பெற வேண்டிய படிப்பினை. 

அந்த மாதிரி நாம் ஒன்றை நினைத்தாலும் நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் நினைத்தாலும் யார் நினைப்பதை அல்லாஹ் செய்து காட்டுவான்? இதுதான் அதில் நாம் இறுதியாக பெற வேண்டிய படிப்பினை.


இதே மாதிரி ஒரு முயற்சிக்கு “கர்ரார்“ என்ற இடம் தேர்வாகிறது. அதனால் மூன்றாவதான இந்த முயற்சிக்கு “கர்ரார்“ எனப் பெயர் ஆயிற்று. இதுவும்  ஹிஜ்ரி முதலாம் ஆண்டு துல்காயிதா மாதத்தில் நடந்தது. கணக்குப்படி கி.பி. 623 மே மாதம். இந்த முயற்சிக்கு தலைமை ஏற்றவர் ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள். குறைஷிகளுக்கு பொருளாதார தடை என்பதுதான் இந்த முயற்சியின் நோக்கமாகவும் இருந்தது. கர்ரார்என்ற இடத்தை கடந்து போக வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டிருந்தார்கள்.


கர்ராரைத் தாண்டிப் போனால் மக்காவாசிகளுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனால் அதைக் கடந்து போக வேண்டாம் என்று மட்டும் நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். 

எனவே கர்ராரையும் கடந்து போய் விடக் கூடாது. போவதும் தெரியக் கூடாது. தனால் பகலில் பதுங்கி விடுவார்கள். இரவில் நடப்பார்கள். இப்படி கால்நடையாகவே சென்ற இப்படை கர்ராருக்கு போய் சேர்ந்தது. குறைஷிக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே “கர்ரார்“. என்ற அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டது.


அந்த காலத்தில் என்ன வசதி இருந்தது? எந்த வசதியும் கிடையாது. தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலம் அல்ல அது. குத்து மதிப்பாக இந்த நாளில் புறப்பட்டால் இன்ன நாளில் போய் சேருவார்கள். அங்கே இருந்து புறப்பட்டால் எதிரே வரக் கூடியவர்களிடம் செய்தியை கேட்டுக் கொள்வார்கள். எங்கே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. 


ஒட்டகத்திலே வரக் கூடியவர்கள் பற்றிய செய்தியை குதிரையில் வரக் கூடியவர்களிடம் கேட்பார்கள். ஒட்டக கூட்டம் வருகிறதா? எவ்வளவு நாள் துாரத்தில் வருகிறார்கள்? என்று. 5 நாள் துாரத்தில் வருகிறார்கள் என்றால். அவர்கள் தரும் தகவலின் அடிப்படையில் 5 நாள் கழித்து இன்ன நாளில் இந்த இடத்திற்கு வருவார்கள் என்று முடிவு செய்வார்கள்


இவர்கள் பகலில் துாங்கி இரவில் செல்வார்கள். அவர்கள் இரவு பகலாக தொடர்ந்து வந்தால் ஒரு நாள் முன்பாகவே போய் விடுவார்கள். அது மாதிரி அவர்கள் போய் விட்டார்கள். இவர்கள் திரும்ப மதீனாவுக்கு வருகிறார்கள். மூன்றாவதாக செய்த முயற்சியிலும் அவர்கள் ஏந்திய கொடி வெள்ளைதான். மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் இதை ஏந்தியிருந்தார்கள்.

அடுத்து நான்காவது முயற்சி. “அப்வா’  அல்லதுவத்தான்என்றும் சொல்வார்கள். ஒரு இடத்தில் நடக்கக் கூடிய இந்த சம்பவத்திற்கு நெருக்கமாக இருக்கக் கூடிய ஒரு சிறிய ஊரின் பெயர் அப்வா. பக்கத்தில் உள்ள பெரிய ஊருக்குப் பெயர் வத்தான். அப்வா போர், வத்தான் போர் என்ற இந்த இரண்டு பெயர்களும் இந்த நிகழ்வுக்கு சொல்லப்படுகிறது


இது நடந்தது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு. ஸஃபர் மாதம். (கி.பி. 623 ஆகஸ்டு மாதம் என்று கணக்கிட்டுள்ளார்கள்) இதற்கு தலைமை ஏற்று சென்றது இறுதி இறைத்துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள். இந்த நான்காவது முயற்சியிலேதான் அல்லாஹ்வின் துாதர் தானே தலைமை ஏற்றுச் செல்கிறார்கள். இதில் நடந்தது என்ன?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
http://mdfazlulilahi.blogspot.in/2016/06/blog-post_13.html 

அடுத்த தலைப்பு
தேர்தல் நேரங்களில் தண்ணி பட்ட பாடாகப் படுவது எது?


முந்தைய தலைப்புகள் 

தேர்தல் முடிவுகள் இறை வசனத்தின் பார்வையில்

எது  வெற்றி எது தோல்வி  என்ற  தலைப்பில்  மக்கள்  உரிமையில்  வந்ததை வாட்ஸப்பில் போட்டு விட்டோம். சில சகோதரர்கள்  ம. ம .க தோல்வியை நபிக்கு ஏற்பட்ட  தோல்வியுடன் ஒப்பிட்டுள்ளதாக விமர்சனம் செய்து  இருந்தார்கள். 

எங்கேயும்  ஒப்பீடு செய்யவில்லை. அது  போல் இது  என்றால்தான் ஒப்பீடு.  வரலாறுகளைக் கூறியுள்ள  அல்லாஹ் படிப்பினைகள்  உள்ளதாகவே  கூறியுள்ளான். எனவே வரலாறுகளை  படிப்பினையாகவே எழுதி வருகிறோம்.  

ஒப்பீடுகள்   என்பது  வேறு. படிப்பினைகள்  என்பது  வேறு. முன்  மாதிரி ,வழி  காட்டுதல்கள்  இருக்கிறது  என்பது  வேறு.  இந்த  வித்தியாசங்களை விளங்கிக் கொண்டால் தவறான விளக்கம்  ஏற்படாது.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.