சுயநலத்திற்காக சமுதாய உணர்வுகளைத் தூண்டினாரா பிஜேவின் புரோக்கர் அப்போலா ஹனீஃபா?
“என்னை ஒதுக்கி வைத்துள்ளார்கள். என்னை நிலைநாட்ட சில பிரச்சினைகளை கையில் எடுக்க நினைத்துள்ளேன். அப்போது எனக்கு உதவி செய்யுங்கள்”- அப்போலா ஹனீஃபா
தன் சுயநலத்திற்காக சமுதாய உணர்வுகளைத் தூண்டினாரா பிஜேவின் புரோக்கர் (as accused)அப்போலா ஹனீஃபா?
சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட பிஜேவின் ஸ்பீடு மேட்டரில் (Allahu A’lam) இடைத்தரகராகச் (as accused in an audio tape)செயல்பட்டவர் அப்போலோ ஹனீஃபா என்ற விஷயம் சமுதாயத்தவர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் வகித்த அனைத்து தமிழக முஸ்லிம்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வந்தன.
இச்சூழ்நிலையில் ...
சில தினங்களுக்கு முன் தமிழக அமைச்சரால் கூட்டப்பட்ட முத்தலாக் சம்பந்தப்பட்ட ஓர் கூட்டத்தில் கலந்து கொண்ட அப்போலா ஹனீஃபா உதிர்த்ததாகச் சொல்லப்படும் வார்த்தைகள் தான் இப்பதிவின் முதல் பாரா.
இவ்வாறு அவர் பேசிய சில தினங்களுக்குள் மத்ரஸா ஆஸம் விஷயம் நள்ளிரவில் பூதாகாரமாக்கப்பட்டு, சமுதாயத்தவர் மத்தியில் ஓர் கொந்தளிப்பு நிலை உருவாக்கப்படுகின்றது. அவர் ஒருங்கிணைப்பில் இப்பிரச்சினை அணுகப்படுவதாக ஓர் பிம்பம் எழுப்பப்படுகின்றது.
அதன் கூடவே சமுதாயத்தின் மானத்தையே கப்பலேற்றும் சில ஆடியோ க்ளிப்களும் சுற்றுகின்றன.
இப்பதிவின் முதல் பத்தியில் கூறப்பட்ட வார்த்தைகளை அவர் கூறினாரா இல்லையா என விளக்கம் அளித்திட வேண்டும்.
இல்லை எனில், சிதைந்து சின்னாபின்னமாகிப் போய் இருக்கும் அப்போலோ ஹனீஃபாவின் இமேஜைத் தூக்கி நிறுத்தி, அப்போலோ ஹனீஃபா என்ற புரோக்கரை (as accused) தன் ரிமோட் கன்ட்ரோலாக வைத்து அனைத்து தமிழக முஸ்லிம்கள் கூட்டமைப்பை மறைமுகமாக கட்டுப்படுத்த மண்ணடி மைனரின் திரைக்கதையில் அமைந்த ஓரங்க நாடகம் தான் இது என்று பரபரப்பாக சுற்றும் ஆன ஆடியோ க்ளிப்கள் உண்மையாகி விடுமோ என அஞ்சுகின்றேன்.
மத்ரஸா ஆஸம் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அரசோடு முறையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிஜேபியின் பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி அரசால்
கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு, அவர்கள் வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் தரப்பிலிருந்து உறுதியாகச் சொல்லப்படாத வரை இதை தெரு அரசியலாமாக்காமல் இருப்பது சமுதாயத்திற்கு நல்லது.
சம்பந்தப்பட்டவர்கள் முறையான அழைப்பு விடுக்கும் போது சமுதாயம் இன்ஷா அல்லாஹ் களம் காணும்.
அதுவரை சுயநலக் கிருமிகளின் சுயநல ஆதாயங்களுக்கு சமுதாய உணர்ச்சிகளை பலியாக்க வேண்டாம் என்பதே அப்போலோ ஹனீஃபாவிற்கு முட்டுக் கொடுக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நம் வேண்டுகோள்
Comments