"அப்துல் சமது முஸ்லிம் அல்ல, திமுக காரன், கையெடுத்து கும்பிடுவார், பட்டைபோடுவார் - கே.என். நேரு"

மிதவாத இந்துத்துவத்தின் நீட்சியே இதுபோன்ற வாசகங்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு, ஆனால் இங்கு எப்போதுமே முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களோடு பயணிப்பதை பெரும்பாண்மைவாதிகள் விரும்புவதில்லை. ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்நாட்டில் முஸ்லிம்கள் முஸ்லிம்களது அடையாளத்தோடு ஓட்டு கேட்க கூட முடியாத நிலை. இது மிதவாத இந்துத்துவம். அப்துல் சமதை குறை சொல்லி பயணில்லை மாறாக பொது சமூகமாக இருப்பவர்கள், அல்லது பொது சமூகத்தோடு கலக்க வேண்டும் என நினைப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். மதச்சார்பற்ற என்பது அவரவர் தங்களது மார்க்கத்தின் கொள்கைகளோடு பண்முகத்தன்மையோடு இந்நாட்டின் ஆட்சி, அதிகாரங்களில் பங்கெடுப்பதே.

 https://m.facebook.com/story.php?story_fbid=3791071020979042&id=100002285435929


Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ