துபை IAC முன்னாள் செயலாளர் மேலக்காவேரி அஸ்கர் அலி மரணமும் வரலாறும்
நமது வற்புறுத்தலால் 1991ல் துபை IACயின் செயலாளர் பொறுப்பை ஏற்றவர். பள்ளிவாசலுக்கு இமாம் முஅத்தின் போன்றோரை வேலைக்கு அமர்த்தாமல் ஜூம்ஆ பள்ளியை நடத்திக் காட்டியவர். மேலக்காவேரி அஸ்கர் அலி. அவர் 28-08-2020 அன்று வெள்ளி அன்று இறப்பெய்திய செய்தி அறிந்தோம். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக ஆமீன். https://mdfazlulilahi.blogspot.com/2020/08/iac.html நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் முதலில் அஸ்கர் அலி படம் இல்லாமல் மரணச் செய்தியை மட்டும் போட்டு இருந்தார்கள். துபை IAC செயலாளராக இருந்த அஸ்கர் அலியா? என்று முன்னாள் IAC சகோதரர்களிடம் கேட்டோம் யாருக்குமே தெரியவில்லை. நாச்சியார்கோவில் MS.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கே போன் போட்டு உறுதி செய்தோம். மேலக்காவேரி அஸ்கர் அலி மரணத்தை ஒட்டி வந்த சில வரலாற்று நினைவுகள். மறைந்த இக்பால் மதனி அவர்களை இன்றைய தலைமுறையினர் ஜாக் மதனியாகத்தான் விளங்கி...