திமுகவினருக்கு தெரியாத பெயர் சாதிக் பாட்சா?

ஏன்  இன்றைய தி.மு.க. பொருளாளர் துரை முருகனும் மறைந்த பெயர் சாதிக் பாட்சா. 

*சாதிக் பாட்ஷா அவர்களின் நினைவு நாள் இன்று  ..*வருட பாத்திஹாவில் உடன்பாடில்லாதவன். *சாதிக் பாட்ஷா அவர்களின் நினைவு    நாள் இன்று  ..* என்று எழுதுகிறானே என்று எண்ணுகிறீர்கள் அல்லவா. தலைப்பும் அதன் வார்ப்பும் என்னுடையது அல்ல. வந்த வார்ப்புகளை பார்த்ததும் சிராஜுல் மில்லத் என்றழைக்கப்பட்ட ஆ.கா.அ. அப்துஸ்ஸமது Ex M.P.  அவர்களும், மேலப்பாளையம் சாந்து காஜா மைதீன் Ex M.P.   அவர்களும் எம்மிடம் நினைவு கூர்ந்த நல்லவர்களில் ஒருவரான சாதிக் பாட்சா பற்றி எழுத எண்ணம் வந்தது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_12.html



MGR க்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார். 22 ஆண்டுகள் தி.மு.க.வின் பொருளாளராக தொடர்ந்து இருந்த சாதிக் பாட்சா .வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தான் தன் இறுதி நாளைக் கழித்தார்...! அந்தக் கஷ்டத்தை கலைஞரிடம் சொல்லி வருந்தியவர்கள். ஆ.கா.அ. அப்துஸ்ஸமது Ex M.P.  அவர்களும், மேலப்பாளையம் சாந்து காஜா மைதீன் Ex M.P. யும் 

.

இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர் சாதிக் பாட்சா. ஏன்  இன்றைய தி.மு.க. பொருளாளர் துரை முருகனும் மறைந்த பெயர் சாதிக் பாட்சா.. திமுக பொருளாளராக பதவி ஏற்ற துரைமுருகன் அவர்கள் வழங்கிய ஏற்புரையில் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து ஆற்காடு வீராசாமி வரையில் திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தவர்கள் பெயரை பட்டியல் போட்டு நினைவு கூர்ந்தார்.  ஆனால்  22 ஆண்டுகளாக தி.மு.க.  பொருளாளராக பதவி வகித்த சாதிக் பாட்சா பெயரை உச்சரிக்க மறந்தார்... 

தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும்

1969, 1971,1989ல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை. . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றவர்,  1994ல்  மரணம் அடைந்தார்..

திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த , எந்தவொரு சர்ச்சைகளிலும் பெயரை கெடுத்துக் கொள்ளாத தூய்மையான கழகத்தின் அடையாளம் சாதிக் பாட்சா...

கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர்..அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையாக இருந்த தமிழக அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்..

"அமைதியின் சின்னம்" அண்ணன் சாதிக்...!அமைதியின் வடிவம் என்று கலைஞரால்  அன்போடு அழைக்கப்பட்டவர்...! 

தமிழகத்தின் தலை சிறந்த வழக்கறிஞர்ளில் ஒருவர்...! சட்ட அமைச்சராகவும் சிறப்புடன் பணியாற்றியவர்...!



கழகத்தின் கணக்கு வழக்குகளில் மிகவும் கண்டிப்பானவர்...! 

தேவையற்ற...,ஆடம்பர செலவுகுளுக்கு ஒப்புதல் தராதவர்...!

வாகன போக்குவரத்து எரிபொருள் கணக்கை கூட கறாராக கேட்டு வாங்குபவர்...! அப்படிப்பட்டவரை யார் தான்  நினைவு கூர்வார்கள். அவர் பற்றி இன்று யாரோ வார்த்தது என் பார்வைக்கு வந்தது  அதனால் என் பங்குக்கும் வார்த்து தந்துள்ளேன். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن