காஷ்மீரும் நாமும் என்பதா? காங்ரஸும் நாமும் என்பதா?
சொல் கேட்காமல் மைக்கைக் கண்டதும் எவ்வி
குதித்து ஜெயிலுக்கு போய் விட்டு வந்த மைக் மாவீரனான மவுலவிக்கு எழுதிய வரலாற்றுக்
கடிதம் JPGயாக பிளாக்கர், பேஸ்புக் இணைப்பில் உள்ளது. 7ம் பக்கம் முதல் கண்டிப்பாக படியுங்கள்.
குறிப்பாக த.மு.மு.க.வினரும் கோவை மேலப்பாளையம்வாசிகளும் படியுங்கள்.
காஷ்மீரும் காயல்பட்டிணமும் அல்லது காஷ்மீர்
பிரிவினை அமைப்பும் காயல்பட்டிணமும் என்றுதான் தலைப்பு கொடுக்க எண்ணினேன். என்ன
எழுதியுள்ளோம் என்று பார்க்காமல் டெலிட் செய்யக் கூடிய வீர அறிவாளிகள் நிறைந்துள்ள
காலத்தில் உள்ளதால் தலைப்பை மாற்றி விட்டேன்.
முன்பு ஒரு தலைப்பில் என்ன எழுதி உள்ளோம்
என்று பார்க்காமல் ஜமாஅத் என்ற ஒரு அறிவாளிகள் குழுவும். பத்திரிக்கை
நிருபர் ஒருவர் நடத்தி வந்த குழுவும் நம்மை நீக்கி விட்டார்கள். அவர்களது குழு என்ற மகா மந்திரி சபையில் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும்
முழு அதிகாரம் படைத்த முதல்வரும் பிரதமரும் அவர்கள் அல்லவா? கைர்.
காயல்பட்டிணத்தில் I.I.M (இத்திஹாத்துல்
இக்வானுல் முஸ்லிமீன்) என்று ஒரு அமைப்பு உள்ளது. இந்த அமைப்புடன் எனக்கு 1988 முதல் தொடர்பு.
1993 ஆம் ஆண்டு இது காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு என்று அந்த
அலுவலகத்தை சோதனை போட்டார்கள். அதில் அல் ஜன்னத், அல் முபீன்
பத்திரிக்கைகள் கிடைத்துள்ளன. உடனே இரு மாத இதழ்கள் அலுவலகத்தையும் சில ஜாக்
கிளைகளையும் சோதனை போட்டார்கள்.
நான் ஊரில் மீட்டிங் போட்டால் கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி,
நாகர்கோயில், காயல்பட்டிணம், கடையநல்லுார் என்று சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா
ஊர்களுக்கும் போஸ்ட் கார்டு போட்டு அழைப்பேன்.. இப்படியாக எல்லா ஊர்களிலிருந்தும்
வேன்களில் ஆட்களை திரட்டி கொண்டு வந்தால்தான் 50 பேர்களிலிருந்து 100 பேர் வரை
தவ்ஹீது கூட்டத்திற்கு ஆட்கள் தேறுவார்கள்.
இந்த மாதிரி I.I.Mக்கு நான் எழுதிய
கடிதங்களும் கிடைத்துள்ளன. ஆகவே என் வீட்டிற்கு வந்துள்ளார்கள். வீட்டில் இருந்த பீரோவை திறந்துள்ளார்கள். அதில்
இருந்த அல் ஜன்னத், அல்முபீன் போன்ற மாத இதழ்களை விட்டு விட்டார்கள். வாளும் கேடயமும்
இன்னுமா உறக்கம்? போன்ற புக்குகள் நிறைய இருந்துள்ளன. அந்த மாதிரியான புக்குகள்
அனைத்திலும் ஒவ்வொன்று சேம்பில் எடுத்து விட்டு போயுள்ளார்கள்.
1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை ஒட்டி
நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வசூலித்து உதவி செய்தோம். இது
சட்ட விரோத செயல் என்று போட்டுக் கொடுத்து விட்டார்கள். போட்டுக் கொடுத்தவர்கள்
பீ.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிக்காரன்கள் இல்லை. இஸ்லாமியன்கள்தான்.
என் வீட்டை சோதனை செய்து என் மீதும் என்
தாயார் மீதும் வழக்கு. டெல்லி அலுவலகத்தில் வந்து ஆஜராகும்படியான ஆணைகள்
வந்தவண்ணம் இருந்தன. இதனால் 1993
செப்டம்பரில் நடந்த எனது தம்பிமார்கள் கல்யாணத்திற்கும். 1993 அக்டோபரிலும் 1994
ஜனவரியிலுமாக மஸ்ஜிதுர்றஹ்மான் பள்ளிக்காக வாங்கப்பட்ட இடங்கள் ரிஜிஸ்டருக்கும்
நான் வர முடிந்ததில்லை.
கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவிய வழக்கில் த.மு.மு.க. ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள். ஒரு ஆண்டு சிறை தண்டனை
பெற்று ஜாமீனில் (பிணையில்) உள்ளார்கள். அந்த மாதிரியான வழக்கு. இதில் இருந்து
எங்களை விடுவிக்க பாடுபட்டவர்கள் யார்? சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த சர்வ
கட்சியினர் தான்.
எந்த V.S.T ஷம்சுல் ஆலம் Ex M.L.A, முன்னாள்
நகர் மன்ற தலைவர் M.A.S. அபுபக்கர் ஸாஹிப் போன்றவர்கள்
தலைமையில் கூடி தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான தீர்மானங்களை போட்டார்களோ அவர்கள் தான்
எங்களை விடுவிக்க பாடுபட்டார்கள்.
சுன்னத் ஜமாஅத், தவ்ஹீது இயக்கம் எங்கள்
குடும்ப பிரச்சனை. அதற்காக சமூக விரோதிகளால் இலாஹி குடும்பத்திற்கு பாதிப்பு என்றால்
விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பாடுபட்டார்கள். மு.லீக் தலைவர் அ.கா.அ.
அப்துஸ்ஸமது உட்பட. பிரச்சனை முடிந்தது என்று தெரிந்துதான் 1994 ஆகஸ்டில் தாயகம்
வந்தேன்.
என்னை காட்டிக் கொடுத்த இஸ்லாமியன்கள் கூடி
இருந்த வீட்டுக்குப் போனேன். நீங்கள் தானே காட்டிக் கொடுத்தீர்கள்? என்று
கேட்கவில்லை. சமூக விரோதிகள், சமுதாய
துரோகிகள் இந்த மாதிரி காட்டிக் கொடுத்து மாட்டி விட்டு விட்டார்கள்.
சண்டாளப்பாவிகள் அவர்கள் உருப்படுவார்களா? என எனது பாணியில் எப்படியெல்லாம்
திட்டிப் பேச முடியுமோ அப்படிப் பேசினேன். உங்களைப் போன்ற நல்லவர்கள் தான் மீட்டார்கள் என்றேன். அவர்களால் விக்கவும் முடிந்ததில்லை.
கக்கவும் முடிந்ததில்லை.
அதன் பிறகு ஐ.பி. ஆபீஸுக்கு வரும்படி போன்
வந்தது. ஜாக்குக்கு பேக் (ரவுண்டு) இல்லை என்று எண்ணி விடக் கூடாதே என்று இரண்டு
தவ்ஹீது மவுலவிகளையும் ஒரு தொண்டரையும் அழைத்துக் கொண்டு பந்தாவாக ஐ.பி. ஆபீஸுக்கு
போனேன்.
காஷ்மீர் பற்றி கேட்டார்கள். அதற்கு நாம் ஹிக்மத்தாக பதில் சொன்னோம். உடன்
இருந்த மைக் மாவீரனான ஒரு மவுலவி லொட லொட என்று ஆங்கிலத்தில் குறுக்கிட்டார்.
சும்மா கிட என மைக் மாவீரன் தொடையை பிடித்து அமுக்கி இருக்க வைத்து விட்டு நானே
பதில் சொன்னேன்.
என்ன மாதிரி பதில் சொல்லி இருப்பேன் என்று
புரிய இணைப்பில் உள்ள கடித காப்பிகளை படியுங்கள். சொல் கேட்காமல் மைக்கை கண்டதும்
எவ்வி குதித்து ஜெயிலுக்கு போய் விட்டு வந்த மைக் மாவீரனான மவுலவிக்கு எழுதிய
வரலாற்றுக் கடிதம் அது.
என்.ஐ.ஏ.வைவிட உள்ளூர் ஏட்டையாவை பார்த்தால் தான் பயமாக இருக்கிறது என்று சொன்ன கோவை பாஸித் அவர்கள் வார்த்தைகளை நினைவூட்டிக் கொள்கிறேன்.
துாண்டி விட்டு பேசக் கூடிய மைக் மாவீரர்கள் பின்னால் போனதால்தான் இத்தனை ஆண்டுகளாகியும் ஜாமீன் கிடைக்காத, ஜாமீன் கிடைத்தும் வெளி வர முடியாத கோர்ட், விடுதலை செய்தும் கைதிகளாக உள்ள உங்கள் முஸ்லிம் சகோதரர்கள் உள்ளார்கள். குஷ்டம், காதில் சீல் வடிதல், டி.பி, கண் பார்வை மங்கல், கிட்னி பெயிலியர் மன நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி விட்டனர்.
உண்ண உணவின்றி! உடுக்க உடையின்றி! படுக்க வீடின்றி! நோய்க்குரிய சிகிச்சையின்றி! குழந்தைகளை படிக்க வைக்க பணமின்றி! வழக்குகளுக்குரிய வழக்கறிஞரின்றி இவர்கள் படும் வேதனைகளை வார்த்தையில் வடித்திட இயலாது.
சிறைவாசிகளில் உள்ளவர்களில் சிலரது தாய், தந்தையர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் வீதிகளில் தங்கள் அன்றாட உணவுக்காக உதவி கேட்டு நிற்கின்றனர். சாப்பாடு கிடைக்காமல் தினமும் பப்பாளி பழம் தின்று ரத்த பேதிக்குள்ளானார்கள் சிலர்.
பர்தாவை பேண வேண்டிய பெண்கள் விதியை மீறி வீதிக்கும் சென்று விட்டனர். முஸ்லிம் அல்லாதவர்களிடம் சென்று முஸ்லிம் பெண்கள் தினக் கூலிகளாக உள்ளனர். படிக்க வேண்டிய வயதில் அவர்களது பிள்ளைகளும் வீதிகளில் நிற்கின்றனர். இருந்தும் வறுமை நீங்கவில்லை.
வறுமை முஸ்லிமை காபிராக்கிட வழி கோலும் என்று நமது நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இந்த ஹதீஸ் கூறும் உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள நாங்கள், வறுமை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை எழுத வெட்கப்படுகிறோம். அப்படினால் சிறைவாசிகளின் சூழ்நிலைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சகோதரன் விடுதலையாகி தனக்கு கல்யாணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார் சகோதரி. ஜெயிலில் உள்ள சகோதரன் மன நோயாளி ஆகி விட்டான் என்ற செய்தி வருகிறது. அதிர்ச்சி அடைந்த சகோதரியும் மன நோயாளி ஆகி விடுகிறார்.
இனி தனக்கு வாழ்வு இல்லை என்று எண்ணிய சகோதரி மன நோயில் தலையில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து எறிந்து மரணம் அடைந்து விட்டார்.
ஆண்டுகள் உருண்டோடி விட்டது இனி கணவன் விடுதலையாகி வரமாட்டான் என்று எண்ணிய பெண்கள் தலாக் வாங்கி விட்டனர். சிலர் குலா செய்து விட்டனர். இன்னும் சில எழுத முடியாத வரம்பு மீறுதல்களும் உண்டு.
இவர்களை துாண்டி விட்ட மைக் மாவீரர்களோ சல்லாப வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இது 14-10-2004ல் சிறைவாசிகள் அவலம் பற்றி நான் எழுதியது.
இங்கே நாம் சுட்டிக் காட்ட விரும்புவது. எதிரிக்க
எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தான் பீ.ஜே.பி.யை எதிர்க்கக் கூடியவர்களை ஆதரித்தல் என்ற நிலை உள்ளது. TTV தினகரனுக்கு RK நகரிலும் பொதுத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் கிடைத்த அபார
வெற்றி அந்த அடிப்பைடயிலானது தான்.
இன்றைய எதிரி பீ.ஜே.பி. என்று எதிர்க்கக் கூடியவர்கள். இன்ன அணியை
ஆதரியுங்கள் என்று சொல்லுபவர்கள்.. பழைய கசப்பான
உண்மைகளையும் பழைய எதிரியையும் சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.
ஆங்கிலேயன் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு
இருந்த இட ஒதுக்கீட்டை சுதந்திர இந்தியாவில் இல்லாமல் ஆக்கியவர்கள். யார்?
இன்று காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறித்து
பிரித்து யூனியன் பிரதேசங்களாக ஆக்க முன் மாதிரி முயற்சிகளை படிப்படியாக செய்து
வந்தவர்கள் யார்?
காஷ்மீர் ஆட்சித் தலைவர் ஒரு நாட்டின்
ஆட்சித் தலைவர் போல் பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். (காஷ்மீருக்கு நாடு என்ற அந்தஸ்த்து
பெயரளவில் கொடுக்கப்பட்டிருந்தது) அதை, பிரதமர் என்ற அந்தஸ்த்தை குறைத்து
முதல்வர் என்று (மாநில அந்தஸ்த்துக்கு) ஆக்கியவர்கள் யார்?
காஷ்மீர் விஷயத்தில் காஷ்மீர் சிங்கம் ஷேக்
அப்துல்லாஹ் அவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தட்டிக்
கழித்து ஏமாற்றியது யார்?
காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை
கொடைக்கானலில் கொண்டு வந்து சிறை வைத்தது யார்?
1990முதல் 1996 வரை காஷ்மீரில் கவர்னர் ஆட்சியை அமுல்படுத்தி காஷ்மீர் மக்களை கொன்று
குவியல் குவியலாக. சுனாமி ஜனாஸாக்கள் போல் ஒரே குழியில்
முஸ்லிம்களை போட்டு மூடியவர்கள் யார்?
இந்த மாதிரி உள்ளவற்றை அடையாளம் காட்டி
விட்டுத்தான் இன்றைய சூழலில் இவர்களை ஆதரிக்கிறோம் என்று சொல்ல வேண்டும். யாரையும்
வரம்பு மீறி புகழவும் வேண்டாம். யாரையும் வரம்பு மீறி
இகழ்ந்து பகைக்கவும் வேண்டாம். அறிவுப்பூர்வமாக செயல்பட
வேண்டும்.
Comments