TNTJ யின்Ex இரட்டைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான A.S. அலாவுதீன் ம.ஜ.க.வில் இணைந்தார்
யாரும் யாரோடும் போகலாம். அது அவரவர்கள் விருப்பம் உரிமை என்பார்கள். மார்க்க ரீதியாக அது சரியா தவறா? என்பது பற்றி பல பிரபலங்கள் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். அவர்கள் எழுதியதற்கும் பேசியதற்கும் மாற்றமாக நடந்தும் இருக்கிறார்கள்.
பல்வேறு செயலாளர்களுக்கு மேலாக உள்ள (பொறுப்புக்கு) செயலாளருக்குப் பெயர்தான் பொதுச் செயலாளர் (ஜெனரல் செகரட்டரி) என்பது. அந்தப் பெயரிலேயே அர்த்தம் இருந்தும். அர்த்தமற்ற முறையில் இரண்டு பொதுச் செயலாளர்கள் (ஜெனரல் செகரட்டரி) முறையை 2005ல் ததஜ அமுல்படுத்தியது யாருக்காக? A.S. அலாவுதீன் அவர்களுக்காக.
அவ்வளவு சிறப்புவாய்ந்த முன்னால் TNTJ மாநிலப் பொதுச் செயலாளர் உணர்வு, தீன்குல பெண்மணி இதழ்கள் வெளியீட்டாளர் A.S. அலாவுதீன் ம.ஜ.க.வில் இணைந்தார் என்று செய்தி போடவில்லை.
இறைவன் நாடினால் த.மு.மு.க.வின் நிறுவனர்களில் ஒருவர் ம.ஜ.க.வில் இணைகிறார். இப்படி 2 நாளாக வட்ஸப்களில் செய்திகள் வலம் வந்தன. இணைந்த பிறகும் த.மு.மு.க.வின் நிறுவனர்களில் ஒருவர் என்றே போட்டு இருந்தார்கள்.
த.மு.மு.க.வுக்கு நிறுவனர் உண்டு. நிறுவனர்கள் என்பது கிடையாது. 1984 இல் த.மு.மு.க.வை நிறுவியவர் குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்கள்தான் என்பதை பல முறை மேடைகளிலும் பிளாக்கரிலும் ஆதாரத்துடன் தெரிவித்து இருக்கிறேன்.
1989ல் பா.ம.க. தொடங்கப்பட்டு பொருளாளராக ஆக்கப்பட்ட பின் அதில் முழுமையாக செயல்பட்டார்.
1993ல் இருந்து நடந்த விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை ஒட்டி ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வந்தார்கள்.
ஜாக்கில் இருந்து கொண்டு இவற்றுக்கு மூல காரணமாக இருந்தவர் பி.ஜே. அவர் தனக்கு ஏற்பட இருந்த பேராபத்தை சமுதாயத்துக்கு ஆபத்து என்று கூறி ஒரு அணியினரை திரட்டி வைத்திருந்தார்.
கோவை பாஷா பாயை தலைவராகக் காட்ட அமைப்பு துவங்க வேண்டும். பெரிய மக்கள் சக்தி அவர் பின்னால் இருப்பதாகக் காட்டினால்தான் தடாவில் இருந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கூறி ஜவாஹிருல்லாஹ், இஸ்மாயில் நாஜி, பாக்கர், சுகர்னோ போன்றவர்களை பயன்படுத்தி வந்தார். அவர்களுக்கு பி.ஜே.யின் உள் நோக்கம், சுய ரூபம் தெரியாது.
முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை என காலம் கழிந்தது. 1995 ஆகஸ்ட் 15 அன்று பாக்கர் தடாவில் போடப்பட்டார். வட்டம் சுருங்கி அடுத்து பி.ஜே. தான் என்று ஆனது. தனக்கு வர உள்ள ஆபத்தை உணர்ந்த பி.ஜே. சமுதாயத்துக்கு ஆபத்து என்று பல பிரமுகர்களுக்கு சொல்லி அனுப்பினார்.
பி.ஜே.யின் சுய ரூபம் தெரியாத குணங்குடி ஹனீபா, அந்நஜாத் Er அப்துஸ்ஸமது, செய்யது நிஸார் அஹ்மது, விஞ்ஞானி அப்துல் ஜலீல், எஸ். ஹைதர் அலி போன்றவர்கள். சமுதாயத்துக்கு ஆபத்தா இதோ நாங்களும் களத்துக்கு வருகிறோம் என வந்தார்கள்.
முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை போன்றவற்றிலும் செயல்பட்ட ஜவாஹிருல்லாஹ் எல்லாரும் சேர்ந்து 1995 ஆகஸ்டு 15க்குப் பிறகு. குணங்குடி ஹனீபா அவர்களின் த.மு.மு.க.வை சமுதாயத்திற்காக புனர் நிர்மாணம் செய்தார்கள். சமுதாயத்தின் பெயரால் ஆதாயம் அடைந்தார் பி.ஜே.
முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை போன்றவற்றிலும் செயல்பட்ட ஜவாஹிருல்லாஹ் எல்லாரும் சேர்ந்து 1995 ஆகஸ்டு 15க்குப் பிறகு. குணங்குடி ஹனீபா அவர்களின் த.மு.மு.க.வை சமுதாயத்திற்காக புனர் நிர்மாணம் செய்தார்கள். சமுதாயத்தின் பெயரால் ஆதாயம் அடைந்தார் பி.ஜே.
பி.ஜே. யைக் காப்பாற்றத்தான் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது. காரைக்கால் ஜாமிஆ புஷ்ரா மகளிர் இஸ்லாமிய கல்லுாரியில். நடுநிசிக்கு மேல் விடிய விடிய பி.ஜே. இமாம் அலியுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது உடன் இருந்தவர்களுக்கு இது தெரியும்.
அப்படிப்பட்ட A.S. அலாவுதீன் பொன்னாடை போர்த்தும் பண்ணாடைகள் என்று விமர்சித்த TNTJயை விட்டு ஒதுங்கி இருந்தார் என்று சிலர் அவர்களுக்கு தெரிந்ததை எழுதி உள்ளார்கள். பலர் பலவிதமாக விமர்சித்துள்ளார்கள்.
A.S. அலாவுதீன் அவர்கள் ததஜவுக்கு செய்த மகா சேவைகளை சிலாகித்து 2004 ல் உணவர்வு அலாவுதீன் சிறப்பு இதழாக வந்தது. 30 , 40 பேர் சேர்ந்து மிதி மிதி என மிதித்து இருக்கிறார்கள் மர்ம ஸ்தானத்தில். அவர் விரை வீங்கி இருக்கிறது."கழுத்துலே ஒரு ரூபாய் சைஸுக்கு தோல் இல்லை. ரத்தம் வடியுது
அப்படிப்பட்ட தியாகியை ததஜவில் இருந்து வந்தவர் என்று சொல்வதை அவர்கள் கேவலமாகக் கருதி த.மு.மு.க. பெயரை பயன்படுத்தி உள்ளார்கள் என்று சிலர் எழுதி உள்ளனர். எப்படியாவது த.மு.மு.க. பெயரை பயன்படுத்தட்டும். அவரவர் விருப்பம். அவர் நிறுவனர் இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/tntj-ex-as.html
Comments