40-50தீயை அணைத்தல், டியூப் லைட்டை அணைத்தல், பிள்ளையை அணைத்தல் 3ம் ஒன்றா? ( பாகம் -14)
எழுத்துருவம் (வடிவம்) ஒன்றாகவும் அது தரும் பொருள்கள்
பலவாகவும் வருவது குர்ஆனில் (அரபு மொழியில்) மட்டும்தானா?
ஒரு வடிவ வார்த்தைக்கு பல பொருள்கள் வருவதால் குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழி கடிமானது என்று விமர்சிப்பவர்கள் கவனத்திற்கு.
முட்டாள்கள் எல்லாம் சேர்ந்து தங்களுக்கு அறிஞர்கள் குழு என்று பெயர் வைத்துக் கொண்டால் அது அறிஞர்கள்குழுவாக ஆகாது. அபுஜஹ்ல் (முட்டாள்களின் தந்தை)க்கு அபுல்ஹகம் (அறிவின் தந்தை) என்று பெயர் வைத்த மாதிரிதான்
https://mdfazlulilahi.blogspot.com/2021/04/40-50-3-14.html
இங்கே கூட பொருள் என்பது கருத்து என்ற அர்த்தத்தில் வருகிறது. பூமிக்கு 60க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளதை முன்பு குறிப்பிட்டு இருக்கிறோம்.
அதன் படி அடி என்ற வார்த்தையிலிருந்து வந்த பொருள்களில் சில பொருள்களை முன்பு கண்டோம்.
அது அடிக்கிறது என்று ஒரு சிறுமி சொன்னால், இன்னொரு சிறுமி அதனை அடித்துள்ளது என்ற நேரடி பொருள் கொள்வோம்.
நீ எழுதியவை அனைத்தும் தப்பாக உள்ளது அவ்வளவையும் அடி என்று ஆசிரியர் கூறினால். கையால் அடித்தல் என்ற நேரடி பொருள் கொள்ள மாட்டோம். அழித்து விடு என்ற பொருள் கொள்வோம்.
அதுபோல் காற்று அடிக்கிறது, மழை அடிக்கிறது, வெயில் அடிக்கிறது, அலை அடிக்கிறது என்பவற்றுக்கு இடம், காலம், ஏவல், சூழல்படி அடிக்கிறது என்ற ஒரு தமிழ் வார்த்தைக்கு பல பொருள் இருக்கிறது.
தீயை அணை என்றால் தண்ணீரை ஊற்றியோ மண்ணைப் போட்டோ அணைப்பார்கள்.
விளக்கை அணை என்றால் தண்ணீரை ஊற்றியோ, மண்ணைப் போட்டோ அணைத்தல் என்ற பொருள் கொள்வார்களா?
பாபநாசம் அணை, வைகை அணை என்றால் நீர்த்தேக்கம் என்று புரிகிறோம்.
அணை என்ற இந்த ஒரு வடிவ வார்த்தைக்கு நீர்க்கரை, செய்கரை என்பவை மட்டுமல்ல. இரு உடல்கள் சேர்த்தல், கட்டியணை, சேர்த்து தழுவு, படுக்கை, இருக்கை, துயிலிடம், வரம்பு, தடுத்தல், நிறுத்து போன்ற பொருள்கள் உள்ளன.
இது போலவே அரபு மொழியிலும் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் தாய் மொழி என்பதால் பல பொருள்கள் உங்களுக்கு கஷ்டமாகத் தெரிவதில்லை. அரபு பிற மொழி என்பதால் ஒன்றுக்கு பல பொருளா? என்று மலைத்து நிற்கிறீர்கள்.
அதனால் தான் மதிமுகம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிய அரபு மொழிக்கும் பிற மொழிகளுக்குமான விரிவான விளக்கத்தை காணச் சொல்கிறோம்.
https://www.youtube.com/watch?v=9tgvrNMrIWI
விமர்சித்தவர்கள் பெயரை வெளியிடாமல் விமர்சனங்களுக்கு மட்டுமே பதில் விளக்கம் தந்துள்ளோம். நமது விளக்கத்தில் மாற்றுக் கருத்து இருந்தால் பதில் தரலாம்.
ஒருவர் முஹம்மது க்கு MO போடக் கூடாது என்றார். அதற்கு விளக்கம் எழுதி இருந்தோம்.
محمد
ح
க்கு நிகரான எழுத்து H ஹெச்சா என்பது உட்பட பல கேள்விகள் கேட்டோம். பதில் சொல்லா முடியாமல் ஓடி விட்டார். அல்லாஹ் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.
40முதல்50வரையிலான11வார்த்தைகள் 85 இடங்களில் இடம் பெற்றுள்ளன. இது வரையிலான 50 வார்த்தைகள் இடம்பெற்றுள்ள இடங்கள் 2463.
40 | إِسْرَٰٓءِيلَ | இஸ்ராயீல(43) |
5:32,70,72,78,110, 7:105,134,137,138. 10:90(2)93. 17:2,4,101,104.19:58. 20:47,80,94. 26:17,22,59,197. 27:76. 32:23. 40:53. 43:59. 44:30. 45:16. 46:10. 61:6,14. |
41 | أَسَّسَ | அஸ்ஸஸ(2) |
اُسِّسَ | உஸ்ஸிஸ(1) |
42 | ءَاسَفُونَا | ஆஸFபூனா(1) | 1.நம்மைக் கோபப்படுத்திய 43:55 |
أَسَفًا | அஸF(பன்)பா(1) | 2.கவலைப்பட்டு 18:6.(வியாகூலப்பட்டு - ஜான்டிரஸ்ட்) |
أَسِفًۭا | அஸிFபன்(2) | 3.கவலை 7:150. 20:86. |
أَسَفَىٰ | அஸFபா (1) | 4. துக்கமே 12:84. |
ءَاسَىٰ | ஆஸா(1) | 5. கவலைப்படுவேன் 7:93. |
تَاْسَ | த.ஃஸ(2) | 6. கவலைப்பட 5:26,68 |
تَاْسَوْا | த.ஃஸவ் (1) | 7. கவலை(ப்படாமல்) இருப்பதற்காக(வும்) |
43 |
إِسْمَٰعِيلَ |
இஸ்மாயீல் (12) |
2:125,127,133,136,140. 3:84, 4:163. 6:86. |
44 |
ءَاسِنٍۢ | ஆஸினின் (1) |
(மாற்றம்) அடையாத 47:15. |
45 | أُسْوَةٌ | உஸ்வதுன்(3) | முன்மாதிரி 33:21. 60:4,6. |
46 | أَشِرٌۭ | அஷிருன் (2) | கர்வம் (கொண்ட) |
47 | إِصْرًۭا | இஸ்ரன் (1) | 1.சிரமத்தை 2:286. |
إِصْرَهُمْ | இஸ்ரஹும் (1) | 2.அவர்களுடைய சுமையை 7:157. |
48 | إِصْرِى | இஸ்றீ (1) | எனது உடன்படிக்கையை 3:81. |
49 | أَصْلِ | அஸ்லி (1) | 1.வெளிப்படும் 37:64. |
أَصْلُهَا | அஸ்லுஹா(1) | 2.அதன் (அம்மரத்தின்) வேர்14:24. |
50 | أَصِيلًۭا | அஸீ(லன்)லா(4) | 1.மாலை 25:5. 33:42. 48:9. 76:25. |
ءَاصَالِ | ஆஸாலி(3) | 2.மாலை(யிலும்)7:205.13:15. 24:36. |
Comments