ரைசுத்தீன் மீது விபச்சார வழக்கு இருக்குமானால் அவரையும் இந்தச் செய்தி பொய்யாக இருந்தால் பொய்யர்களையும் அல்லாஹ் நாசமாக்குவானாக.
· ரைசுத்தீன்
அவர்களுக்கும் எனக்கும் கொள்கை
ரீதியாக கருத்து
வேறுபாடுகள் உண்டு. அரசியல் பின்பலம் உள்ள வி.ஐ.பி.க்களின்
அயோக்கியத்தனங்களை எதிர்த்து நிற்க தனித் தைரியம்
வேண்டும். அந்த தைரியம் ரைசுத்தீன்
அவர்களிடம் உண்டு.
கடந்த 09.11.2017 வியாழக்கிழமை அன்று இரவு விபச்சார
அமைப்பைச்
சார்ந்தவர்கள் 11 பேர் பைக்கில் வந்து அவரது காரை மறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இதை
முகநுாலில் என்னை விமர்சித்த
சகோதரரின் இன்பாக்ஸில் தெரிவித்து இருந்தேன்.
ரைசுத்தீன் அவர்கள் பெயரை
குறிப்பிடவில்லை.
எந்த ஜட்ஜிடம் அந்த பெண்ணை ரைசுத்தீன் ஒப்படைத்தாரோ அந்த
ஜட்ஜ் இடமே விபச்சார வியாபாரிகள் பிரஷ்ஷரால் ரைஸ் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். அந்த ஜட்ஜ் ஜாமீன் வழங்கி
விட்டார்.
பிறகு விபச்சார கூட்டத்தின் பிரஷ்ரால் குண்டாஸில் போடப்பட்டார். இப்போதைக்கு
மற்றவர் வெளியிடாத பத்திரிக்கைச் செய்தியை உங்கள் பார்வைக்கு
வைக்கிறேன். விபச்சாரகர்களையும் விபச்சார புரோக்கர்களையும்
ஆதரித்து நிற்பவர்கள் மீது அல்லாஹ்வின் லஃனத்
இறங்கட்டுமாக
·
o
o
Posted
Date : 06:00 (07/08/2011)
·
·
·
வி.ஐ.பி-களை காப்பாற்ற பேரம் பேசுகிறதா காவல்துறை?
ராமநாதபுரம் பாலியல் கொடுமை!
திருவனந்தபுரத்தில் ஒரு
சிறுமியைப் பாலியல் தொழிலில் பந்திவைத்த அதிர்ச்சியே தீராத நிலையில்...
தமிழகத்திலும் ஒரு கொடுமை அம்பலம் ஆகியுள்ளது! மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வாகைக் குளத்தைச் சேர்ந்த ஈஸ்வரிக்கு (பெயர்
மாற்றப்பட்டுள் ளது) 14 வயதில் திருமணம் நடந்தது. மண
வாழ்வுக்கான பக்குவம் அடையாத நிலை யில், அந்த உறவு முறிந்தது.
அதன் பிறகு ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார், ஈஸ்வரி.
ஒரு நாள், வேலை முடித்து வீடு
திரும்பக் காத்திருந்த ஈஸ்வரியை, அவருடன் வேலை பார்த்த
தோழி ஒருவரின் தாய் ஆசை வார்த்தை காட்டி அழைத்துச்
சென் றார். பாலியல் தொழிலில் தள்ளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள
புரோக்கர்களின் கைகளில் சிக்கிய ஈஸ்வரி, கடந்த இரண்டு
ஆண்டுகளாக பலரால் சீரழிக்கப்பட்டார். ஈஸ்வரியின் குழந்தைப்
பாங்கான தோற்றம் மற்றும் வயதைக்
காட்டி, ஒவ்வொரு கஸ்டமரிடமும் 'ஃப்ரெஷ் பீஸ்’ என்று சொல்லியே
கொள்ளைப் பணம் கறந்துள்ளனர் புரோக்கர்கள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ஈஸ்வரியை ரைசுதீன் என்பவர் மீட்டு, ராமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸாரது விசாரணையில் தென்மாவட்டங்களில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள் ஈஸ்வரியை சிதைத்தது
தெரியவந்துள்ளன. இதில், மதுரை புரோக்கர்கள் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் ஜலீல் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டு உள்ளது!
ஈஸ்வரியை போலீஸாரிடம் அழைத்துவந்த ரைசுதீனிடம்
பேசினோம். ''கடந்த சனிக் கிழமை ஈஸ்வரியை புரோக்கர் கள்
செல்வியும், ருக்மணியும்
ராமநாதபுரத்துக்குக் கூட்டிவந்து, பாரதிநகரில் அழகு
நிலையம் நடத்தி வரும்
ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
அமுதா என்பவ ரின் வீட்டில் இதற்கான டீலிங் நடக்க... ஈஸ்வரி மைனர் பெண் என அமுதாவுக்குத்
தெரியவந்துள்ளது. உடனே, ஈஸ்வரியை அனைத்து
மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல்
துரத்திவிட்டார்கள்.
இதன் பிறகு ஈஸ்வரியை அமுதா, தன்னுடன் அழைத்துப்
போய்விட்டார்.
இதனால் கடுப்பான செல்வி குரூப் வாகைக்குளம் சென்று, ஈஸ்வரியின்
தாயிடம், 'உன் மகளை ராமநாதபுரத்தில் பிடிச்சு வெச்சிருக்காங்க.
அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிடுவாங்க. நீங்க வந்தா, விட்டுருவாங்க’ன்னு சொல்லி
இருக்காங்க. கடந்த ஒரு வருஷமா ஈஸ்வரி பத்தின தகவல்
எதுவும் தெரியாம இருந்த அந்தம்மாவும் இவங்களோட ராமநாதபுரம் வந்து... அமுதா
வீட்டுக்குப் போய், தன் மகளின் நிலையைப்
பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. ஈஸ்வரியை அவங்க அம்மாவோட அனுப்ப அமுதா ஏற்பாடு
செய்ய... இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, செல்வி தரப்பினர்
தகராறு செய்தனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி அருகில் இருந்த தொண்டு
நிறுவனத்துக்குள் ஓடி வந்து விட்டார்.. அங்கிருந்த நான், ஈஸ்வரியை விசாரிச்சப்பதான்மொத்தக் கொடுமையும்
தெரிஞ்சது.
இது பத்தி தென்மண்டல ஐ.ஜி. பொறுப்பு
வகிக்கும் கண்ணப்பன் சாரிடம் சொன்னேன். ஈஸ்வரியை ராமநாதபுரம் எஸ்.பி.
ஆபீஸில் ஒப்படைக்கச் சொன்னார். போகும் வழியில், புரோக்கர் கும்பல் வழி மறிச்சுத் தகராறு
செய்ய... ஈஸ்வரியை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்.
அதன் பிறகு அந்த புரோக்கர்கள் மதுரையில் உள்ள
ரவுடிகள் மூலமாக என்னை மிரட்டினாங்க. அதுக்கெல்லாம் பயப் படாம
மறுநாள், எஸ்.பி. ஆபீஸ்ல ஈஸ்வரியை ஒப்படைச்சேன்!'' என்று சொன்னார்.
இந்த வழக்குத் தொடர்பாக நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ''ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் விபசாரம் தடை இன்றி நடக்கிறது. எங்காளுங்க
கண்டுக்கறதில்லை.
இந்தப் பொண்ணை ஏற்கெனவே பல முறை ராமநாதபுரத்துக்குக் கூட்டிட்டு
வந்திருக்காங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜ் மற்றும் இறந்து போன அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான
லாட்ஜ், இந்த ரெண்டு இடங்களிலும் வெச்சு ஈஸ்வரியைப் பல பேர்
பாழாக்கியிருக்காங்க. அந்த
லாட்ஜின் உரிமையாளர்கள், உள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவர், கட்சிக்காரர்கள் சிலர், காவல் துறையைச்
சேர்ந்த இருவர் மற்றும் அரசு
அலுவலகங் களில் பணியாற்றும் சிலர் என ஏராளமான பேர்
இதில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர, சென்னை அடையாறு
பகுதியை சேர்ந்த ரியல்
எஸ்டேட் ஓனர் ஒருவரும் சென்னைக்கு
அழைத்து, தன் சொகுசு பங்களாவில்
வைத்து ஈஸ்வரியை
சீரழித்துள்ளார். இதே போல்தான் ராமேஸ்வரம் சேர்மன் ஜலீலும் கொடைக்கானலுக்கு
அழைத்துச் சென்று அனுபவித்து இருக்கிறார். விசாரணையின்போது, இவர்களின் பெயர்களை அந்தப் பெண்ணே சொல்லுச்சு.
ஆனால் சில அதிகாரிகள், ஜலீல் உள்ளிட்ட சிலரை மட்டுமே இந்த வழக்கில்
சேர்த்துவிட்டு, ஈஸ்வரியால் குற்றஞ்சாட்டப்படும் பல வி.ஐ.பி-களை வழக்கில் சேர்க்காமல் இருக்க
பேரம் பேசி வருகின்றனர்!'' என்று சொல்லி, அதிரவை
வைத்தார்.
ராமநாதபுரம் எஸ்.பி-யான அனில்குமார் கிரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஈஸ்வரி கேஸ் சம்பந்தமா
எஃப்.ஐ.ஆர். போட்டுருக்கோம். குற்றவாளிகளைப்
பிடிக்க மூன்று ஸ்பெஷல் டீம் போட்டிருக்கோம்...'' என்று மட்டும் சொன்னார்.
இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச்
செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச்
சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்.
என்னதான் நடக்கிறது என்பதை மேலிடம் கவனமாக விசாரிக்க வேண்டும்.
- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி
விபச்சார புரோக்கர் அப்போலோ ஹனீபாவை துாக்கி பிடிக்கும் கூட்டம் பரப்பும் பொய் செய்திக்கு பதில் ஆதாரம்
.
|
Comments