10 முதல்16 வரையிலான 7 வார்த்தைகள் பொருள் உணர்ந்து குர்ஆனை எளிதில் படித்திட (பாகம் -4)

அடி என்றால் BEAT     வீடு என்றால்  HOUSE.    ஆகவே வீட்டுக்கு அடியில் என்பதை BEAT  HOUSE என்று மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும்? 

12 வது வார்த்தை 5 விதமாக  5 வசனங்களில் வந்துள்ளது

13 வது வார்த்தை 7 விதமாக  14 வசனங்களில் வந்துள்ளது

16 வது வார்த்தை 14 விதமாக  45 வசனங்களில் 48  இடங்களில் வந்துள்ளன  ஆக 3 மூலச் சொற்கள்  தான் 64  இடங்களில் வந்துள்ளன. 

https://mdfazlulilahi.blogspot.com/2021/02/10-16-7-4.html


அ(ஸ)தற என்ற அரபு வேர்ச் சொல்லில் இருந்து பிறந்த வார்த்தைகளில் இருந்துதான். 

காலடி, அடிச்சுவடு, தழும்பு, அடையாளம், எனக்குப் பின்னால் என் அடிச்சுவட்டின், அறிகுறிகள், அடையாளங்கள், பலன்கள், தடயங்கள், சின்னங்கள்,  வந்த வழியே

ஆகிய பொருள்களை தரும் அரபு சொற்கள் வந்துள்ளன. இது போன்றவற்றை அரபு மொழிக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாக அரபு மொழி மட்டுமே படித்தவர்கள் கூறுவார்கள்.

இது போன்ற சிறப்புக்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நமக்குத் தெரியாது. கற்றது கையளவு அவ்வளவுதான்.


நமது தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால். அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்த தமிழ் வார்த்தைகள் ஏராளம். 


அடி என்ற எழுத்து தனித்து நிற்கும்போது பல பொருள் தரக் கூடியதாக இருக்கும். இன்னொரு வார்த்தையுடன் சேரும்போது பெரும்பாலும் இடத்துக்கு தக்கவாறு ஒரு பொருள்தான் தரும்.


ஆக  எல்லாமே இடத்துக்கு தக்கவாறு தான் பொருள் தரும்.  இவற்றை பிற மொழியில் மொழி பெயர்க்கும் போது. அந்தந்த மொழிக்கு தக்க வார்த்தையைத்தான் மொழி பெயர்ப்பாக தர வேண்டும். 

அடி என்பதற்குரிய நேரடி பொருளை எல்லா இடங்களிலும் கொடுத்தால் குழப்பம் தான் வரும். 


வீட்டுக்கு அடியில் என்றால் UNDER THE HOUSE (வீட்டின் கீழே) என்று  மொழி பெயர்க்க வேண்டும். அப்படி மொழி பெயர்க்காமல். 

அடி என்றால் BEAT   

வீடு என்றால்  HOUSE.  

ஆகவே வீட்டுக்கு அடியில் என்பதை BEAT  HOUSE என்று மொழி பெயர்த்தால் எப்படி இருக்குமோ?  அப்படித்தான் இரு மொழிகளின் ஞானம் இல்லாதவர்கள்  செய்துள்ள மொழி பெயர்ப்புகள் உள்ளன.


அச்சு அடிக்கிறார்கள் என்றால் பிரிண்டிங் செய்கிறார்கள்.

அடித்துக் கொள்கிறார்கள் என்றால் சண்டை செய்கிறார்கள்.

அவர்கள் கொஞ்சம் அடித்து இருக்கிறார்கள் என்றால் மது குடித்து போதையில் இருக்கிறார்கள்.

அவனுக்கு லாட்டரியில் பணம் அடித்து இருக்கு என்றால் பணம் கிடைத்து இருக்கு.

அடுத்த அடியைப் படி என்றால் அடுத்த வரியை (லைனை)ப் படி

போர் போட எத்தனை அடி அடித்தீர்கள் எத்தனை அடியில் தண்ணீர் வந்தது என்றால் நீட்டல் அளவைக் (feet) குறிக்கும் என்று பொருள் கொள்வோம்.

அது போல் தான் கால் அடி தடம்

பார்த்து அடி எடுத்து வை

சுவற்றில் ஆணி அடி

மிதி அடி

இந்த வித்தியாசங்களை அறிந்து  மொழி  பெயர்க்க வேண்டும்.

اٰثَرَ

ஆதற என்பதற்கு தேர்ந்தெடுத்தான் என்று மொழி பெயர்க்க வேண்டிய இடத்தில்  தேர்ந்தெடுத்தான் என்று மொழி  பெயர்ப்பது பொருத்தமானது சரியானது. 


அதே வார்த்தையில்  இருந்து வந்த   யுஃதிறுான   என்பதற்கு  தேர்ந்தெடுப்பார்கள் என்று நேரடியாக மொழி பெயர்ப்பதை விட முன்னுரிமை அளிக்கின்றனர் என்று மொழி பெயர்ப்பதே ஆய்வுத் திறன் உள்ளவர்களிடம் பொருத்தமானது சரியானது. 

இணைப்பில் உள்ள 

18:6.   ல் 

 اٰثَارِهِمْ

தாறிஹிம் என்பதற்கு  அவர்களுடைய காலடிச் சுவடுகள் மீதே 

அவர்களின் அடிச் சுவடுகள் மீது என்று பலர் நேரடி மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.  


ஆனால் ஜான் டிரஸ்ட் பீ.ஜே. மொழி பெயர்ப்பு செய்த மாதிரி அவர்களுக்காக என்று  அழகிய முறையில் மொழி பெயர்ப்பு  செய்துள்ளது. 

அதே நேரத்தில் அந்த வசனத்தில் வியாகூலப்பட்டு என்ற பழந் தமிழும்  ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பில் உள்ளது.  

இது போன்ற அனுகூலப்பட்டு,  வியாகூலப்பட்டு போன்ற இன்றைய மக்களுக்குப் புரியாத பட்டுச் சேலை வியாபாரத்தை, பழந் தமிழை, கர்நாடக தமிழை, வட மொழிகளை  தவிர்ப்பது  நல்லது.

அரபு உச்சரிப்புகளை அறிய யுடியூப் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்

https://www.youtube.com/watch?v=D52d15wH6GI

10  اَثَاثًا அதா(ஸா)த(ஸ)ன் (2)

வசதிகள் (செல்வம், பொருள்)   சாதனங்கள் (பொருட்கள்)  

    16:80. 19:74.


11

   يُّؤْثَرُۙ

யுஃத(ஸ)று (1)

    மயக்கத்தை ஏற்படுத்தும்  (கற்றுக் கொள்ளப்பட்ட)  74:24,




12

   اٰثَرَ

ஆத(ஸ) (1)

 1.   தேர்ந்தெடுத்தான் 79:38,



    اٰثَرَكَ 

ஆத(ஸ)க (1)

 2.   உம்மைத் தேர்வு செய்து விட்டான். 12:91.



    تُؤْثِرُوْنَ

துஃதி(ஸி)றுான (1)

 3. தேர்வு செய்கிறீர்கள் 87:16.




    نُّؤْثِرَكَநுஃதி(ஸி)றக (1)

4.உன்னைத் தேர்ந்தெடுக்க

   20:72.




   يُـؤْثِرُوْنَயுஃதி(ஸி)றுான(1)

5.முன்னுரிமை அளிக்கின்றனர்.(தேர்ந்தெடுப்பார்கள்) 

   59:9.





13   اَثَرِ(ஸ)றி(1)

1.காலடி (அடி)ச்சுவடு)

20:96.


   اَثَرِ(ஸ)றி(1)

2.தழும்பு (அடையாளம்)

48:29


   اَثَرِىْ(ஸ)றீ(1)

3. எனக்குப் பின்னால் (என் அடிச்சுவட்டின்)

 20:84


   اٰثٰرِ(ஸ)றீ(1)

4. அறிகுறிகள் (அடையாளங்கள், பலன்கள்)

30:50.


   اٰثَارًاதா(ஸா)றன்(2)

5. தடயங்கள் (சின்னங்கள்,அடையாளங்கள்) 

40:21, 82.

    اٰثَارِهِمْ

தா(ஸா)றிஹிம்(7)

6. அவர்களின் அடிச்சுவட்டில்

5:46.  18:6. 36:12. 37:70. 

43:22. 23. 57:27.


    اٰثَارِهِمَا 

ஆதா(ஸா)றிஹிமா(1)

7.  வந்த வழியே 

(அவர்களின் அடிச்சுவட்டில்)

18:64.





14

    اَثٰرَةٍ 

அதா(ஸா)தின்(1)

 சான்றை 

46:4.



15

    اَثْلٍ 

(ஸ்)த்லின்(1)

 புற்கள்

34:16.


16

 اِثْمِ 

(ஸ்)த்மி(21)

1.பாவம்,

(குற்றம்)

 2:85,173,182,188,203(2)206, 219.5:2,3,62,63. 

6:120(2) 7:33. 24:11. 42:37.49:12.53:32. 58:8,9. 

 



 اِثْمًا 


(ஸ்)த்மன்(10)

2.பாவத்தை,

(தவறை)

 2:182. 3:178. 4:20, 48, 50,111, 112(2) 5:107. 

33:58.


     اِثْمِكَ

(ஸ்)த்மிக(1)

 3. உன் பாவம்

5:29.

     اِثْمُهٗ

(ஸ்)த்முஹு(1)

 4. அதற்கான குற்றம்

(அதன் பாவம்)

2:181.

     اِثْمُهُمَآ 

(ஸ்)த்முஹுமா(1)

5. இரண்டின் கேடு

(பாவம்)

2:219

   اِثْمِىْ 

(ஸ்)த்மீ(1)

6. என் பாவம்

5:29.

   اٰثِمٌ

(ஸி)திமுன்(1)

7. குற்றம் புரிந்தது

(பாவத்துக்குள்ளாகி விட்டது)

2:283.

    اٰثِمًا 

(ஸி)திமன்(1)

8. பாவம் செய்பவருக்கு

76:24. 

    اٰثِمِيْنَ 

(ஸி)திமீன(1)

9. குற்றவாளிகள் (பாவிகள்)

5:106.

    اَثَامًا

(ஸா)தாமன்(1)

10. வேதனையை(தண்டனையை)

25:68.

 اَثِيْمٍ‏  

(ஸீ)தீமின்(6)

11.நன்றி கெட்டப் பாவி(பெரும்பாவி)

 2:276. 26:222. 44:44. 45:7. 68:12. 

83:12.


     اَثِيْمًا

(ஸீ)தீமன்(1)

12.பாவியை

4:107.

     تَاْثِيْمٌ‏

தஃ(ஸீ)தீமுன்(1)

13.குற்றம் பிடிப்பது

52:23.

    تَاْثِيْمًا

தஃ(ஸீ)தீமன்(1)

14.பாவமான 

.56:25.














Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.