சரிதானா? முறைதானா? தீமைக்கு தீமை பரிகாரமாகுமா?


துாய இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜமாஅத்களின் மேன்மைதங்கிய முன்னணியினர்களுக்கு, அஸ்லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரபாதுஹு

கண்ணியத்யத்திற்குரிய பெருந்தகையீர்! நீங்கள் அனைவரும் ஓரணியில் நின்று துவங்கிய துாய இஸ்லாமிய அழைப்புப் பணியின் மூலம், உண்மை இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக திரண்டனர்.
ஊர் வம்பையும் உலக வம்பையும் பேசிக் கொண்டிருந்த மக்கள் எங்கு நோக்கினும். குர்ஆன் ஹதீஸ்கள் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசலானார்கள்.

முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நீங்கள். அணி அணியாகப் பிரிந்ததும் உங்களால் குர்ஆன் ஹதீஸின் பக்கம் சிந்தனை திருப்பி விடப்பட்டவர்கள். உங்கள் வம்பையும் உங்களுக்குள் உள்ள வழக்கையும் பற்றி பேச ஆரம்பித்து குர்ஆன் ஹதீஸ்களை மறக்கத் துவங்கி விட்டனர்.

ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி …. இப்படி அணி அணியாகப் பெருகிக் கொண்டு போன நீங்கள் ஓரணியாய் இருந்தபோது ஏற்பட்ட எழுச்சியையும் அணி அணியாகப் போனதால் ஏற்பட்ட வீழ்ச்சியையும் பற்றி சிந்திக்கவே இல்லை.
விலை மதிப்பற்ற மாபெரும் பேரிழப்பை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள்அவர்களின் பொன்னான நேரத்தையும் பொருளாதாரத்தையும் செலவு செய்து மிகுந்த சிரமத்துடன் பெரு முயற்சி மேற்கொண்டு ஆகஸ்ட் --------- அன்று உங்களை ஓரணியில் திரட்டினர். மன்னிக்கவும் (உங்களை ஓரணியில் திரட்ட முடியாமல்) உங்களிடையே கூட்டணி ஏற்படுத்தினர்.

அல்ஹம்துலில்லாஹ் என்று நிம்மதி பெரு மூச்சு விடும் முன். உறவை முறித்துக் கொண்டீர்கள். உலகாதாயம் கருதி இணையும் அரசியல் கட்சிகளின் கூட்டணி கூட இவ்வளவு சீக்கிரத்தில் முறிந்தது இல்லை. ஈருலக நன்மையை நாடி உங்களிடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டணி?....

கூட்டணி அமைக்கும் அரசியல் கட்சிகள் கூட்டணியின் பலனை கண்கூடாகக் காண்பதால், ஒரு அணி வரம்பு மீறினாலும் மற்ற அணி அதை சகித்துக் கொண்டு மழுப்பும். 

அல்லது இதுவும் களத்தில் இறங்கி விட்டால் கூட்டணியில் இருக்கும் இன்னொரு அணி அவர்களிடையே சமாதானம் செய்து வைக்கும். இது எந்நாளும் நடந்து வரும் ஒன்று.

ஈருலக நன்மை மீது ஈமான் கொண்டுள்ள உங்களில் ஒருவர் மனிதன் என்ற முறையில் தவறு செய்து விட்டால் ஒப்பந்தத்தை மீறி விட்டால் நாங்களும் அப்படித்தான் வரம்பு மீறுவோம் என்று நடந்து கொள்வது சரிதானா?  முறைதானா? தீமைக்கு தீமை பரிகாரமாகாது. மனிதன் தவறுக்கு அப்பால்பட்டவன் அல்ல என்றும் நீங்கள் தானே பிரச்சாரம் செய்கிறீர்கள்.

பெருமதிப்பிற்குரியவர்களே! நீங்கள் ஒருவருக்கொருவர் வரம்பு மீறியதாக குற்றம் சுமத்துகிறீர்கள். உங்களில் யார் முதலில் வரம்பு மீறினார்கள் என்று எழுத விரும்பவில்லை. நீங்கள் அனைவரும் உங்கள் மீதுள்ள கடமையைச் செய்ய தவறி விட்டீர்கள். என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். (தொடரும் இன்ஷாஅல்லாஹ்)


(ஒரே சாபம்  தானே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றாவது சமாதான முயற்சி செய்ததுண்டா? என்று கேட்டுள்ளவர்களுக்காக மேற்கண்ட ஆதார பதிவு)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு