குற்றச்சாட்டு என்பதற்குரிய அளவுகோல் என்ன? கையெழுத்துடன் கூடிய ஒப்பந்த பிரதி எங்கே?

கண்ணியத்திற்குரிய ரசூல் மைதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது வார்தைகளில் நாகரீகம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். எது எது நாகரீகமற்ற வார்த்தை என்பதை சுட்டிக் காட்டுவதுடன் அந்த இடத்தில் அமையப் பெற வேண்டிய நாகரீகமான வார்த்தைகள் எது என்பதையும் எழுதி அனுப்புங்கள் பணிவுடன் ஏற்று திருத்திக் கொள்கிறேன்.

எனது முந்தைய கடிதத்தில் பாண்ட் குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் 3 விதமான பாண்ட்டில் இருந்ததே. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ளதை ஆதாரத்திற்காக அப்படியே காப்பி செய்து போட்டேன். அது உங்கள் பாண்டிலும் என் லட்டர் குஷ்புவிலும் இருந்தது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எம்.பி. ரசூல் மைதீன் என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ள தங்கள் முகவரியில் இருந்து இவண் மேலப்பாளையம் தவ்ஹீத் குழு என கேள்வி வந்துள்ளது. 

எனது முழு முகவரியுடன்தான் பிரசுரம் வெளியிட்டுள்ளேன். மேலப்பாளையம் தவ்ஹீத் குழு எங்கு உள்ளது பொறுப்பாளர்கள் யார் யார்? என்று அறியத் தர வேண்டுகிறேன். எனது முழு முகவரியை குறிப்பிட்டுள்ள எனக்கு வயது 46 என்பதையும் அறியத் தருகிறேன்.

பி.ஜே. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை நான்  எழுதி உள்ளதாக குறிப்பிட்டிருந்தீர்கள். குற்றச்சாட்டு என்பதற்குரிய அளவுகோல் என்ன? நிரூபிக்கப்பட வேண்டியவை நிரூபிக்கப்படாத நிலையில் உள்ளவைகளுக்குப் பெயர் குற்றச்சாட்டு.  

நீங்கள் என்னைப் பற்றி கூறி உள்ளது குற்றச்சாட்டு. அதை நீங்களே குற்றச்சாட்டு என்றே குறிப்பிட்டுள்ளீர்கள். பி.ஜே. பற்றி  அடுக்கடுக்காக எழுதி உள்ளது குற்றச்சாட்டுக்கள் அல்ல. 1986லிருந்து  அவரது செயல்பாடுகளை அறிந்துள்ள அனைவருக்கும் தெரிந்த பகிரங்கமான உண்மை. அதனால்தான் என் வயதை குறிப்பிட்டுள்ளேன். உங்கள் வயதை அறியத்தரவும்.

அந்த உண்மை வரலாற்று அடிப்படையில்தான் உணர்வில் வந்த வாசகங்களில் உண்மைகள் மறைந்திருக்கிறது என்ற எனது யூகத்தை எழுதினேன். யூகிக்கிறேன் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நான்  எழுதி உள்ள முறையே யூகம்தான் என்பதை பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனது அனுபவத்தின் அடிப்படையிலான யூகம் தவறானது என்பதையும் பி.ஜே. உண்மையாளர் என்று நிரூபிக்கவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

3 பேர் தவிர மற்றவர்கள் ஒப்புக் கொண்டு, எல்லாரும் கையெழுத்திட்ட மாதிரி பி.ஜே. வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு உண்மையானது என்றால்  கையெழுத்துடன் கூடிய ஒப்பந்த பிரதியை போட்டோ பிரிண்டாக உணர்வில் வெளியிடச் செய்யுங்கள். இதன் மூலம் பி.ஜே. மீது நீங்கள் வைத்துள்ள நம்பகத் தன்மை சரியானது என்றும் நிரூபித்தவர்களாக ஆவீர்கள்

நீங்கள் என் மீது கூறி உள்ள குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இது உங்கள் யூகமா? அல்லது உண்மைக்கு புறம்பானவர்களிடம் இருந்து பெற்ற தகவலா? பிறர் கூறி நீங்கள் கேட்டிருந்தால் அவர் யார்? என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டும்.

துபையில் என்ன செய்தேன் என்ற உங்கள் கேள்விக்குரிய பதில் நீங்கள் விமர்சித்துள்ள வெளியீட்டிலேயே இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு புதிதாக பதில் எழுதினால் உங்களுக்கு பொய்யாகக் கூட தோன்றலாம். 

6-4-02ல் அண்ணன் பி.ஜே. அவர்களுக்கு அனுப்பிய கடிதம். அதற்கு பதிலடியாக வெளியான முஸ்லிம் டிரஸ்டு செயல்பாடுகள் எனும் பிரசுரத்திற்கு பதில் அளித்து 3-5-02 ல் நான் ஆற்றிய உரை. 

10-5-02ல் பக்ரிக்கு எழுதிய கடிதம் அனுப்பி உள்ளேன். இவை நியாயவான்களுக்கு உண்மையை விளக்கும். மீண்டும் நினைவூட்டுகிறேன். எல்லா நிர்வாகிகளும் கையெழுத்திட்டதாக பி.ஜே. உணர்வில் வெளியிட்டதை நம்புபவர்கள் எல்லாரும் கையெழுத்திட்டுள்ள காப்பியை வெளியிட்டு பி.ஜேன் நம்பகத் தன்மையை நிலை நாட்ட வேண்டுகிறேன்.
                                                           அன்புடன்:        
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி
                                                            28-4-2004
                                                             துபை
தாயக முகவரி: 22ஏ.சமாயினா  ஷேக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம். 627005

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.