மத்திய அரசு வழக்கில் உள்ளவர் ஜனாஸாவுக்கு வர முடிகிறது. மாநில அரசு வழக்கில் இருந்தவரால் வர முடியாமல் போனது ஏன்?


என்...வில் கைது செய்யப்பட்ட 14 பேர்களில் ஒருவரின் தாயார் இறந்து விட்டார். (இன்னாலில்லாஹி.....) சென்னை புழல் சிறையில் இருந்தவரை ராமநாதபுரம் கொண்டு வந்து தயாரின்  ஜனாஸாவில் கலந்து கொள்ள வைத்தார்கள்


இன்று TNTJ தலைவராக உள்ள லுஹா 3 தொடர் கொலை வழக்கில் 1997 ஆகஸ்டு 31ல் அநியாயமாக கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவரது தாயார் இறந்து விட்டார். பாளை சிறை எனப்படும் மேலப்பாளையம் எல்கைக்கு உட்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_9.html
லுஹாவை அவரது தாயாரின் ஜனாஸாவில் கலந்து கொள்ள வைக்க .மு.மு.. தலை கீழாக நின்று முயற்சி செய்தது. கருத்து வேறுபாடுகளை மறந்து சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த அரசியல்வாதிகளும் முயற்சி செய்தனர் முடியவில்லை.


லுஹா தாயார் ஜனாஸா தொழுகையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் PAK பாகவி, ஆம்லன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது என்று லுஹாவால் சொல்லப்பட்ட வாவர் பள்ளி இமாம் ஹைதர் அலி ஆலிம் போன்ற சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் கலந்து கொண்டனர். லுஹாவால் கலந்து கொள்ள முடியவில்லை.


லுஹா வீட்டிற்கும் மேலப்பாளையம் எல்கைக்குட்பட்ட லுஹா இருந்த சிறைக்கும் 5 கி.மீ. துாரம் கூட இருக்காது

சென்னை ராமநாதபுரம் துாரம் 500 கி.மீ. மேல்.

1997ல் முதல்வர் கலைஞர், மத்தியிலும் தி.மு..வின் (ஆதரவு பெற்ற) ஆட்சிதான்.

இன்று மத்தியில் பீ.ஜே.பி. ஆட்சி மாநிலத்தில் பீ.ஜே.பி.யின் பினாமி ஆட்சி.

லுஹா மீதான வழக்கு மத்திய அரசு போட்டது அல்ல. மாநில அரசின் உள்ளூர் போலீஸ் போட்டதுதான்.

ராமநாதபுரம் மாவட்டதுக்காரர் மீதான வழக்கு வானளாவிய அதிகாரம் உடைய மத்திய அரசின் என்.ஐ.ஏ. போட்ட வழக்கு. 

இந்த உண்மையை எழுதியதும் பீ.ஜே.பி.க்கு ஆதரவாக எழுதி விட்டதாக கொதித்து விடாதீர்கள். என்ன சொல்ல வருகிறேன் என்று பொறுமையாக சிந்தியுங்கள்.

மத்திய அரசு வழக்கில் உள்ளவர் ஜனாஸாவுக்கு வர முடிகிறது. மாநில அரசு வழக்கில் இருந்தவரால் வர முடியாமல் போனது ஏன்? 

எத்தனையோ வழக்குகளில் கோர்ட் விடுதலை செய்தும் போலீஸ் விடாமல் வைத்து இருப்பது ஏன்? சிந்தியுங்கள்.

1997 ஆகஸ்டு 2 அன்று ஜாக் (JAQH) சார்பான நடந்த கூட்ட தலைப்பு. நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும். லுஹா சம்பந்தமில்லாமல் பேசியதோ காவல்துறை அதிகாரிகளை கடுமையாக சாடியும். காக்கிச் சட்டையை பிடித்து கேட்கும் உரிமை பற்றியும். 

அதே ஆகஸ்டு 31ல் போலீஸும் லுஹாவுக்கு சம்பந்தமில்லாத வழக்கில் சம்பந்தப்படுத்தி உள்ளே தள்ளி விட்டது. முதல்வராக இருந்த கலைஞர் சொல்லியும் உள்ளூர் போலீஸ் விடவில்லை.


எனக்கு வெறியூட்டியும் உணர்வுகளை துாண்டி விட்டும் எழுதத் தெரியாது என்பது அல்ல. சந்தர்ப்பங்களை பயன்படுத்தி  வெறியூட்டி, உணர்வுகளை துாண்டி விட்டு எழுதி பிளாஷாக முடியும். அதிகமான இளைஞர்களை என் பக்கம் ஈர்க்க முடியும். கடைசியில் பாதிப்பு யாருக்கு? 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் என சிறையில் கிடப்பவர்கள் யார்? கிட்னி பெயில் ஆகியும் வெளியில் வர முடியாமல் கிடப்பவர்கள் யார்? சிந்தியுங்கள். இன்றுதான் இப்படி எழுதுகிறேன் என்று எண்ணாதீர்கள். 16-10-1997ல் லுஹாவுக்கு எழுதிய கடிதத்தின் 5ம் பக்கத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தக் கடிதம் எழுதப்பட்டது 1997ல் அப்பொழுது புகாரி டீன் ஏஜிக்காரர்.  

நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். அது உங்கள் மனம் சார்ந்த விஷயம். நீங்கள் இருப்பதால் உங்களால் அந்தக் கட்சி மூலம் சமுதாயத்திற்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால். நீங்கள் உத்தரவாதம் அளித்து அந்தக் கட்சிக்கு ஆதரவு கேளுங்கள். சமுதாயத்தைக் கொண்டு போய் நீங்கள் இருக்கும் கட்சியில் உங்கள் கட்சி ஆதரிக்கும் கட்சியில் அடகு வைக்க எண்ணாதீர்கள்.

நீங்கள் இருக்கும் கட்சி, ஆதரவு அளிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்லி ஆதரவு கேளுங்கள். உங்கள் தலைமைக்கு இல்லாத தகுதிகளை இருப்பதாக பொய் கூறி ஆதரவு திரட்டாதீர்கள்..

தவ்ஹீது தாஇகள் சமுதாயத்தைக் காக்க அந்நியர் அரசியல் கட்சியில் ஐக்கியமாகி பயணிக்கப் போகிறோம் என்று போனார்கள். முஸ்லிம் அல்லாதவர்களை தலைவர்களாக ஏற்றார்கள். 

நபிகளாரையே வரம்பு மீறி புகழக் கூடாது என்று சொன்ன வாயால். காபிரான தலைவர்களிடம் இல்லாத தகுதிகளை இருப்பதாகக் கூறி வானளாவப் புகழ்ந்து தள்ளினார்கள்

நபிகளாருக்கு பிறந்த நாள் கொண்டாடக் கூடாது என்றவர்கள் கண்டவர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள். அந்த மாதிரி போய் விடாதீர்கள்.

வெளியில் ... எதிர்ப்பு வேஷம் போட்டு விட்டு அந்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் தலைவர்களை கள்ளத்தனமாக சந்தித்து உறவு வைத்துள்ள இஸ்லாமிய வேஷதாரிகளை நம்பி ஏமாறாதீர்கள்.

என்...வால் 14பேர் கைது செய்யப்பட்டதும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா லட்டர் பேடில் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா வரலாற்றில் இந்த மாதிரியான முடிவுகள் சமீபத்தில் தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா அலுவலகத்தில் கூடி முடிவு எடுத்தது பெரிய விஷயம்.

இந்த நிலையில் சில விஷமிகள் என்...வால்  கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று. தனித் தனியாக வக்கீல் வையுங்கள். சரி என்று சொன்னால் நாங்கள் வக்கீல் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூட்டமைப்பு முடிவுக்கு எதிரான வேலைகள் செய்து வருகிறார்கள். இவர்கள் யார் தெரியுமா?

என்... வெளிநாட்டிலிருந்து வந்த 14பேர்களை கைது செய்து விட்டது என்று வானுக்கும் பூமிக்குமாக குதித்து ஒப்பாரி வைத்து தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொண்ட கயவர்கள். 

14 பேர்கள் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டது 2019 ஜனவரி 10ல். அதன் பிறகு இந்தியாவிலிருந்து பல்வேறு மாநில முதல்வர்களும் அமைச்சர்களும் எம்.எல்.ஏ. எனப்பட்டவர்களும் அவர்களது எடுபிடிகளும் அரபு நாடுகளுக்கு வந்து போனார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா வந்த பிறகு தை தை என்று குதித்து டி.விக்கு போஸ் கொடுத்தவர்கள் என்ன செய்தார்கள்? 

அவர்களை அழைத்து சிறப்பித்த உறவினர்கள் தான் என்ன செய்தார்கள்?  சொந்தக்காரன் சிறையில் இருக்கிறான் என்ற கவலை இல்லாமல் அமைச்சர்களுடனும் எம்.எல்.ஏ. எனப்பட்டவர்களுடனும் மால்களுக்கு சென்று செல்பி எடுத்து திரிந்தார்கள்.

ஸ்டார் ஹோட்டல்களில் இப்தார் நடத்தி பொன்னாடைகள் போர்த்தி மகிழ்ந்தார்கள். 

எங்கள் சமுதாயத்தவர்கள் சிறையில் இருக்க எங்களுக்கு ஸ்டார் ஹோட்டல்களில் இப்தார் நிகழ்ச்சியா?  பொன்னாடை போர்த்தி புகழ் மாலை சூடலா? தேவை இல்லை வேண்டாம் என்று வந்தவர்களாவது கூறினார்களா? கிடையாது.

சிறப்பு விருந்தினர்களாக வந்தவர்களில் யாராவது தமிழகத்தைச் சார்ந்தவர்கள் இப்படி சிறையில் இருப்பதாக அறிகிறோம். எதனால் சிறையில் இருக்கிறார்கள் என்று குடும்பத்தார்களுக்கும் தெரியவில்லை. 

எனவே எம்பாஸி தலையிட்டு உண்மையை நிலலையை மக்கள் பிரதிநிதியாகிய எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று இந்திய துாதரை அணுகினார்களா? 

மாமா மச்சான் அண்ணன் தம்பி ரத்த உறவு என்று சொல்லிக் கொண்டவர்கள் தான் முயற்சி செய்தார்களா? கிடையாது.

எனக்குத் தெரிந்த அல்லாஹ்வின் அருளுக்குரியவர் அவரால் இயன்ற முயற்சிகள் செய்தார். அவர் மீது அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.

அரசியல்வாதிகளில் வேஷதாரிகளாக ஆகி விட்டவர்களை தலையில் வைத்து ஆடுவது. பிறகு தொப் தடீர் என்று கீழே போடுவது என்ற நிலை வேண்டாம். அல்லாஹ் அளித்த அறிவைக் கொண்டு நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு