கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களிலிருந்து பரிசுக்கு தேர் செய்யப்பட்டவர்கள் யார்? யார்?
முதல் பரிசு பெற்றவருக்கு 600 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்கூல் பேக் வழங்கப்படும். மற்றவர்களுக்கு வாட்டர் கேன் டிபன் பாக்ஸ் பரிசு வழங்கப்படும். 01-09-2019 ஞாயிறு இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்படும் புதிய கேள்வி ஒன்றுக்கு சரியான பதில் அளிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பழைய கேள்வி ஒன்றுக்கு சரியான பதில் அளிக்கும் ஒருவருக்கு ரூபாய் நுாறும் பரிசு வழங்கப்படும்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_31.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_31.html
K.M. நிஃமத்( D/O காயங்கட்டி
முஹம்மது பஸ்லுல் இலாஹி& சுல்தான் பல்கீஸ்) S.A. துர்ருல் முக்தார் B.E, (S/O சுல்தான்
அப்துல் ஹமீது & காயங்கட்டி
மும்தாஜ்) திருமணம் 25-08-2019 அன்று நடந்தது. அந்நிகழ்ச்சியில் உலகம் எப்படி உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவானது? என்ற தலைப்பில் சிறுமி இஸ்ரா ஆய்வுரை ஆற்றினார்.அதிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களிலிருந்து 17 பேர் பரிசுக்கு தேர் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்று 01-09-2019 ஞாயிறு மஃரிபு தொழுகைக்குப் பின் சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெருவில் வைத்து பரிசு வழங்கப்படும்.
கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களிலிருந்து பரிசுக்கு தேர் செய்யப்பட்டவர்கள்.
1
|
உம்மு ஜும்மா
|
2
|
K.K. ராபியத்துல் பஸரிய்யா
|
3.
|
S.A.முஹம்மது பைசல் S/oஅப்துல் ரவூப்
|
4.
|
R.M. ஹுமைரா
|
5.
|
S.A. தாபினா
|
6.
|
M. முஷ்பிக்
|
7.
|
S. ஷேக் ஈத்
|
8.
|
ஸமர்
|
9.
|
S. M. அப்துல் அஹத்
|
10.
|
S.J.ரஜா
|
11.
|
ந.முஹம்மது ரிபாயா
|
12.
|
K.M. அரபா
|
13.
|
A. ஆதிலா
|
14.
|
K.M. ஸபா
|
15
|
R.M. தவ்ஹீதா
|
16
|
L.M. ராழியா
|
17
|
L.M. மர்ழியா
|
18.
|
K.S. சமா
|
19.
|
T.R. ஆஷிகா
|
பரிசுக்கான விடைகள்.
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا
நிராகரிப்பவர்கள் சிந்தித்து
பார்த்து விளங்க வேண்டாமா? என்கிறான் அல்லாஹ். எதை சிந்திக்க வேண்டாமா? என்கிறான்
اَنَّ السَّمٰوٰتِ
وَالْاَرْضَ
நிச்சயமாக வானங்களும் பூமி அனைத்துமே
كَانَـتَا رَتْقًا
ஒன்றாக ஒட்டி
இறுக்கப்பட்டு இணைந்திருந்தன
فَفَتَقْنٰهُمَا
அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் பிளந்தோம். என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டமா? என்கிறான். எவ்வளவு
காலமோ சிரமப்பட்டு மெனக்கெட்டு பல தலைமுறைகள் பல நுாற்றாண்டுகள் சிந்தித்து பல காரணங்கள் மூலம்
பல நுாறு விஞ்ஞானிகள் சேர்ந்து கஷ்டப்பட்டு கண்டு பிடித்து சொன்னதை 1450
ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்லி விட்டான்.
ثُمَّ
اسْتَـوٰۤى اِلَى السَّمَآءِ
பின்னர் வானத்தை
படைக்க நாடினான்.
وَهِىَ دُخَانٌ
அது புகையாக
இருந்தது.
துக்கான் என்றால்
புகை அரபு நாட்டுக்கு போனவர்களுக்குத் தெரியும் மம்னுாவ் அல் தத்கைன் என்று போட்டு
இருப்பார்கள். அதாவது புகை பிடித்தல் கூடாது என்று. துக்கான் என்று ஒரு அத்தியாயமே
குர்ஆனில் இருக்கிறது.
فَقَالَ لَهَا
வானத்தை நோக்கி
சொன்னான்.
وَلِلْاَرْضِ
பூமியை நோக்கியும்
சொன்னான்.
ائْتِيَا طَوْعًا اَوْ
كَرْهًا
"விரும்பியோ, விரும்பாமலோ கட்டுப்பட்டு பூமி பூமியாகவும். வானம் வானமாகவும் ஆக வேண்டும் என்று
அல்லாஹ் கட்டளை இட்டான். ஏதோ ஒரு காரணத்துக்காக திடீரென வெடித்து சிதறியது என்றார்களே விஞ்ஞானிகள் அதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும்.
قَالَتَاۤ اَتَيْنَا طَآٮِٕعِيْ
"விரும்பியே கட்டுப்பட்டோம்'' என்று அவை கூறின.
உலகம் எப்படி உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவாக்கப்பட்டது? என்பதை குர்ஆன் அன்றே சொல்லி விட்டது. அந்த செய்தி முஸ்லிம் அல்லாத விஞ்ஞானிகளுக்கு சென்றடையவில்லை. குர்ஆன் கூறியதை அவர்கள் அறியாததால் தெரியாததால் குர்ஆனின் பக்கம் அவர்கள் கவனத்தை திருப்பவில்லை. அதனால் அவரவர்கள் அறிந்த வழியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முயற்சியில் ஒவ்வொருவிதமாக
கஷ்டப்பட்டு ஆய்வு செய்துள்ளார்கள்.
சிந்தித்தால் விளங்கும் என்கிறான் அல்லாஹ் அவர்கள் சிந்தித்தார்கள் விளங்கி விட்டார்கள். நாம் தான் குர்ஆன் கூறுவதை சிந்திக்காமல் குர்ஆனை பட்டுத்துணியால் கட்டி பரக்கத்துக்காக என பரன் மேல் வைத்து விட்டோம். இனிமேலாவது சிந்திக்க அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.
என்ன காரணத்துக்காக வெடித்து சிதறியது? என்பது முஸ்லிம் அல்லாத அந்த விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. அதனால் ஏதோ ஒரு காரணத்துக்காக வெடித்து சிதறியது என்று முடித்து விட்டார்கள். என்ன காரணத்துக்காக வெடித்து சிதறியது? ஆய்வு செய்த முஸ்லிம் அல்லாத அந்த விஞ்ஞானிகள் சுருக்கமாக சொல்லி உள்ள முடிவுகள் என்ன? இரண்டு தான். ஒன்று வானம், பூமி எல்லாம் ஒன்றாக இருந்தது. அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு புகையாகவே
இருந்தது. ஆக இந்த இரண்டு விஷயங்களைத்தான் முடிவாகச் சொல்லி உள்ளார்கள். அதைத்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லி உள்ளான்?
இருந்தது. ஆக இந்த இரண்டு விஷயங்களைத்தான் முடிவாகச் சொல்லி உள்ளார்கள். அதைத்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லி உள்ளான்?
Comments