எப்படி குறை கூற முடியும்?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அன்புள்ள அப்துல்லாஹ் முக்ரிப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தாங்கள் அனுப்பிய மெயில்களை அப்படியே இடம் பெறச் செய்துள்ளோம்.

நஜ்ரான் நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவ பாதிரிகள் இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் கிறிஸ்துவ கொள்கையை நிலை நாட்ட விவாதம் செய்தனர். சில நாட்கள் நடந்த இந்த விவாதத்தின்போது மஸ்ஜிதுன் நபவியிலேயே அந்த பாதிரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்பாதிரிகள் அவர்களின் முறைப்படி மஸ்ஜிதுன் நபவியிலேயே வணக்க வழிபாடுகளில் ஈடுபட இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதினாவில் ஆட்சியாளராக இருந்தார்கள். அவர்களது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தான் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள். அவர்களின் முறைப்படி தான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பிரச்சார பணியைத்தான் செய்தார்கள். தவிர, இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தனது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிற மத வணக்க வழிபாடுகளை தடை செய்யவில்லை.

இரண்டாம் கலீபா உமர் அவர்கள் கிறிஸ்துவர்களின் ஆலயம் சென்று பாதிரிமார்களுடன் உரையாடி இருக்கிறார்கள். தொழுகை நேரம் வந்ததும் பாதிரிமார்கள் அங்கேயே தொழ சொன்னார்கள். இங்கு நான் தொழுதால் உமர் தொழுத இடம் என்று உரிமை கொண்டாட வாய்ப்பு ஏற்படும் என்று மறுத்து விட்டார்கள். இந்த உரையாடல் ஆட்சியாளர் என்ற முறையில் அவர்களின் குறைகளை கேட்கும் விதமானதா? எப்படி?

இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் கலீபாக்களும் தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிற மத வணக்க வழிபாடுகளை தடை செய்யவில்லை. அவர்களது அணுகுமுறை இப்படி இருக்க. தமது ஸ்கூலில் கிறிஸ்துமஸ் விழா நடத்த அணுமதி வழங்கியதை எப்படி குறை கூற முடியும் என கேள்விகள் வந்துள்ளது. இதற்கும் பதில் அளிக்குமாறு வேண்டுகிறோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.