59 - 66 சாப்பிடுவதா? உண்பதா? தின்பதா? புசிப்பதா? உட்கொள்ளுதா? சுவைப்பதா? ( பாகம் -16)

இதுவரையிலான 66 வார்த்தைகளை தெரிவதன் மூலம் குர்ஆனில்   2706    இடங்களில் வரும் வார்த்தைகளை அறிந்தவர்களாக ஆகிறீர்கள்.


இதில் நாம் காண உள்ள  அக்ல் (சாப்பிடுதல்) என்ற ஒரு மூலச்  சொல்லில் இருந்து வந்துள்ள வார்த்தைகள் குர்ஆனில் 29 விதமாக  116 முறை இடம் பெற்றுள்ளது. 

https://mdfazlulilahi.blogspot.com/2021/04/59-66-16.html



சாப்பிடுவது, உண்பது, தின்பது, புசிப்பது, உட்கொள்ளுவது, மேய்வது, சுவை,  புளிப்பு, மெல்லப்பட்ட போன்ற பொருள்கள் தரக் கூடிய வார்த்தை. 

அதை இடத்துக்கு தக்கவாறு எவ்வாறு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை ஆயத்து நம்பர்களுடன் இதன் கடைசியில் இடம் பெறச் செய்து. அடையாளம் காட்டி உள்ளோம்.  இது போலவே முந்தைய வெளியீடுகளிலும் அடையாளம் காட்டி இருக்கிறோம்.  


[10:35 am, 22/04/2021] ..............: ما شاء الله بارك الله فيك

குர்ஆனின் 800 பயன்பாட்டுச் சொற்களையும் இடத்திற்கேற்றார் போல் பொருள்படும் அது சுட்டும் பொருள்களையும் இறைவன் நாடினால் பதிவிடவும் 

[10:37 am, 22/04/2021]  ..............:: நீங்க குறிப்பிடும் விசயங்களை விளங்கிக்கொள்ள குறைந்த அளவு அரபு இலக்கணம் தெரிந்தவர்களுக்கே நன்றாக விளங்கும்

[1:00 pm, 22/04/2021] Fazlul: இடை இடையே பதிவு செய்து உள்ளேன்.  முதல் நோக்கம் 800 சொற்களை அடையாளம் காட்டுவதே.

[1:01 pm, 22/04/2021]  ..............:: الحمد لله خير

[1:01 pm, 22/04/2021]  ..............: இறைவன் உங்கள் பணியை லேசாக்குவானாக

------------------


திடப் பொருள்களை சாப்பிடுதல்  என்றும் திரவப்   பொருள்களை குடித்தல் என்றும் கூறும் வழக்கம்  தமிழில் உள்ளது போல் எல்லா மொழிகளிலும்  உண்டு. 


அதே சமயம் சோறு  சாப்பிடுங்கள்  என்பது போல் டீ,காபி,பால் சாப்பிடுங்கள்   என்றும்  கூறுவோம். அது மாதிரி  கானா காவ் என்பது போல் சாய் காவ்  என்று கூறும் வழக்கம் பங்களாதேஷ் போன்ற நாட்டு மக்களிடம் உண்டு. 


இது பிற நாட்டு மக்களுக்கு அருவெறுப்பாகவும் கொச்சையாகவும் தெரியும். சோறு  உண்ணுங்கள் என்பது போல்  டீ,காபியை  உண்ணுங்கள்  என்று கூறினால் எப்படி கொச்சையாக இருக்குமோ அப்படி கொச்சையாகத் தோன்றும்.  


மிருகங்கள் சாப்பிடுவதைப் பார்த்து  தின்னட்டும்,  மேயட்டும் என்றால் அது விருப்பத்தின்  வெளிப்பாடு.  


மனிதர்களை சாப்பிடுவதைப் பார்த்து  மேயட்டும் தின்னட்டும் என்று சொன்னால்  அது விருப்பத்தின்  வெளிப்பாடாகுமா?  வெறுப்பின்  வெளிப்பாடாகுமா? 


உண்ணு  என்பதையே சற்று அழுத்தமாக உண்ண்ணு என்று கூறினாலும் கடுமையான வெறுப்பான வார்த்தையாக ஆகி விடும். 


உண்ண்ணு என்று அழுத்தமாகக் கூறுவதையே. உண்ணுங்கள் என்றால் நன்றாக சாப்பிடுங்கள் என்று மகிழ்வுடன் கூறும் வார்த்தையாக ஆகி விடும்.

 

வார்த்தை ஒன்றுதான்  இடத்திற்கேற்றார் போல் தான் பொருளும் தன்மையும் மாறுகிறது.  இதை கவனத்தில் கொண்டே குர்ஆன் மொழி பெயர்ப்புகள் இருக்க வேண்டும். 


தஃகுல் -  சாப்பிடுதல் என்ற பொருள் தரக் கூடிய  சொல்தான் 7:73.11:64 ஆகிய இரு வசனங்களில் இடம் பெற்றுள்ளது. இங்கு தஃகுல் என்பதற்கு  “மேய” என்பதே பொருத்தமான மொழி பெயர்ப்பாகும்.  

ஒட்டகத்தை  பூமியில்  மேய விட்டு விடுங்கள்!  7:73.11:64


அதே தஃகுல் -  சாப்பிடுதல் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ள  34:14 வசனத்தில்  (கரையான்)  அரித்து விட்டது என்று மொழி பெயர்த்துள்ளார்கள். 

காரணம் இவர்களில் பலர் மரங்களை கரையான் அரிக்கும் என்று மட்டுமே விளங்கி வைத்துள்ளார்கள். மரங்கள் கரையானுக்கு உணவு என்பதை அறிந்துள்ளவர்களாக இல்லை. 

மரங்கள் கரையானுக்கு உணவு ஆகும்.  ஆகவே பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) கைத்தடியைச்  சாப்பிட்டது 34:14   என்பதே  இந்த இடத்தில் பொருத்தமான மொழி பெயர்ப்பாகும்.  

 

அதே மூலச்  சொல்லில் இருந்து வந்துள்ள குலீ-  சாப்பிடு என்ற வார்த்தை இடம் பெற்றுள்ள 16:69. வசனத்திற்கு  உறிஞ்சி, குடித்து  என்று  மொழி பெயர்த்துள்ளவர்களும் இருக்கிறார்கள். 


தேனீக்கள் மலர்களிலும், கனிகளிலும் உள்ள திரவத்தை உறிஞ்சி அதைக் கொண்டு வந்து கூட்டில் சேமிக்கிறது. அந்தக் கூட்டில் தான் தேன் தயாரிக்கப்படுகிறது என்பது  கற்கால நம்பிக்கை.

இது தவறான நம்பிக்கை.  தேனீக்கள் கனிகளிலிருந்து உணவாகத் தான் உட்கொள்கின்றன. தேனீக்களின் உடலுக்குள்ளே தான்  தேனாக மாற்றுகின்ற பணி நடக்கின்றது, தேனாக மாற்றுவதற்கு தேன்கூட்டில் எந்தத் தொழில்நுட்பமும் இல்லை என்று  நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் கூறுகிறது.


ஆகவே, 

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ

தும்ம குலீ மின்  குல்லி (ஸ)தமராதி என்பதற்கு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! என்பதே பொருத்தமான மொழி பெயர்ப்பாகும்.  


சாப்பிடுவது, உண்பது,  தின்பது,  புசிப்பது,  உட்கொள்ளுவது, சுவைப்பது  பொருள் ஒன்று என்றாலும்  இடத்துக்கு தக்கவாறு சொற்களை பயன்படுத்துவதே சரியானது சிறந்தது.

59-66    59=116, 60=1, 61=5, 62=6, 63=2, 64=72, 65=1, 66=1. ஆக இதில்204

அரபு மொழி அறியாதவர்களும் குர்ஆனை எளிமையாக வாசிப்பதற்கான  பயிற்சி வகுப்பு  T.V.ல் ஒளிபரப்பானது. பாகம்-14 ஐக் காண யுடியூப்  லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=IZ5ZACw7mAg 



59

 أَكَلَ

அகல (1)

1.சாப்பிட்ட 5:3. 


 فَاَكَلَا 

Fபஅகலா (1)

2. அவ்விருவரும் சாப்பிட்டனர். 20:121.


 أَكَلَهُ

அகலஹு(2)

3. அவரை  தின்று  12:14.  12:17.


أَكَلُوا۟

அகலுா(1)

4. சாப்பிட்டிருப்பார்கள். 5:66


 تَأْكُلْ

தஃகுல்(7)

5. மேயும் 7:73.11:64.
சாப்பிட12:36. 
சாப்பிடும்.12:41.
சாப்பிடுகின்றனர்.32:27 
சாப்பிட்டது 34:14. 
 
தின்பது 47:12.


 تَأْكُلُهُ

தஃகுலுஹு(1)

6. அதை சாப்பிடும் 3:183.


 تَأْكُلُوٓا۟ 

தஃகுலுா(10)

7.உண்ணாதீர்கள், 2:188 3:130.4:29. 6:121. 
சாப்பிடாதீர்கள்.4:2.
சாப்பிடுவதற்காக.2:188.   உண்பதற்காக  16:14 
உண்ணாமல் 6:119
சாப்பிடுவது 24:61(2).


تَاْكُلُوْنَ 

தஃகுலுா(12)

8.நீங்கள் உண்பதை 3:49. 23:33.
உண்பதற்காக 12:47.
உண்ணுகின்றீர்கள். 23:19,21. 35:12. 40:79.
உண்டு வருகிறீர்கள்.89:19.
சாப்பிடுகிறீர்கள்.16:5.
(நீங்கள்) சாப்பிட 37:91.51:27.
சாப்பிடுவீர்கள். 43:73. 


 تَأْكُلُوهَآ 

தஃகுலுாஹா(1)

9. அதைச் சாப்பிட்டு 4:6.


نَّأْكُلَ

கு(1)

10.நாங்கள் உண்டு 5:113.


يَاْكُلْ

குல்(6)

11. சாப்பிட 4:6. 49:12.
உண்ணுகிற 10:24.
உண்ணுகிறார். 23:33.
உண்கிறார் 25:7.
உண்ண 25:8.


يَاْكُلٰنِ 

குலானி(1)

12. இருவரும் உண்போராக 5:75.


يَّاْكُلْنَ

குல்ன(1)

13. அவை சாப்பிட்டு விடும்.


يَّاْكُلَهُ 

குலஹு(2)

14. அவரைத் தின்று விடும் 12:13.
அதை உண்ண 69:37.


 يَّاْكُلُهُنَّ 

குலுஹுன்ன(2)

15. அவற்றை தின்கின்றன, 12:43.
தின்றதற்கும் 12:46.


 يَاْكُلُوْ

குலுா (2)

16. அவர்கள் உண்டு,15:3.
அவர்கள் உண்பதற்காக.36:35. 


  يَاْكُلُوْنَ

குலுான (10)

17. சாப்பிடுவது 2:174.
உண்போர் 2:275. 4:10.
உண்(டு நிரப்பு)கின்றனர்.4:10. 
உண்ணுகின்றனர்.9:34. 36:33,72.
 உட்கொள்ளல் 21:8.
உண்போராக 25:20.
தின்று 47:12.


كُلَا 

குலா(10)

18. இருவரும் உண்ணுங்கள் 2:35. 7:19. 

كُلُوْ குலுா(27)  19. உண்ணுங்கள் 2:57,58,60,168,172, 187.  5:4,88. 6:118,141, 142. 7:31,160,161. 8:69. 16:114. 20:54,81. 22:28,36. 23:51. 34:15. 52:19. 67:15. 69:24. 77:43,46.



كُلُوْهُ 

குலுாஹு(1)

20. அதை உண்ணுங்கள்! 4:4. 


كُلِىْ 

குலீ(2)

21. சாப்பிடு!  16:69. நீர், உண்டு 19:26.


أَكْلًۭا

அக்லன்(1)

22. நன்றாக உண்டு 89:19. 


أَكْلِهِمْ

அக்லிஹிம்(3)

23.அவர்கள் சாப்பிடுவது 4:161.        அவர்கள் உண்பது 5:62,63.    


اٰكِلُوْنَ 

ஆகிலுான(2)

24. சாப்பிடுவர். 37:66.  உண்பீர்கள் 56:52.


  أَكَّٰلُونَ

அக்காலுான(1)

25.  சாப்பிடுகின்றனர். 5:42.


  مَّاْكُوْلٍ

மஃகூ(லின்)ல்(1)

26.  மெல்லப்பட்ட  105:5.


أُكُلِ

உகுலி(2)

27. சுவை 13:4.  புளிப்பு 34:16.


اُكُلُهٗ

உகுலுஹு(1)

28. உணவான 6:141.


 اُكُلَهَا

உகுலஹா(4)

29. தன் உணவுப் பொருட்களை 2:265.
அதன் உணவு 13:35. தனது உணவை 14:25. தமது பலன்களை 18:33.



60

 اَلَـتْنٰهُمْ 

அலத்னாஹும்(1)

அவர்களிடம் எதையும் குறைக்க 52:21. 

61

الۤرٰ

அலிஃப்லாம்ரா (5)

10:1.  11:1.  12:1. 14:1. 15:1. 2 


62

 أَلَّفَ

அல்லFப  (3)

1.இணைப்பை  3:103. பிணைப்பை 8:63(2)


  أَلَّفْتَ

அல்லFப்த  (1)

2. பிணை(ப்பை ஏற்படு)த்தியிருக்க 8:63.


يُؤَلِّفُ

யுஃஅல்லFபு  (1)

3. ஒன்றாக்குகிறான் 24:43.


الْمُؤَلَّـفَةِ

முஃஅல்லFபதி  (1)

4. ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 9:60. 

63

إِيلَٰفِ

ஃஈலாFபி (1)

1.மகிழ்வித்ததற்காக 106:1


  إِۦلَٰفِهِمْ 

ஃஈலாFபிஹிம் (1)

2. அவர்களை மகிழ்வித்ததற்காக 106:2

64

أَلِيمٌۢ 

லீமுன் (58)

1.துன்புறுத்தும் 2:10,104,174,178. 3:21,77,91,177,188.

5:36, 73,94. 6:70.  7:73. 8:32. 9:3,34,61,79,90. 10:4,88,87. 11:26,48, 12:25.  14:22. 15:50.                 16:63,104,117. 22:25. 24:19,63. 26:201. 29:23. 31:7. 34:5. 36:18. 37:38. 41:43. 42:21,42, 43:65.   44:11. 45:8,11. 46:24,31. 51:37. 58:4. 59:15. 61:10. 64:5.67:28. 71:1. 84:24. துன்பம் தரும் 11:102. 



أَلِيمًۭا

லீ(மன்)மா (14)

2.துன்புறுத்தும் 4:18,138,161,173, 9:39,74.17:10.

25:37. 33:8.  48:16, 17, 73:13.  76:31.கடும் வேதனை(யால்) 48:25.


65.

الٓـمّٓرٰ

அலிஃப்லாம்மீம்,ரா.  (1)

 13:1.


66.

الۤمّۤصۤ

அலிஃப்லாம்மீம், ஸாத். (1)

 7:1. 








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.