முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம்.

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ஏப்ரல் 16-22, 2004 உணர்வு 3 வது பக்கத்தில் 'முக்கிய அறிவிப்பு' என்ற தலைப்பில் த.மு.மு.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனும் பெயரில் ஒரு செய்தியை உணர்வு ஆசிரியர் பி.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ளார். அந்த முக்கிய அறிவிப்பில் முக்கியமான வாசகம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வாசகத்தையும் அது கூறும் உண்மையையும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டத்தவர்கள் புரியாவிட்டாலும் முஸ்லிம்கள் புரிந்து விட்டார்கள்.

அந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கியமான வாசகம் கடந்;த கால சம்பவங்கள் பலவற்றை முஸ்லிம்களின் நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த சம்பவங்களையும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள காரணத்தையும் முக்கியமான வாசகத்தையும் ஆய்வதற்கு முன் த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் பற்றி பி.ஜே. தந்த நற்சான்றில் ஒரு பகுதியை முதலில் பார்ப்போம்.

த.மு.மு.க.வின் தலைமை நிர்வாகிகள் பற்றி பி.ஜே.

மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி நோக்கத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியை செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.

ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவங்கப்பட்ட த.மு.மு.கவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.

மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கி கொண்டதை நான் பார்க்கிறேன். இவ்வாறு தொடரும் நற்சான்றுகளையும் இந்த நற்சான்றுகளை எப்பொழுது அவர் தந்தார் என்பதையும் பிறகு பார்ப்போம். இப்பொழுது முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகத்தைப் கவனியுங்கள்.

முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கியமான வாசகம்.

"கசப்புணர்வின் காரணமாக உண்மைக்கு முரணான எந்தக் காரணத்தையும் இரு தரப்பும் கூறக்கூடாது. மேற்கண்ட உண்மைக் காரணத்தை மட்டுமே கூற வேண்டும் என்ற கருத்தும் இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டது" இதுதான் அந்த வாசகம்.

உண்மைக்கு முரணான தரப்பு.

உண்மைக்கு முரணான எந்தக் காரணத்தையும் இரு தரப்பும் கூறக்கூடாது என்ற இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது ஏன்? என்பதை முதலில் பார்ப்போம். இப்பொழுது இரண்டு தரப்புகளாகி விட்ட அந்த 2 தரப்பினருமோ அல்லது அதில் ஒரு தரப்போ முந்தைய நிகழ்வுகளில் கசப்புணர்வின் காரணமாக உண்மைக்கு முரணான காரணங்களை கூறியவர்களாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இப்படி ஒரு வாசகம் இடம் பெறச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு தரப்புகளில் ஒரு தரப்பான த.மு.மு.க தலைமை நிர்வாகிகளைவிட இன்னொரு தரப்பாகிவிட்ட பி.ஜே. அவர்களைத்தான் முஸ்லிம்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அந்நஜாத்திலிருந்து விலகிய போது.

அந்நஜாத் பத்திரிக்கை மூலம் பிரபலமான அவர் அதிலிருந்து ஓராண்டில் வெளியேறினார். அப்பொழுது ஹிர்னியா ஆபரேஷனுக்காக விடுப்பில் செல்வதாகக் கூறி திருச்சி தனது உடல் நிலைக்கு ஒத்து வரவில்லை என்றுதான் முதலில் காரணம் கூறினார். பிறகு அமானித மோசடியே தனது விலகலுக்கு உண்மையான காரணம் என்றார்.

புரட்சி மின்னலில் இருந்து விடுபட்டபோது

இவரை நம்பி இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸி. மதுரையில் வாங்கிய புரட்சி மின்னல் பத்திரிக்கையை விட்டு விட்டு அல்ஜன்னத் பத்திரிக்கைக்கு ஆசிரியராகப் போனார். துபை ஐ.ஏ.ஸி. புரட்சி மின்னலை வாங்கும் முன்பே அல்ஜன்னத் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருக்க ஒப்புக் கொண்டதே காரணம் என்று முதலில் கூறினார். பிறகு துபை ஐ.ஏ.ஸியின் நான் என்ற அகம்பாவ-முதலாளித்துவ போக்கே காரணம் என்றார்.

ஜாக்கில் இருந்து விலகிய போது.

ஜாக்கில் இருந்து விலகினார். தான் செய்ய இருக்கும் செயல்களால் தனக்கு ஏற்படும் பாதிப்பு தவ்ஹீது அமைப்பான ஜாக்குக்கும் ஏற்படக் கூடாது என்பதே விலகியதற்கு காரணம் என்று முதலில் கூறினார். பின்னாளில் ஜாக்கில் நடந்த ஊழல்களே தன் விலகளுக்கு காரணம் என்றார்.

கல்விச் சங்கத்தை கலைக்கக் கூறிய போது.

ஹாமித் பக்ரியை தலைவராக வைத்து நடத்திய கல்விச் சங்கத்தை கலைக்கக் கூறினார். கல்விச் சங்கம் கடனில் மூழ்கியதே கலைக்கக் கூறியதற்கு காரணம் என்று முதலில் கூறினார். பிறகு தீவிரவாத செயல்களே கலைக்கக் கூறியதற்கு காரணம் என்றார்.

கூட்டமைப்பு தலைவரிலிருந்து பக்ரியை விடுவித்த போது.

கூட்டமைப்பின் தலைவராக இருந்த ஹாமித்பக்ரியை மேளாண்மைக்குழுவில் சேர்த்தார். ஒருவரே நீண்ட நாள் தலைவராக இருக்கக் கூடாது என்பதே காரணம் என்று முதலில் கூறினார். பிறகு தீவிரவாதிகளுடனான தொடர்பே தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றியதற்கு காரணம் என்றார்.

பி.ஜே. இடம் உள்ள மீடியா பலம்.
இப்படி முன்னுக்குப் பின் முரணானாக பி.ஜே.ன் கூற்றுக்கள் பற்றி முஸ்லிம்கள் பேசிக் கொள்வதை தொகுத்தால் அதை புத்தகமாகத்தான் வெளியிட வேண்டும். இவற்றில் எது உண்மையான காரணம் எது உண்மைக்கு முரணானது என்று கேட்டால் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்ற சவாலுடன் முடித்துக் கொள்கிறார். எதிர் தரப்பு அவரது சவாலை ஏற்றால் அதை கண்டு கொள்வதே இல்லை.

சமீபத்தில் கூட பி.ஜே. விடுத்த சவாலை ஏற்று அபூ அப்துல்லா ஒரே மேடையில் மக்கள் மன்றத்தில் சந்திக்கத் தயார் என்று எழுதி உள்ளார். பி.ஜே. கண்டு கொள்ளவே இல்லை. பி.ஜே. இடம் உள்ள மீடியா பலத்தால் அவருடைய கூற்று மட்டும் எளிதில் மக்களை சென்றடைந்து விடுகிறது.

விரிவாகப் பார்த்தால் கிடைக்கும் தெளிவு.

அந்த முக்கிய வாசகத்தில் கசப்புணர்வின் காரணமாக என்ற வார்த்தை கசப்புணர்வு உள்ளது என்பதை உணர்த்துகிறது. மேற்கண்ட உண்மைக் காரணத்தை மட்டுமே கூற வேண்டும் என்ற வார்த்தை மேற்கண்டது உண்மை அல்ல என்பதை பிரதிபலிக்கிறது. கருத்தும் என்ற வார்த்தை எப்படி சொல்வோம் என்று பேசப்பட்டு இப்படி சொல்வோம் என்ற கருத்து இருதரப்பாலும் ஏற்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. இவற்றை விரிவாகப் பார்த்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

ஒவ்வொரு பிரிவின் போதும் முதலில் ஒரு காரணத்தையும் பிறகு ஒரு காரணத்தையும் கூறி உள்ளவர் பி.ஜே. என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த பி.ஜே. இது வரை எந்த அமைப்புமே செய்யாத இந்த ஒப்பந்தம் பற்றி பின்னாளில் மேற்கண்டவாறு விரிவுரை கூற மாட்டார் என்பது என்ன நிச்சயம். இப்படி கூறுவாரோ கூற மாட்டாரோ அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தவ்ஹீது பிரச்சனைதான் காரணம் என்பது உண்மை என்று நம்ப முடிகிறதா?

துணை நின்ற பி.ஜே.

7 ஆண்டுகள் மதரஸாவில் குப்பை கூட்டினால் மவுலவி பட்டம் கிடைத்து விடும் என்று கூறும் அனுபமிக்க ஷம்சுல்லுஹா ஸைபுல்லாஹ் ஹாஜா, எம்.எஸ்.சுலைமான் உட்பட பல மவுலவிகள் 17-09-2000 ஞாயிறு அன்று எனது வீட்டிற்கு வந்தார்கள். த.மு.மு.க தலைமை தவ்ஹீது விரோதமாக உள்ளது. பி.ஜே.யும் அதற்கு துணை நிற்கிறார் என்று கூறினார்கள்.

கைப்பற்று அல்லது அழி.

இன்றைய சூழலில் த.மு.மு.க வை நாம் புறக்கணிக்க முடியாது. அது வளர்ந்து விட்ட அமைப்பு தவ்ஹீதுவாதிகளால் வளர்க்கப்பட்ட அமைப்பு. ஒன்று அதை நாம் கைப்பற்ற வேண்டும். அல்லது அதை அழிக்க வேண்டும். குறிப்பாக இனி மக்களுக்கு சேவைப் பணிகள் மக்களை ஈர்க்கும் அறப்போராட்டங்கள் போன்றவற்றை தவ்ஹீது ஜமாஅத் பெயரால் செய்ய வேண்டும் என்று நான் மவுலவிகளிடம் சொன்னேன். இதை அறிந்த பி.ஜே. மவுலவிகளை கட்டுப்படுத்தி விட்டு என்னை ஓரங்கட்டும் வேலையில் ஈடுபட்டார்.

தவ்ஹீதுவாதிகளை இழிவு படுத்திய பி.ஜே.

அது மட்டுமா தவ்ஹீது பிரச்சாரகராக பிரபலமாகி விட்ட தான் அமைப்பாளராக இருப்பதால்தானே தவ்ஹீதுவாதிகள் த.மு.மு.க. தலைமை நிர்;வாகம் தவ்ஹீதுவாதிகளிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள் என்று அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.
அந்த விலகல் அறிக்கiயில்தான் தவ்ஹீதவாதிகள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் உள்ளவர்கள் என்று தவ்ஹீதுவாதிகளை இழிவு படுத்தினார். த.மு.மு.க. தலைமையினரை உயர்வு படுத்தினார். த.மு.மு.க.வின் தலைமை நிர்வாகிகள் பற்றி பி.ஜே. என்ற தலைப்பில் முதல் பக்கம் உள்ளதை மீண்டும் படிக்கவும். அன்று அப்படி நடந்தவர் இன்று விலகலுக்கு தவ்ஹீது கொள்கைதான் காரணம் என்றால் அறிவு உள்ளவர்கள் நம்புவார்களா?

சோரம் போனவர்கள்.

என் வீட்டிற்கு வந்து குறை சொன்ன எல்லா மவுலவிகளும் தானும் தனித்தனியாக சரண்டர் ஆகி விட்டதை ஓராண்டு கழித்து துபை வந்திருந்த லுஹா கூறினார். மவுலவிகள் சோரம் போய் விட்டதால்; உடனே 25.01.2002. அன்று ஷhர்ஜாவில் மவுலவி அல்லாதவர்களை கூட்டி த.மு.மு.க தவ்ஹீதுக்கு விரோதமாக உள்ளதாக மவுலவிகள் என் வீட்டிற்கு வந்து கூறியதையும் அவர்கள் சோரம் போய் விட்டதை லுஹா என்னிடம் கூறும் போது இருந்த 2 சாட்சிகளுடன் கூறினேன். அதிலிருந்தும் சிலர் சோரம் போனார்கள் அதன் விளைவு த.மு.மு.கவில் இருந்து நீக்கப்பட்டேன்.

சிந்திப்பவர்கள் நம்புவார்களா?

மவுலவிகள் சொன்ன த.மு.மு.கவின் தவ்ஹீது விரோத போக்கை மக்கள் மத்தியில் நான் வைத்தால் அது எடுபடக் கூடாது என்ற நோக்குடன் பெருந்தொகை வாங்கி விட்டதாக அவதூறு பிரசுரம் வெளியிட்டவர் பி.ஜே. அன்று அப்படி நடந்தவர் இன்று விலகலுக்கு தவ்ஹீது கொள்கைதான் காரணம் என்றால் நடிகர் நடிகைகளின் ரசிகர்கள் போல் உள்ளவர்கள் நம்புவார்கள். அல்லாஹ் கொடுத்த அறிவைக் கொண்டு உரிய முறையில் சிந்திப்பவர்கள் நம்புவார்களா?

தவ்ஹீதுவாதிகள் எப்படிப்பட்டவர்கள்.

கொள்கையா மக்கள் சக்தியா என்றால் கொள்கைதான் முக்கியம் என்போம் என்று இன்று கூறும் தவ்ஹீது அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட அன்று த.மு.மு.க. தவ்ஹீதுக்கு அப்பாற்பட்டது என்று கூறியவர்கள்தான். தவ்ஹீதுவாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று பி.ஜே. எழுதியுள்ளது இவர்களை ஆதாரமாக வைத்துதான்.

தவ்ஹீதுதான் உயிர் என்பது உண்மையானால்.

தவ்ஹீதுதான் பி.ஜே.க்கு உயிர் என்பது உண்மையானால் ஜாக்கிலிருந்து வெளியேறியதும் அரசியல் அமைப்பு கண்டிருப்பாரா? தவ்ஹீது பிரச்சாரத்தை உயிர் மூச்சாக செய்திருப்பாரா? தவ்ஹீது பிரச்சாரத்திற்கு தேதி தருவதில்லை என்பதுதானே இன்றும் அவருடன் இருக்கும் மவுலிகள் என்போர் அன்று வைத்த குற்றச்சாட்டு.

உணர்வில் தவ்ஹீது பிரச்சார விளம்பரங்கள்.

த.மு.மு.க. தவ்ஹீதுக்கு விரோதமாகச் செல்கிறது என்று மவுலவிகள் என்னிடம் சொன்ன குற்றச்சாட்டு பகிரங்கமாக ஆகிவிட்ட பிறகுதான் உணர்வில் தவ்ஹீது பிரச்சார நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை அதிகமாக பி.ஜே. வெளியிட்டார். ஏ.எஸ். அலாவுதீன் பாக்கர் போன்றவர்களை தவ்ஹீது பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்து தானும் அதிகமான தவ்ஹீது பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் மூலம் த.மு.மு.க. தவ்ஹீது விரோத அமைப்பு அல்ல என்று மக்கள் நம்ப வழி செய்தார். அப்படியானால் இவர் விலகலுக்கு என்னதான் காரணம் என்று கேட்கலாம். இதற்குரிய காரணத்தை நாம் புதிதாக எழுதவில்லை.

விலகலுக்கு என்னதான் காரணம்.

பி.ஜே.ன் சவாலை ஏற்று 1-12-2002 ல் பி.ஜே.க்கு எழுதி உள்ள கடிதத்தில் ----- தலைவர் பதவி வேண்டாம் என்பீர்கள். எந்த தலைமைக்கும் நீங்கள் கட்டுப்பட மாட்டீர்கள். தலைவர்களெல்லாம் உங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அப்படி இருந்தால்தான் அவர்களை சிறந்த தலைமை என்று காட்டி நீங்கள் விரும்பும் பணியை தொடர்வீர்கள் என்று எழுதி இருந்தேன் இதுதான் காரணம்.

கொத்தடிமையாக இருந்தால்.

தனிமனித வழிபாட்டை தரை மட்டம் ஆக்குவோம் என்பார். எல்லாரும் தனக்கு அடிமையாக இருக்கணும் என்று விரும்புவார். அதுவும் சாதாரண அடிமையாக அல்ல கொத்தடிமையாக இருக்கணும் என்று எதிர் பார்ப்பார். அப்படி கொத்தடிமையாக இருப்பவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை நியாயப்படுத்தி அவரின் வார்த்தை ஜாலத்தால் அவர்களை பரிசுத்தப் படுத்திடுவார்.

தகுதியை உணர்ந்த ஜவாஹிருல்லாஹ்.

ஐ.நா.வின் ஜெனிவா மாநாட்டில் பேசி விட்டு வந்தது முதல் ஜவாஹிருல்லாஹவுக்கு திமிர் வந்து விட்டது என்று 6 மாதங்களுக்கு முன்பே பி.ஜே. வகையறாக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். ஜெனிவா சென்று வந்தபின் தன் தகுதியை உணர்ந்து விட்டார் ஜவாஹிருல்லாஹ். பி.ஜே.ன் சுயநலத்திற்காக பி.ஜே. ஏற்படுத்தும் தேவை இல்லாத முட்டுக்கட்டைகளை உடைத்து தலைவராக செயல்பட ஆரம்பித்தார். அதுதான் பி.ஜே. வகையறாக்கள் அப்படி பேச காரணம். அப்பொழுதே சொன்னேன் ஜவாஹிருல்லா ஓரங்கட்டப்படுவார் அல்லது பி.ஜே. வெளியேறுவார் என்று. எப்படி சொன்னேன் என்றால் அனுபவத்தின் அடிப்படையில் சொன்னேன்.

4 மாதங்களுக்கு முன்பே சொன்னது.

த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்டதுதான் முஸ்லிம் டிரஸ்ட்டும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டும்;. நீங்கள் த.மு.மு.க.வின் தலைமையில் எந்த பொறுப்பிலும் இல்லை. எந்த செயல்பாடும் செய்வது இல்லை. எனவே டிரஸ்ட்டுகளின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுங்கள். டிரஸ்ட்டை த.மு.மு.க. தலைமை நிர்வாகிகளிடம் ஒப்படையுங்கள் என்பதுதான் பி.ஜேயை நோக்கி தலைமையை உணர்ந்தவர்கள் வைத்த கோரிக்கை. 4 மாதங்களுக்கு முன்பே நண்பர்களிடம் குறிப்பாக மேலப்பாளையவாசிகளிடம் சொன்னேன். டிரஸ்ட்டுகளை கைப்பற்ற கேன்வாஸ் நடக்கிறது. டிரஸ்டுகள் பி.ஜேக்கு என்று ஆனதும் த.மு.மு.கவிலிருந்து பி.ஜே. பாக்கர் வெளியேறுவார்கள் என்று. வஹியா வந்தது என்று கேட்காதீர்கள். அந்த அளவுக்கு சொத்துக்கு ஆசைப்பட்டவர் நடத்திய கேன்வாசிங் கடல் கடந்து மணந்தது. த.மு.மு.க அமைப்பாளர் பதவியை விட்டவர் டிரஸ்டு தலைவர் பதவியை கட்டியாக பிடித்துள்ளதை மேலப்பாளையம் ஷம்சுல்லுஹாவின் பொய் சத்தியம் பற்றிய பிரசுரத்தில் அப்பொழுதே குறிப்பிட்டுள்ளேன்.

பணத்தையோ பதவிகளையோ விரும்பாதவரா பி.ஜே.?

உணர்வு ஒற்றுமை மூலம் ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கில் பணம் புரளும் நிறுவனம்தான் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்பது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், இன்று ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் ஆகி விட்ட இடம்தான் முஸ்லிம் டிரஸ்ட்டு என்பது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் வாடகை வருமானமே ஒரு லட்சத்தை தாண்டும். பணத்தையோ பதவிகளையோ விரும்பாதவர் பி.ஜே. என்று மக்களை நம்ப வைத்துள்ள பி.N.ஜ. இன்று வரை இவற்றின் தலைவர் பதவியை விட்டு விலகவில்லை.

உடுத்த வேட்டியுடன் வெளியேறிய பி.ஜே.

அந்நஜாத்திலிருந்து உடுத்த வேட்டியுடன் வெளியேறிய பி.ஜே. புரட்சி மின்னலில் இருந்து மேலாடையுடன் மட்டும் வெளியேறிய பி.ஜே. அல்ஜன்னத்திலிருந்து சட்டையுடன் வெளியேறிய பி.ஜே. இப்பொழுதுதான் உஷhராக பத்திரிக்கையுடன் வெளியேறி உள்ளார் என்று பி.ஜே. வகையறாக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அன்றும் உஷhர்தான் இன்றும் உஷhர்தான்.

அந்நஜாத் அதிகமாக இலவச பிரதிகள் கொடுக்க வேண்டிய ஆரம்ப நிலையில் இருந்தது. புரட்சி மின்னல் போட்டுக் கட்டப்படும் நிலையில் இருந்தது. அல்ஜன்னத் நஷ;டத்தில் இருந்தது. அவற்றை அப்படியே விட்டு விட்டு வெளியே வந்ததுதான் அன்று அவருக்கு லாபம். இன்று கைப்பற்றி வெளியேறுவதுதான் அவருக்கு லாபம். பி.ஜே. உஷhரான பேர்வழிதான் அன்றும் இன்றும்.

சிந்திக்க வேண்டிய ஒன்றா இல்லையா?

எல்லாரும் கையெழுத்திட்டுள்ளதாக வந்துள்ள செய்திதான் பலரை நம்ப வைத்துள்ளது. மக்கள் இயக்கம் நடத்துபவர்கள் மனதில் எந்த ஒரு பிரிவினருக்கும் எதிரான கருத்து இருந்தாலும் அதை எளிதில் வெளியிடுவார்களா? அதுவும் எழுத்துப் பூர்வமாக வெளியிடுவார்களா? சுன்னத் ஜமாஅத்தினரை இழுப்பதற்காக இருக்கும் தவ்ஹீதுவாதிகளை இழக்கும் வண்ணமாக உள்ள தீர்மானத்தில் கையெழுத்திட்டு பகிரங்கப்படுத்துவார்களா? இதில் நடந்துள்ள மெஸ்மரிஸம் என்ன? சிந்திக்க வேண்டிய ஒன்றா இல்லையா?

மக்கள் அனுதாபத்தை பெறுவது எப்படி?

ஓவ்வொரு பிரிவின் மூலமும் மக்கள் அனுதாபத்தை பெறுவது எப்படி என்பதை அனுபவ ரீதியாக அறிந்து வைத்துள்ள பி.ஜே. அனுதாப அலை மூலம் தனது செல்வாக்கை தக்க வைக்க அவர் தேர்ந்தெடுத்து எழுதி வெளியிட்டுள்ளதுதான் முக்கிய அறிவிப்பில் உள்ள முழு வாசகமும். அந்த வாசகங்கள் பிறர் எண்ணத்தில் உருவானது அல்ல. கடந்த காலங்களில் தன் சுயநலத்திற்காக கமாலுத்தீன்மதனி ஹாமித்பக்ரி போன்றவர்களை தன் வார்த்தை ஜாலங்களால் வீழ்த்திய அதே பி.ஜே.யின் வாசகம்தான் அது!

சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வெளிவராத உண்மை.

நிர்வாகக் குழு கூடினால் என்ன பேசப்பட்டாலும் வெளியில் சொல்லக் கூடாது. எப்படி வெளியில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறோமோ அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று முதலில் சத்தியம் வாங்குவார். அந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு உண்மை இப்போதைக்கு வெளி வராமல் இருக்கலாம்.

10ஆம் தேதி மட்டும் பேசப்பட்டதா? பல நாள் பேசப்பட்டதா? அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாதா நிலைக்கு உள்ளானாரா? அதை ஒட்டி டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? பிறகு கண்ணியம் கருதி விலகிச் செல்ல அனுமதிக்கப்பட்டாரா? பேச்சு வார்த்தையிலேயே காலம் கடத்தி உணர்வையும் சொத்துக்களையும் கைப்பற்றியதும் அப்படி செய்தி வெளியிட்டாரா? காலந்தாழந்தாலும் உண்மைகள் வெளி வராமல் இருக்கப் போவது இல்லை. உண்மையிலேயே இப்படி எழுதப்பட்ட தீர்மானத்தில் எல்லாரும் கையெழுத்திட்டிருந்தால். அதற்குப் பின்னணியும் பி.ஜே.தான் என்பதை அவரை அறிந்துள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

எதிரியை கவிழ்க்க திட்டம் போடுபவர்.

தான் எதிரியாக கருதுபவர்களை கவிழ்ப்பதற்கு இவரே இது மாதிரி திட்டங்களைக் கூறுவது வழக்கம். கமாலுத்தீன் மதனியை ஜாக் அமீர் பொறுப்பில் இருந்து விலகச் செய்ய ஒரு திட்டம் சொன்னார். பி.ஜே.யைப் பார்த்து அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று நான் சொல்ல வேண்டும். உடனே அவர் ராஜினாமா செய்து விடுவார். அப்பொழுது கமாலுத்தீன் மதனியைப் பார்த்து அமீர் பொறுப்பை ராஜினாமா செய்யுங்கள் என்று வேர்க்கிளம்பியைச் சேர்ந்த ஒருவர் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்தார். நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த திட்டத்தை வேர்க்கிளம்பியில் வைத்து சொல்லும் போது ஹைதர் அலியும் இருந்தார்.

பி.ஜேயே ஆள் வைத்து தனக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம்.

1995 ல் முஸ்லிம் பேரவை தலைவர் பதவியில் இருந்த பி.ஜே. அவரது சுயநலனுக்காக அதில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போதும் அவர் இயல்பாக ராஜினாமா செய்யவில்லை. அவரே அவருக்கு எதிராக நிர்வாகக் குழுவில் பேச அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, ஜின்னா போன்றவர்களை செட்டப் செய்தார். எப்படி தனக்கு எதிராக பேச வேண்டும் என்று சொல்லியும் கொடுத்தார். பிறகு நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் எதிர்ப்பின் காரணமாக ராஜினாமா செய்கிறேன் என்று விலகினார். இதற்கு பல சாட்சிகள் இருக்க அவர் வாயால் ஒப்புக் கொண்டுள்ள ஆடியோ ஆதாரமும் நம்மிடம் உள்ளது. எனவே இப்பொழுதும் அந்த செட்டப்தான் நடந்திருக்கும் என்பதுதான் பி.ஜே. பற்றி நன்கு அறிந்தவர்கள் நிலை.

கைப்பற்றி இருப்பாரா? விலகி வந்திருப்பாரா?

குக்கிராமத்தில் கூட தன் எதிரணியை முறியடிக்க பொதுக்குழு என்ற பெயரால் மக்களை கூட்டி நிர்வாகங்களை கைப்பற்றி தன் வகையறாக்களுக்கு கொடுத்து வருபவர் பி.ஜே. அந்த பி.ஜே, தானும் தவ்ஹீது ஜமாஅத் செயல்பாடுகளும்தான் த.மு.மு.கவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று தலைமை நிர்வாகிகள் தாங்களாகத்தான் கூறினார்கள் என்றிருந்தால், பி.ஜே. செட்டப் செய்யவில்லை என்பது உண்மையாக இருக்குமானால் பி.ஜேயின் இயல்புப்படி மாநில பொதுக் குழுவை கூட்டி உண்மையை நிலைநாட்டி தலைமை நிர்வாகத்தை கைப்பற்றி இருப்பாரா? விலகி வந்திருப்பாரா?

சொத்து சுருட்டலை மறைக்க தவ்ஹீது பிரச்சனை என்கிறார்.

இது தவ்ஹீது பிரச்சனை அல்ல சொத்து பிரச்சனைதான். த.மு.மு.க வை விட்டு வந்தவர் த.மு.மு.க மூலம் சேர்த்த சொத்தை விட்டு விட்டு வரவில்லையே. த.மு.மு.க என்ற பேரியக்கத்தை தியாகம் செய்து விட்டு வந்தவர்போல் மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு அவர் செய்த சொத்து சுருட்டலை மறைக்க தவ்ஹீது கொள்கை பிரச்சனை போல் ஆக்கி விட்டார்.

தவ்ஹீதவாதிகளைவிட சிறந்தது த.மு.மு.க தலைமை.

தவ்ஹீதவாதிகளைவிட சிறந்தவர்கள் என்று த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் பற்றி அல்லாஹ்வின் மீது ஆணை இட்டு நற்சான்று வழங்கிய பி.ஜே. அத்தோடு நின்றாரா? தொடர்ந்து எழுதியதை பாருங்கள்.

1. த.மு.மு.கவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை. 2. கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை. 3. எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும் தியாக மனப்பான்மை. 4. எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராத தன்மை. .5. எத்தகையை மிரட்டலுக்கும் அடக்கு முறைகளுக்கும் அஞ்சாத துணிவு.

6.கலவரத் தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப் பணியாற்றும் பாங்கு. 7. தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம். 8. எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல். 9. சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் முன்னிறுத்திக் கொள்ளக்கூடிய பொறுப்புணர்வு. 10. உணர்வுகளைத் தூண்டி விட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக்கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல். இப்படி பட்டியல் இட்டவர்

இப்படி சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநிலத் தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் எழுதினார்.

இத்தோடு நின்றாரா? இவரது இந்தக் கூற்றுக்கு எதிரான வேறு காரணம் கற்பித்தால், மறுமை நாளில் அவர்களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையிடுவேன். என்றும் எழுதினார். தவ்ஹீதுவாதிகளிடம் த.மு.மு.க தவ்ஹீது ஜமாஅத்தின் பினாமி அமைப்பு என்று ஏமாற்றியது போல், இப்படி புகழ்ந்து எழுதும்போதும் த.மு.மு.க ஆரம்பத்தின் போதும் தவ்ஹீது வேறு த.மு.மு.க வேறு என்று ஜவாஹிருல்லாஹ் போன்றவர்களை ஏமாற்றி உள்ளார்.

த.மு.மு.க எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டு விட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். என்று முத்தாய்ப்பாகவும் எழுதினார். ஏன் எழுதினார் ஏஸியில் வாழும் இவரது சொகுசு வாழ்வுக்கும் ஓசி பயணங்களுக்கும் உதவியாக இருக்கும் டிரஸ்டுகளை அப்பொழுது அவர்கள் கேட்கவில்லை. அவரது சுயநலனுக்காக அன்று புகழ்ந்த அமைப்பை அவரது சுயநலனுக்காகவே இன்று சிதறுண்டு போகணும் என்கிறார்.

மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் பேசுவதால் நம்பும் மக்கள் பி.ஜேயின் சுயநலத்திற்காக தனி நபர்கள் மீது பழி சுமத்தும் போது ஆதாரம் இல்லாமல் நம்பி விடுகிறார்கள்.

ஓவ்வொரு பெற்றோருடைய கவனத்திற்கும்.

ஓவ்வொரு பெற்றோருடைய கவனத்திற்கும் சொல்கிறேன். இவரது மார்க்க பேச்சை கேட்க பொதுத் திடலுக்கு உங்கள் பிள்ளைகள் செல்லட்டும். இவர் நடத்தும் அமைப்பில் பொறுப்பு வகிக்க விடாதீர்கள். பொறுப்பு வகித்தால் உங்கள் பிள்ளை உங்களுக்கு இல்லை என முடிவு செய்து விடுங்கள். இவர் ஜாக்கிலிருந்து வெளியே வந்தபோது 20 வயது இளைஞர்களாக இவர் பின்னே சென்றவர்கள், இன்று 30 வயதினராக பாளை கோவை சிறைகளில் உள்ளார்கள். அவர்கள் குடும்பங்களுக்கும் நிரந்தர உதவி செய்ய என்று வசூலித்து அமைத்த டிரஸ்ட்டை தனதாக்கி போய் விட்டார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இவரது சுயநல பிரச்சாரத்திற்காக முன்பு இலவச வீடியோ வெளியிட்டார். இப்பொழுது விலகியது ஏன் என மலிவு விலை சி.டி. வெளியிட்டுள்ளார். தவ்ஹீது கொள்கை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிருக்கும் மேலானதாகும் என்று எழுதி உள்ளவர் என்றைக்காவது இலவசமாகவோ மலிவு விலையிலோ தவ்ஹீது சம்பந்தமானதை மக்களுக்கு கொடுத்து உள்ளாரா? இந்த தவ்ஹீதுவாதி?

தொழுகை உட்பட எந்த வணக்கமும் இல்லாத கொள்கையற்றவன்.

தொழுகை உட்பட எந்த வணக்கமும் இல்லாத கொள்கையற்றவன் சத்தாம் உசேன். அவன் குவைத் எனும் முஸ்லிம் நாட்டை ஆக்ரமித்தான். அவனது அயோக்கியத் தனத்தை - ஆக்கிரமிப்பை - மோசடியை மறைக்க, முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்ப பைத்துல் முகத்தஸை மீட்போம் என கோஷமிட்டான் அது போன்றதுதான் டிரஸ்டுகளை ஆக்ரமித்து விட்டு தவ்ஹீதைக் காப்போம் என்கிற பி.ஜேயின் கோஷமும்.

ஒரே மேடைக்கு வரட்டும்.

பி.ஜே.யின் சவாலை ஏற்று 1-12-2002ல் நான் அவருக்கு எழுதி உள்ள கடிதத்தின்படி ஒரே மேடைக்கு வரட்டும். பொது வாழ்வில் இவர் ஒரு பொய்யர். தவ்ஹீது பிரச்சாரத்தில் இவர் ஒரு சுய நலமி. பொய்யை நிலைநாட்ட ஷகிளிசரின்| இன்றி அழுவதில் வல்லவர். த.மு.மு.கவால் சமுதாயம் அடைந்த பயனைவிட அதிகம் பயன் அடைந்தவர் பி.ஜே. என்பது உட்பட இவரது சுய ரூபத்தை மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன் இன்ஷh அல்லாஹ்.

குருவி சேகரித்த மாதிரி சிறுகச் சிறுகச் சேகரித்து கோடியாக ஆன சமுதாய சொத்தை தனதாக்க நினைக்கும் தெருக் கோடியில் நின்ற சுயநலமிகளிடம் சமுதாயம் இனியும் ஏமாறக் கூடாது என்றால் இந்தப் பிரசுரம் கிடைக்கப்பெறும் ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற பிரதி எடுத்து வெளியிட வேண்டும் அன்புடன்:கா.அ.முஹம்மதுபழ்லுல்;இலாஹி,துபை,யு.ஏ.இ.
தாயக முகவரி: 22ஏ.சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம். 627005

இறைவனின் திருப்பெயரால்.
அனைவரின் மீதும் ஓர் இறையின் சார்ந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக! மான்புமிகு பி. ஜே. அவர்களை த.மு.மு.க தூக்கி எறிந்து விட்டதாக திட்டமிட்டு பரப்பும் செய்தி. அதன் பிண்ணியும், உண்மையும்.பி. ஜே. யுடன் த.மு.மு.க.,நடந்தது என்ன??? எதற்கும் ஆசைப்படாதவர். ராஜினாமா செய்வதற்கு 2 வாரத்திற்கு முன் உணர்வு இதழை கைப்பற்றியது ஏன்?1 6-4 வெள்ளிக்கிழமை மேலப்பாளையத்தில் லுஹா ஆற்றிய ஜும்மா உரை.... நச்சுக் கருத்து த.மு.மு.கவை பாடையில் ஏற்றுவோம் சூளுரை.த.மு.மு.க சொத்துக்கள் அனைத்தும் எனக்காகவே வழங்கப்பட்டது ஆகவே, எனக்கே சொந்தம்... சொத்துக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு... நிகழ்வுகள் திடீரென நடந்ததா? திட்டமிட்டு நடத்தப்பட்டதா?? நடந்தது என்ன??? எங்கே! எப்போது!! யார்; யார்... விரைவில்...

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.