இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.

இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம்.

இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து.

நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு.

இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம்.

இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம்.

யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை மறுக்கக் கூடியவர்கள். இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம் இது. அதற்கு ஆதாரம் (சூரத்துல் மாயிதாவில் உள்ள) 5:44 என்பதாகும். இப்படி குறிப்பிட்டு விட்டு 5:44.இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. அல்குர்ஆன் 12:40இல் கூறியது போலவே 5:44.இல் உள்ள வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் என்று மட்டுமே சொல்வார்கள். இதுவும் 5:44யின் முழு வசனம் இல்லை. 5:44ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது. இந்த ஒரு சிறு பகுதியான எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். என்று அல்லாஹ் அல்குர்ஆன் 5:44இல் கூறி உள்ளான். எனவே எப்படி மனிதர்களின் சட்டங்களை கொண்டு செயல்படுத்த முடியும். தீர்ப்பளிக்க முடியும் என்பார்கள்.

காலமும் நேரமும் வரும்போதுதான் செயல்படுத்த முடியும்.

இந்த வசனம் யாரைப் பார்த்து பேசுகிறது? அல்லாஹ்வுடைய தூதரை மட்டும் பார்த்து பேசுகிறதா? ஒரு சில வசனங்கள் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து பேசும். ஒரு சில வசனங்கள் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து பேசுவது போல் இருக்கும். அப்படி இருந்தாலும் அது ஒவ்வொரு முஃமினுக்கும் பொருந்தும். ஒரு சில வசனங்கள் எல்லோரையும் பார்த்து பேசுவதுபோல் இருக்கும். அப்படி இருந்தாலும் அதற்கு தகுதி உடையவர்கள்தான் அதுவும் காலமும் நேரமும் வரும்போதுதான் செயல்படுத்த முடியும்.

நேரம் காலம் தகுதி இதுவும் அல்லாஹ் அளித்துள்ள அனுமதிதான்.

அல்லாஹ் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டுள்ளான். எனவே ஏன் நோன்பு நோற்கவில்லை என எப்பொழுதுமே கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? ரமளான் மாதம் வந்தால் நோன்பு வையுங்கள் என்று அல்லாஹ்வே சொல்லி இருக்கிறான். ஏன் நோன்பு நோற்கவில்லை என ரமளான் மாதம் வந்தால்தான் கேட்க முடியும். அதுவும் நோன்பு காலத்திலும் இரவு நேரத்தில் இப்பொழுது ஏன் நோன்பு நோற்கவில்லை என கேட்க முடியுமா? நோயாளிகளிடமோ பிரயாணிகளிடமோ போய் ஏன் நோன்பு நோற்கவில்லை என கேட்க முடியுமா? நேரம் காலம் தகுதி இதுவும் அல்லாஹ் அளித்துள்ள அனுமதிதான்.

அத்தனை பேரும் ஆட்சி செய்யக் கூடியவர்களா?

யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை மறுக்கக் கூடியவர்கள் என்று சொன்னால். இந்த வசனம் ஒவ்வொருத்தரையும் பார்த்து பேசுகிறது என்றால். இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் நீதிபதிகளா? அத்தனை பேரும் ஆட்சி செய்யக் கூடியவர்களா? என்று கேட்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.

இந்த வாதத்தை ஏற்றால்.

அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பார்த்து சொல்லக் வசனம். எனவே அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பொருந்தும். என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். இந்த வாதத்தை ஏற்றால் இந்த மாதிரி உள்ள வசனங்கள் மூலம் பாதி குர்ஆன் செயல்படுத்த முடியாமல் போய் விடும். எனவே இப்படியும் பார்க்கக் கூடாது. அப்படியும் பார்க்கக் கூடாது. அல்லாஹ்வுடைய தூதருக்கு சொன்னால் நமக்கும் பொருந்தும் என்றே இந்த வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பேசுகிறது என்பதை விளங்கி புரிய முடியும்.

இந்த வசனம் யாரைத்தான் பார்த்து பேசுகிறது எப்படி பேசுகிறது என்பதை அறிய இந்த வசனத்தை முழுமையாக படிக்க வேண்டும். தொடர்புடைய வசனங்களையும் படிக்க வேண்டும். அப்படி படிக்கும்போது இந்த வசனம் யாரைத்தான் பார்த்து பேசுகிறது. எப்படி பேசுகிறது என்பதை விளங்கி புரிய முடியும். எனவே இதற்கு தொடர்புடைய வசனமான இதே அத்தியாயத்தில் முன்பாக உள்ள வசனமான 38ஆவது வசனத்தை பார்க்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அந்த வசனத்திலிருந்து சட்டங்களை ஆரம்பிக்கிறான். இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியில் அமர்ந்த பின் இறக்கியருளிய சட்டமாகும். அதனால் அந்த வசனத்திலிருந்து பார்க்க வேண்டும்.

திருடுபவன், திருடுபவள் ஆகியவர்களின் கைகளை வெட்டி விடுங்கள். இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும் அல்லாஹ்வின் தண்டணையுமாகும். அல்குர்ஆன் 5:38

திருடியவன் மனம் திருந்தி விட்டால்.

திருடுவது, அடுத்தவனது பொருளை அபகரிப்பது தீய செயல் - அநீதி. இந்த தீய செயலை அநீதியை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள ஒருவன் செய்து விட்டான். அதாவது திருடி விட்டான் என வைத்துக் கொள்வோம். அவன்தான் திருடன் என்பது யாருக்குமே தெரியாது. அந்த திருடன் மனம் திருந்தி விட்டான். இப்பொழுது அவன் என்ன செய்ய வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்று சொல்ல வேண்டுமா? என்று கேட்டால் என்ன சொல்வார்கள். வமன் லம் யஹ்கும் பிமாh அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் ஏக இறைவனை மறுப்பவர்கள்தான்- காபிர்கள்தான். எனவே இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்பார்கள்.

அல்லாஹ் அடுத்து என்ன சொல்கிறான்.

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். என்று திருட்டுக்குரிய தண்டனை சட்டத்தை 5:38இல் சொல்லிய அல்லாஹ் அடுத்து என்ன சொல்கிறான். அநீதி இழைத்த பிறகு ஒருவர் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பான். என்று சொல்கிறான்.

அல்லாஹ்வே அதை மறைத்து விட்டான்.

திருடியவன் மனம் திருந்தி விட்டால் இஸ்லாமிய ஆட்சியாளரிடம் போய் என் கையை வெட்டுங்கள் என்று சொல்லத் தேவை இல்லை என்பதுதான் இந்த வசனத்தின் விளக்கமாகும். விபச்சாரம் செய்து விட்டவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து தண்டனை வழங்குங்கள் என்று கேட்ட உடன் வமன் லம் யஹ்கும் பிமா அன்ஸலல்லாஹு பவுலாயிக ஹுமுல் காபிரூன் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் ஏக இறைவனை மறுப்பவர்கள்தான்- காபிர்கள்தான். எனவே தண்டனை வழங்குகிறேன் என்று கூறி விடவில்லை. மூன்று முறை முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வே அதை மறைத்து விட்டான் நீ ஏன் அதை சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று கூட சொல்கிறார்கள். மீண்டும் மீண்டும் கூறிய பின்தான் தண்டனை வழங்குகிறார்கள். இதை நாம் ஹதீஸ்களில் காண்கிறோம்.

முஸ்லிம்களின் கையில் முழுமையான ஆட்சி இருந்தால்.

எனவே திருடிவிட்ட எவரேனும் பிடிபடாத நிலையில், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 5:39. பிடிபட்டவன் என்று சொன்னால் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட பின் தண்டணை வழங்க வேண்டும். முஸ்லிம்களின் கையில் முழுமையான ஆட்சி இருந்தால் கையை வெட்ட வேண்டும் இதுதான் சட்டம்.

யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில்.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சியின் கீழ் யூதர்களும் இருந்தார்கள். கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். அந்த சூழலில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சிக்கு சட்டங்களை சொல்லி வந்த அல்லாஹ் யூத கிறிஸ்தவர்கள் விஷயத்தில் எந்த மாதிரி சட்டங்களை சொல்கிறான் என்பதை பாருங்கள்.

யூத கிறிஸ்தவர்கள் பொய்யையே அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். இது அதே சூரத்துல் மாயிதாவில் உள்ள 42ஆவது வசனத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான்.

நன்கு கவனிக்க வேண்டும். அவர்கள் உம்மிடம் வந்தால். அதாவது வந்தால்தான். தீர்ப்பு வழங்கலாம். அல்லது உங்கள் பிரச்சனையை நீங்களே உங்களுக்குள்ளேயே பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்றும் விட்டு விடலாம். நான் இஸ்லாமிய ஆட்சி செய்கிறேன். நான்தான் தீர்ப்பு சொல்வேன். இஸ்லாமிய முறைப்படிதான் தீர்ப்பு சொல்வேன் என கச்சை கட்டிக் கொண்டு நிற்கச்சொல்லவில்லை அல்லாஹ். இந்த வசனத்தில் அல்லாஹ் சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறான்.

இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள்.

இதுதான் இந்த அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் இன்று இந்தியாவில் உள்ள தனியார் சட்டம் அதாவது சிவில் சட்டம். இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம். இதனால்தான் பி.ஜெ.பி. போன்ற இஸ்லாமிய விரோத அமைப்புகள் சிவில் சட்டம் இருக்கக் கூடாது. பொது சிவில் சட்டம் வேண்டும் என்கின்றன. நன்கு புரிய வேண்டும். இந்தியாவில் சட்டம் இயற்றிவர்கள் மக்களுக்கு பயன் தரக் கூடிய எல்லா சட்டங்களையும் இஸ்லாத்தில் இருந்துதான் திருடி இருக்கிறார்கள்.

பட்டம் பதவி பெயர் அவர்களுக்கு கிடைத்திருக்காது.

இது இஸ்லாத்தில் இருந்து எடுத்த சட்டம். குர்ஆனில் இப்படி கூறப்பட்டு இருக்கிறது. அதிலிருந்துதான் சிவில் சட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் மதப்படி சட்டம். முஸ்லிம்களுக்கு அவர்கள் மதப்படி சட்டம். என தனியார் சட்டம் கண்டு பிடித்தோம் என்று கூறி இருந்தால் சட்டம் இயற்றிய நிபுணர்கள் என்ற பட்டம் பதவி பெயர் அவர்களுக்கு கிடைத்திருக்காது. எனவே கூறாமல் மறைத்து விட்டார்கள். சட்டம் இயற்றும் அவையில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தால் இந்த உண்மையை உலகுக்கு கூறி இருப்பார்கள். இனியாவது சட்டம் இயற்றும் அவைகளில் உயிருள்ள முஸ்லிம்கள் இடம் பெற்றிட முயற்சிகள் செய்வோம்.

அத்வானி கூட இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு வேண்டும் என்று சொன்னார்.

அவர்களாக முன் வந்து இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு தாருங்கள் என்று கேட்டால் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறலாம். அவர்களாக முன் வந்து இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு கேட்பார்களா? என்ற சந்தேகம் பலருக்கு வரும். பொது சிவில் சட்டம் பூச்சாண்டி காட்டி புதி சதி திட்டம் போட்ட அத்வானி கூட துணை பிரமராக இருந்தபொழுது என்ன சொன்னார். கற்பழிப்புக்கு மரண தண்டணை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். இது யாருடைய சட்டம். இஸ்லாமிய சட்டம் அல்லவா. முஸ்லிம்களின் எதிரியாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் அத்வானி கூட இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்ப்பு வேண்டும் என்று சொன்னார் அப்படி இருக்கும்பொழுது பொது மக்கள் சொல்ல மாட்டார்களா?

5:42இன் தொடரை பாருங்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்தால், அவர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்த தீங்கும் தர முடியாது. ஆனால், நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.

இங்கும் நன்கு கவனிக்க வேண்டும். அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்லவில்லை. தீர்ப்பளித்தால் என்றுதான் சொல்லி உள்ளான். தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக என்று சொல்லி உள்ளான்.

அல்லாஹ்வும் அப்படி கட்டளையிடவில்லை.

இஸ்லாமிய ஆட்சிகளுக்கெல்லாம் முன் மாதிரியான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூட எங்கு தப்பு நடந்தாலும் நான்தான் தீர்ப்பு கூறுவேன். இஸ்லாமிய சட்டப்படிதான் தீர்ப்பு கூறுவேன். நீ எந்த மதத்தவனாக இருந்தாலும் எனது ஆட்சியின் கீழ் இருக்கும்போது இஸ்லாமிய சட்டப்படிதான் தீர்ப்பு பெற வேண்டும் என்றெல்லாம் அதிகாரம் செலுத்தவில்லை. அல்லாஹ்வும் அப்படி கட்டளையிடவில்லை.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.