Posts

Showing posts from June, 2020

செய்யாத குற்றத்தை செய்ததாக எவனாவது ஒப்புக் கொள்வானா?

Image
காமிலின் இரண்டாவது வழக்கான கொடுங்கையூர் வழக்கு பற்றிக் கூறிய காமில் முதல் வழக்கு பற்றி கூறாதது ஏன்?  பாபாவின் இறப்புக்கு வர முடியாத அளவுக்கு  காமில் ஜெயிலில் இருந்த  காமிலின் தரத்தை வெளிப்படுத்திய  முதல் வழக்கு என்ன வழக்கு? https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_29.html காமில் பிடித்த முயலுக்கு எத்தனை கால்கள்?  ஒரு கால் இல்லாத முயலை பிடித்துக் கொண்டு நான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்.  4 கால் கால்கள் உள்ள முயலின் ஒரு காலை தன் கையால் பிடித்துக் கொண்டு. மற்ற 3 கால்களை மட்டும் 1, 2. 3. என எண்ணி விட்டு. தன் கைப்பிடிக்குள் இருக்கும் காலை எண்ணிக்கையில் சேர்க்காத அதிபுத்தி களும் (?)  இருக்கிறார்கள்.    அவர்களும் தான்  பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று சத்தியம் செய்து சாதிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதில் காமில் எந்த ரகம்? 22-09-2017 அன்று நடந்த 24 கூட்டமைப்புக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்று காமில் என்னிடம் சொன்னார். காமில் சொல்லுக்கு மாற்றமாக எனக்குத் தெரிந்த உண்மையா...

2:48.தர்ஜமா பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் நிலை எது?

Image
மொழி பெயர்ப்பு துறையில்    ஈடுபாடு இல்லாதவர்கள் நிலை எது? ஒரு வசனத்தைப் பற்றி எழுதும் போது அது போன்ற வசனங்கள் எங்கு எங்கு உள்ளன என்று சுட்டிக் காட்டி எழுதினால் தான் தப்ஸீர்.  உங்கள் எழுத்து அந்த மாதிரி இல்லை என்ற விமர்சனம் உள்ளது. நாம் தப்ஸீர் எழுதுவதாக சொல்லவில்லை.  வார்த்தைக்கு வார்த்தையுடன் படிப்பவர்கள் ஒப்பீடு செய்து பார்ப்பதற்காக நம்மிடம் உள்ள 15 வித மொழி பெயர்ப்புகளை இடம் பெறச் செய்து வருகிறோம். https://mdfazlulilahi.blogspot.com/2020/06/248.html மேலும் எல்லோரும் எழுதியதையே எழுதுவதை விட எழுதப்படாததை, மக்களுக்கு புரிய வைக்கப்படாததை புரிய வைப்பதே சிறந்தது. என்ற அடிப்படையில் எழுதி வருகிறோம்.  அந்த அடிப்படையில் வாவு பற்றி 2:38. 2:5. ஆகிய வசனங்களின்  வார்த்தைக்கு வார்த்தையில்  விளக்கம் எழுதி  இருந்தோம்.   “வா”வுக்கு   1. இன்னம் , 2.இன்னும் ,   3. மேலும் ,   4. பின்னர் ,   5. பின்பு ,   6. அன்றி   . இந்த ஆறில் ஒன்றை மொழி பெயர்த்தே ஆக வேண்டும் என்பதே மொழி பெயர்ப்பு துறையில்   ஈடுபாடு இ...

2:47 அரபிகள் சொல்லும் Fபழ்ழல் இதுவா? வேறா?

Image
இந்த வசனத்தில் இரண்டு இடத்தில்  عَلَى - அலா   என்ற இடை (துணை)ச் சொல் இடம் பெற்றுள்ளது. இது தனியாக பொருள் தராது. அடுத்து வரும் சொற்களை வைத்தே   மீது -  மேல் - மேலே    - க்கு  -  விட என  பொருள்  தரும்.  இதில் இடம் பெற்றுள்ள முதல்  அலா வுக்கு  மீது -  க்கு ஆகிய  இடை (துணை)ச்   சொற்களை  பயன்படுத்தி  உங்களு க்கு - உங்கள் மீது என பொருத்தமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். இரண்டாவது இடம் பெற்றுள்ள   அலா வில்  விட என்ற  இடை (துணை)ச்   சொல்லை  பயன்படுத்தி அகிலத்தாரை விட ,   உலக    மக்கள்   அனைவரையும் விட  என பொருத்தமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/06/247-f.html விட  என்ற இடத்தில் க்கு, மீது என்றோ.  க்கு, மீது என்று இணைக்க வேண்டிய இடத்தில்  விட  என்றோ இணைத்தால் என்ன ஆகும்?   இது போன்றவற்றை கவனத்தில் கொண்டு சிந்தித்து ஆய்வுவுடன் மொழி பெயர்ப்பு செய்ய ...