1995 ஆம் ஆண்டுதான் த.மு.மு.க. துவங்கப்பட்டது பெயர் வைக்கப்பட்டது என்பது சரியா?

966 50 946 8014 என்ற நம்பருக்குரிய சகோதரர் அவர்கள் அனுப்பிய வாட்ஸப் செய்தியில்  ராமநாதபுரம் ராஜா உசேன் அவர்கள் பற்றியும் இருந்தது. ராமநாதபுரம் ராஜா உசேன் ஒரு சமுதாயப் போராளி, சமுதாய நல விரும்பி என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் பற்றிய விபரத்தை பார்க்கும் முன்.

த.மு.மு.க. 1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது போன்றும். 1995ல் தான் த.மு.மு.க. என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது போன்றும் உள்ள செய்தியை அனுப்பி இருந்தார்கள். அது அவரளவில் தெரிந்ததாக இருக்கும். அல்லது அவருக்கு வந்ததை அனுப்பி  இருப்பார்.  அதற்கு நமது விளக்கங்களையும் ஆதாரங்களையும் முதலில் தருகிறோம்.


இது நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் 28.01.1989ல் வந்த செய்தி

1989ல் அ.தி.மு.க.வை ஆதரித்த த.மு.மு.க. பற்றிய பத்திரிக்கைச் செய்தி.மூலம் த.மு.மு.க. என்பது 1995ல் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அதற்கு முன்பாகவே உள்ள அமைப்பு என்பதை ஆதாரத்துடன் அறிகிறீர்கள்.

த.மு.மு.க. 1984 ஆம் ஆண்டு குணங்குடி ஹனீபா அவர்களால் துவங்கப்பட்டது. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக 1984 முதலே குணங்குடி ஹனீபா தனது த.மு.மு.க. மூலம் போராடி வந்திருக்கிறார். பல உண்ணாவிரதங்களில் அவரும் அவரது பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர்.




1987இல் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடத்திய அமைப்பு த.மு.மு.க. தான் நடத்தியவர் குணங்குடி ஹனீபாதான்


1987 ஆம் ஆண்டு  ஒரு கட்சி  தலைவர் குடியரசு தினத்தை கறுப்புத் தினமாக அறிவித்து விட்டார். அதைக் கண்டித்து 16-1-87இல்  சென்னை காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் என அறிவித்தார் குணங்குடி R.M.  ஹனீபா.  16-1-87 தேதி வந்தது. காந்தி சிலை அருகில் காவல்துறை அதிகாரிகள் குவிந்தனர். 

உண்ணாவிரதம் இருக்க எவ்வளவு பேர் வந்தார்கள்? குணங்குடி R.M.  ஹனீபாவும்  அவரது இரு சிறு பையன்கள் மட்டுமே வந்தனர். காவல் துறை அதிகாரிகள் படிக்க வேண்டிய வயதப்பா உங்களுக்கு என்று கூறி குணங்குடி மைதீன் ரஸாக், குணங்குடிசுல்தான் ஆகிய இரண்டு பையன்களையும் வீட்டில் கொண்டு போய் விட்டனர். குணங்குடி R.M.  ஹனீபா அவர்களை அரஸ்டு பண்ணி கொண்டு போய் விட்டார்கள். 


குடியரசு தினத்தை கறுப்புத் தினமாக அறிவித்து விட்ட கட்சியைப் பார்த்து அரசு படையே நடுங்கியது. அந்த நாளில் தைரியமிக்க இப்படி ஒரு தேச பற்றாளர் இருக்கிறார் என்ற செய்தி அன்றைய முதல்வர் M.G.R. அவர்களுக்குச்  சென்றது. குணங்குடி R.M.  ஹனீபா அவர்களுக்கு தேசப் பற்றாளர் விருது வழங்குவதாக அறிவித்தார். அதன் பிறகு M.G.R.  இறந்து விட்டதால் அந்த தேசப் பற்றாளர் விருது குணங்குடி R.M.  ஹனீபா அவர்களுக்கு கிடைக்கவில்லை. 



அதே ஆண்டு  M.G.R. உடைய வீட்டிற்கு போய் விட்டார் குணங்குடி R.M. ஹனீபா. அப்பொழுது த.மு.மு.க. என்பது சென்னை அளவிலான சின்ன இயக்கம்தான். அவரோடு 10 பேரை சேர்த்துக் கொண்டு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டிற்கு போய் விட்டார். தொப்பி போட்டுக் கொண்டு சென்றதால் காவல்துறை அதிகாரிகள் உள்ளே விட்டு விட்டனர். அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் என்றால்காவல்துறை அதிகாரிகள் நன்கு மதிப்பார்கள். ரொம்ப சோதனை செய்ய மாட்டார்கள். 

எம்.ஜி.ஆர். வெளியே வந்ததும் மறைத்து வைத்திருந்த கறுப்பு துணியை அசைத்துக் காட்டி இட ஒதுக்கீடு கொடு, இட ஒதுக்கீடு கொடு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கோஷம் போட்டார். அங்கே நின்ற காவல்துறை அதிகாரிகள் இவர்களை ஒடுக்க முயற்சித்தனர். எம்.ஜி.ஆர். அதிகாரிகளை தடுத்து குணங்குடி R.M. ஹனீபா அவர்களை தட்டிக் கொடுத்து இனி இது மாதிரி செய்யக் கூடாது என அன்போடும் கண்டிப்போடும் கூறி, உங்கள் கோரிக்கைகளை எழுதி கொடுங்கள் என்றார்.


26-11-1987 வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலக புதிய கட்டிடத்தின் 10ஆவது மாடியில் வைத்துப் அனைத்து ஜாதி அமைப்புகளையும் அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக எம்.ஜி.ஆர். பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் முஸ்லிம்கள் சார்பாகஅழைக்கப்பட்ட ஒரே அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்தான்.


குணங்குடி ஹனீபாவின் அனுமந்தக்குடி வீட்டுக்கு வந்த அழைப்பு


குணங்குடி R.M. ஹனீபா முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தார்கள். அதில் வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குணங்குடி ஹனீபா பேசினார். இதன் பின்னர்தான் ராமதாஸ் அவர்கள் குணங்குடி ஹனீபாவை அழைத்து பா.ம.க. பொருளாளராக ஆக்கினார். த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபாதான் வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க மூல காரணமாக இருந்தவர்.


ஹனீபாவின் செயல்பாடுகளைக் கண்ட டாக்டர் ராமதாஸ் ஹனீபாவை பா.ம.க.வில் இணைத்து மாநில பொருளாளர் பொறுப்பு கொடுத்தார். 




ஹனீபா பா.ம.க. பொருளாளராக இருந்தபோது வட்டம்மாவட்டம்நகரம் என எல்லாக் கிளைகளிலும் தலைவர்செயலாளர்பொருளாளர் ஆகிய பொறுப்புகளில் ஒன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று பா.ம.க.வில் நடைமுறைபடுத்தினார்


அவர் வைத்த நிய்யத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அவர் நினைத்து பார்க்காத அளவுக்கு பெரிய அமைப்பாக மாறியது. இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தது

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

966 50 946 8014 என்ற நம்பரிலிருந்து. வந்ததில் ராமநாதபுரம் ராஜா உசேன் அவர்கள் பற்றியும் எழுதி இருந்தது. அவர்  ஒரு சமுதாயப் போராளி, சமுதாய நல விரும்பி என்பதை யாரும் மறுக்க முடியாது. தவ்ஹீது கொள்கை உடைய அவரைப் பற்றி 1991 ஆண்டு முதல் தெரிந்தவன் நான்

1989க்கு முன்புவரை தி.மு.க.வில் இருந்த அவர் கருத்து வேறுபாடு விலகினார். ஜான்பாண்டியன் அவர்களுடன் இணைந்து சமூகப் பணிகள் செய்து கொண்டிருந்தார். 

பா.ம.க. துவங்கப்பட்டபோது ஜான்பாண்டியன் மாநில இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அவருடன் பா.ம.க.வில் ராமநாதபுரம் ராஜா உசேன் அவர்களும் இணைந்தார்கள். முதலில் ராமநாதபுரம் நகரச் செயலாளராகவும் பிறகு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராகவும் ஆனார்.

ராஜா உசேன் அவர்களுக்கு மதுரையில் வைத்து திருமணம் நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. மாநில பொருளாளர் குணங்குடி ஹனீபா வாழ்த்துரை வழங்கினார்கள். கோவை பாஷா பாய் அவர்கள் நண்பர்கள் புடை சூழ வந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அண்ணன் ராஜா உசேன்   பா...வில்  இருந்ததும்  பிறகு  .தி.முக.வில்  இருந்ததும்  சமுதாய நல நோக்குடன் தான்வை.கோ.வுடன் நடை பயணம் போய்க் கொண்டு இருக்கும் போது கைது செய்யப்பட்டார்கள்வை.கோஅவருக்காக குரல் கொடுக்கவி்ல்லை என்பது என் நினைவு.1998 ஆம் ஆண்டு துபை வந்த அவர்களுடன் பல முறை போனில் பேசி  இருக்கிறேன். 

2005ல் அவர் இல்லம் சென்று சந்தித்து இருக்கிறேன். அவர் பொறுப்பில் உள்ள பள்ளிவாசலுக்கு மவுலவி M.A.S. செய்யது அஹ்மது ஸலபி அவர்களுடன் சென்று தொழுதிருக்கிறேன்.


தன்னைத் தவிர உலகத்தில் உள்ள அனைவரையும் இழிவுபடுத்தக் கூடிய பி.ஜே. அவரைப் பற்றியும் இழிவுபடுத்தாமல் இருக்கவில்லை.



1994 ஆகஸ்ட் 28 ஆம் தேதி குற்றாலத்திற்கு அருகில் உள்ள தென்காசியில்தான் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்தேன்அந்த தென்காசி  சந்திப்புகள் பற்றி பல முறை எழுதிய நான் அதில் அண்ணன் ராஜா உசேன் போன்றவர்கள் கலந்து கொண்டது பற்றி எழுதவில்லை.


அது பற்றி பிறகு பார்ப்போம் த.மு.மு.க. பற்றியும் சகோதரர் எழுதி உள்ளதால் அது பற்றிய விபரத்தை மேலே தந்துள்ளேன். .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
[1:39 AM, 12/8/2017] +966 50 946 8014: என்ற நம்பரிலிருந்து வந்த வரலாற்றுச் செய்தி 

பிஸ்மில்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்..
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதன் உண்மை வரலாறு.
தமுமுக முதல் முதலில் துவங்க பட்டது பற்றி பல பேர் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிபடையில் அவரவர்கள்
பலவிதமான தகவல்களை தங்கள் முகநூல்களிலும்
மற்றுமுள்ள தகவல் தொடர்ப்பு மூலமாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இதன் உண்மை தன்மையை அறிந்தவன் அல்லாஹ்.
அதற்க்கு அடுத்தபடியாக மணிதர்களில், என்னை 
அல்லாஹ் சாட்ச்சியாக ஆக்கி உள்ளான் .

புத்தி உள்ள மணிதர்ரெல்லாம் வெற்றி கண்டதில்லை.
வெற்றி பெற்ற மணிதர்ரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற இந்த வாக்கியம்,திரைபட பாடலாக இருந்தாலும், நம்மை அறியாமையிலே நம் மனதில் பதிவாகிவிட்டது.அதை இந்த இடத்தில் சொன்னால்தான் நான் சொல்லவரும் தகவலுக்கு பொருத்தமாக இருக்கும்.
 நீங்கள் எண்ணி கொண்டதுபோல் தற்போது இருக்க கூடிய நம் சமுதாய தலைவர்களின் அறிவு  ஆற்றல் மூலமாக சிந்தித்து  இவர்களின் மண்டையில் உதித்தது இல்லை இந்த இயக்கம்.
இந்த மரத்தின் விதையே,ராமநாதபுரம்  அண்ணண் ராஜா உசேன் அவர்களே. இதை இறைவனை சாட்சியாக வைத்து கீழே நான் சொல்லவரும் நபர்களால்  யாரும் மறுக்க முடியாது.
இந்து முண்ணணி தலைவன் ராஜகோபாலன் என்பவன் போது மேடைகளில் முஹம்மது நபி ஸல்லாஹூ....
அவர்களை மிகவும் தரகுறைவாக பேசி வந்தான்.இவன் ஆம்பூர் கூட்டத்தில் உச்ச கட்டமாக இழிவாக பேசினான்.இதை அந்த ஊர்மக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை அதை டேப்ரிக்காடில் பதிவு மட்டுமே செய்ய முடிந்தது இந்த டேப் ரிக்காட் பதிவை ஷஹீத் பழனி பாபாவிடம் கொடுத்து இருக்கிறார்கள்.இதானால் ஆவேசம் அடைந்த பழனி பாபா இதற்க்கு தீர்வு கான பொது மேடைகளில்,இஸ்லாமிய அழைப்பு இளைஞர்களை அழைத்தார்
அல்லாஹ் திருமறையில் நீங்கள் இருபேர் இருபதுபேருக்கு சமம் என்கிறான் நீங்கள் 20, பேர் இரநூறு பேருக்கு சமம்.
.பஃத்ர் போரில் நீங்களா வெற்றி பெற்றீர்கள் நானே ஐராயிரம் போர்புரியும் மலக்குமார்களே இறக்கி வெற்றிபெற செய்தேன் இந்த வசணத்தின் மீது நம்பிக்கையில்லையாஎன்று பல முறை பல இடத்தில் இந்த வசணத்தை சொல்லி இஸ்லாமிய வீரர்கள் உறுவாக பாபா தன்  பேச்சின்மூலமாக உறுவாக காரணமாக இருந்தார்.வீர பேச்சு பல இடத்தில் மேடை பேச்சி பேசபட்டது.இந்த தறுநத்தில் ராஜகோபாலன் கீழக்கரை என்ற ஊரில் பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் வினாகயர் ஊறுவலம் போய் கலவரம் முத்தி அதன பிறகு மதுரையில் ராஜபோபாலன் கொலை செய்யபடுகிறான்.இநத கொலைவழக்கில் ஒருசில இளைஞர்களை போலிஸ் தேடி வந்தது இந்த இளைஞர்கள் ராமநாதபுரதில் ராஜா உசேன் அவர்களின் வீட்டில் தங்கி இருப்பதாக போலிஸ்க்கு எண்ணம் தோன்ற அங்கே சென்று பார்ததில் இல்லை என்பதால் அவர்மீது தடா வழக்கு பாயிகின்றது இதை தவிற்க்கவே அண்ணண் ராஜா அவர்கள் சென்னை வந்தார் ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு செய்து இருந்தார்.
இதர்க்கு வழக்கு சம்பந்தமாக உதவி செய்ய அவர்உடன் நான் தங்கி இருந்தேன் (இந்த நேரத்தில்தான் இயக்கம்  பேச்சி பேசபட்டது நான் உடன் இருந்தேன்) ராஜா  உசேன் அண்ணணை பார்க்க,பாக்கர் பாய்  வந்தார்.இப்படி பார்க்க வந்துகொண்டு இருக்கும் வேலையில்தான் முதல்முதலில் ராஜா அவர்கள்தான்  இப்படி கூறினார்கள் நம் சமுதாயத்திற்க்காக ரோட்டில் இறங்கி போராட இயக்கம் துவங்கினால்தான் இனிவரும் காலங்களின் இத்தகைய கொடுமைகளை தடுக்க முடியும் நான் பல அரசியல் கட்சியில் இருந்து பல போராடங்களை சந்தித்து இருக்கிறேன் இதன் மந்திரமே மக்கள்தான்;நான் நாலு லாரியை எங்கள் ஊரில் நிப்பாட்டி ஏறுங்கள் என்று சொன்னாலே போதும் உடனே லாரி நிரம்பி விடும் (அந்த காலத்தில் லாரிதான் )அந்த மாதிரி அனுபவம் அரசியலில் அடிகடி நான் நடத்திகொண்டுதான் இருக்கிறேன்  என்று அதிகமாக மூச்சு,தண்ணிபோக்க பேசியதை நான் கேட்டேன்.அதன் பிறகு இதேபேச்சை,
ஆலோசனையை ஜவாஹிருல்லாஹ் அவர்களையும் திருவல்லி கேனிக்கு அழைத்து பேசபட்டது,அவரும் சரிபார்க்கலாம் என்றார்,அடுத்து பிஜேயை போனில் தொடப்பு கொண்ட போது நான் அல் ஜன்னத்து பத்திரிக்கை சம்பந்தமான  வேலையில் உள்ளேன் நீங்கள் எங்கள் இடத்திற்க்கு வரும்படி கேட்டு கொண்டார் நாங்களும் அங்கே சென்றோம் ஆலோசனை சொல்லபட்டத்திற்க்கு  சரி பார்க்கலாம் என்றார்.அதன்பிறகு குனங்குடி அனிபா அவர்களை தொடப்பு கொண்ட போது ok,நான் நேரிலே வருகின்றேன் என்று அவரும் வந்துவிட்டார்.ஆலோசனையை கேட்டுவிட்டு படு சூப்பர் அத்தா என்றார். நான்அனைத்து ஆலோசனையும் தருகின்றேன் முழு ஒத்துளைப்பும் தருகின்றேன் முடிந்தால் பாமக பொருளாளர் பதவியை ராஜிநாம செய்கின்றேன் என்றார்.இது பல முறை முயர்ச்சி செய்யபட்டது பெயர் கூட முஸ்லிம் முண்ணனி வைக்கலாம் என்றார் ராஜா அவரகள் அதற்க்கு
ஜவாஹிருல்லா அவர்கள் இந்த பேர் வேண்டாம் அவர்கள் இந்து முண்ணணி இருப்பதால் ,பெயர்கூட குதர்க்கமாக இருக்கு முஸ்லிம் அழகிய மன்றம் என்று இவர் பேர் சொல்ல .இந்த தறுநத்தில் பாபர் மசூதி இடிப்பு தினம் மூறாம் வருடம் வர இருந்தது அந்த நேரத்தில் கண்டண போஸ்டர் முஸ்லிம் முண்ணணி என்ற பேரில் ஒட்டபட்டன. இந்த நேரத்தில்தான் போலிஸ் ராஜா அண்ணணை தேட வர அவர் வெளிவூர் செல்ல மீண்டும் சென்னை வர, சிபி ஐ தடா பிரிவில் ராஜா அண்ணணையும் பாக்கர் பாயும் கைது செய்கின்றார்கள்.அதன்பிறகு ராஜா அண்ணணை கண்டு கொல்லாமல் துரோகம் இழைத்துவிட்டு அவரவர்கள் ராஜாவாக அறிவித்துவிட்டார்கள்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/1995.html 


Comments

Unknown said…
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Online Tamil News

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு