த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.

அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் 27.02.2008 இரவு மனித நீதி பாசறை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் '2006ம் ஆண்டு கோவையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்யான வழக்கில் கைது செய்து தமிழகத்தை பீதிக்கு உள்ளாக்கிய உளவுத்துறை உதவி கமிஷனர் ரத்தினசபாபதி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் போலீசார் கடையநல்லூரில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சதித் திட்டம் திட்டியதாக கடையநல்லூர் பள்ளி மூப்பன் தெருவைச் சார்ந்த ஹக்கீம் (21), அமீர் (30) அப்துல் காதர் (23) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஹக்கீம் மற்றும் அப்துல் காதரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்டதாக அமீரையும் தேடி வந்தனர். இதை கண்டித்து கடையநல்லூரில் 28.02.2008 மாலையில் மனித நீதி பாசறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி மாலையில் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பு மனித நீதி பாசறையினர் மற்றும் பொது மக்கள் திரண்டு போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையெடுத்து போலீசாருக்கும், கூடியிருந்த மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிய நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால், கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைதும் செய்தனர். இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலில் மறுத்த காவல்துறையினர், பின்பு கடையநல்லூர் அரசு மருத்துவமனையி;ல் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

வழக்கு பதிவதற்கு வேண்டிய காவல்துறையில் 4 பேர் தங்களுக்கும் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடையநல்லூர் காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கை நெல்லை மாவட்ட த.மு.மு.க.உடனடியாக கண்டித்து அறிக்கை விடுத்தது.

த.மு.மு.க.மாவட்ட பொருளாளர் புளியங்குடி எஸ்.செய்யது அலி மற்றும் மாவட்ட துணை செயலாளர் மவ்லவி மிஸ்பாஹி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்டவர்களை சந்திக்க முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

27.02.2008 அன்று தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர், முன்னால் தலைமை நீதிபதி, நீதியரசர் வெங்கடாசலய்யா நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து காவல்துறையினர் மனித உரிமை பேண வேண்டியதன் அவசியம் குறித்து வகுப்பு நடத்தினார். அந்த ஆலோசனை வகுப்புகளையும் குப்பை தொட்டியில் போட்டு, கடையநல்லூர் காவல்துறையினர் மனித உரிமை மீறல் செயலை நடத்தியுள்ளனர்.

த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இவ்விசயத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு கடையநல்லூரில் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸஸ் பெறுவதுடன் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.


தகவல்.
K.S.ரசூல் மைதீன்,
நகர தலைவர்
0091- 9943144666

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.