கொள்கைப் புலிகளா? விலைக்கு வாங்கப்பட்ட கோர்ப் புளிகளா? த.மு.மு.கவில் கொள்கைப் பிரச்சனையா?
இங்கே இருக்கிற பி.ஜைனுல்ஆபிதீன் தன்னுடைய கொள்கையை அவர் அவரிடத்திலே வைத்துக் கொள்வார். இந்த (த.மு.மு.க) மேடையிலே அவருடைய கொள்கையை இங்கே சொல்ல மாட்டார். சொல்லக் கூடாது என்கின்ற ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நாங்கள் அத்துனை பேரும் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். http://mdfazlulilahi.blogspot.in/2018/04/blog-post_21.html நாங்கள் இருக்கிறவர்கள் அத்துணை பேரும் பல்வேறுபட்ட பிரிவுகளாக உள்ளவர்களாக இருந்தாலும் எங்களுக்குள் ஒரு அக்ரிமெண்ட் – ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் நீ அப்படித் தெழுகிறாயா? நீ இப்படித் தெழுகிறாயா? நீ இப்படித் தொழ வேண்டுமே. நீ இப்படி தொழு என்று சொல்கிறவர்களாக (இருக்க மாட்டோம்) தொழு(ங்கள்) என்று சொல்லுவோம். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவோம். அதனுடைய முறைகளை சொல்லிக் கொடுப்பவர்களாக இந்த (தமுமுக) மேடை இருக்காது. அப்படி யார் அதை சொல்வதற்கு வந்தாலும் அவர் இந்த மாநிலத்துடைய பெரிய பொறுப்பில் இருக்கின்ற அமைப்பாளர் பொறுப்பில் இருக்கின்றவர் வந்தாலும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கின்ற உறுதி மொழியை வாங...