சூரத்துல் பாத்திஹாவில் உள்ள 6,7 ஒரே வசனமா? 2 வசனங்களா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முதல் வசனமா? அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது என்பதற்கு அடையாளமாக உள்ள
வசனமா?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது ஒவ்வொரு அத்தியாயத்தையும் சேர்ந்த ஒரு பகுதியா? எல்லா அத்தியாயங்களிலும் உள்ள ஏனைய வசனங்கள் போல் உள்ளடங்கிய ஒரு வசனமா?
குர்ஆனை
ஓத படிக்க துவங்குவதற்காக குர்ஆனில் இல்லாத தனி வார்த்தையா? இந்த மாதிரி
கேள்விகளுக்கான பதிலையும் அதற்கான விபரத்தையும் அதில் உள்ள கருத்து வேறுபாடுகளையும் பார்த்து வருகிறோம்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு
அத்தியாயத்தின் முதல் வசனம் ஆகும் என்பதை நேற்றுப் பார்த்தோம். அதன் தொடர் விளக்கங்களைப் பார்ப்போம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனம் திரு குர்ஆனில் 114 இடங்களில் இடம் பெற்று உள்ளது. மொத்தம் உள்ள 114
அத்தியாயங்களில் 113 அத்தியாயங்களின் மேலே இடம் பெற்றிருக்கும்.
சூரத்துத் தவ்பா- மன்னிப்பு
என்ற 9
ஆவது அத்தியாயத்தின் மேலே
மட்டும் இடம் பெற்றிருக்காது.
அந்நம்ல்
– எறும்பு என்ற 27ஆவது அத்தியாயத்தின் 30
ஆவது வசனத்தில் இடம் பெற்றிருகின்றது. இ்ந்த அத்தியாயத்தின் இடையில் வருகின்ற
اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்றுள்ள அந்த வசனம் அந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த அறிஞர்களும் மாற்றுக் கருத்து கொள்ளவே இல்லை. ஒவ்வொரு சூராக்களின் மேலே வருகின்றவை பற்றித்தான்
கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளனர்.
அல்லாஹ்வால் ஏழு வசனங்கள் என்று சொல்லப்பட்ட சூரத்துல் பாத்திஹாவில்
கூட பிஸ்மில்லாஹ்வை சேர்த்து ஏழா? சேர்க்காமல் ஏழா என்ற கருத்துவேறுபாடுகள் உள்ளதை
ஆதாரத்தோடு அறிந்தோம். பிஸ்மில்லாஹ்வை சேர்க்காமல் ஏழு வசனம்
என்ற கருத்து உடையவர்கள்.
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ
என்பது ஆறாவது வசனம்
غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
என்பது ஏழாவது வசனம் என்று இரண்டாகப் பிரித்து
உள்ளார்கள்.
பிஸ்மில்லாஹ்வை சேர்த்துதான் ஏழு வசனம் என்ற கருத்து உடையவர்கள் இரண்டும் சேர்த்துதான் அதாவது
1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ
الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
என்பது ஒரே வசனம்தான் என்று போட்டு இருப்பார்கள். அதை ஏழாவது
வசனமாக குறிப்பிட்டு இருப்பார்கள்.
திருக்குர்ஆனில் இல்லாத எந்த ஒரு சொல்லையும் குர்ஆனுடன் இணைத்து எழுதாதீர்கள்! என்பது நபி(ஸல்) அவர்கள்
ஸஹாபாக்களுக்கு இட்ட கட்டளையாகும். இதன் மூலம் குர்ஆன் விஷயத்தில் அளவுக்கு அதிகமான
அக்கறையுடனும் கவனத்துடனும் அல்லாஹ்வின் துாதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை நாம் அறிகின்றோம். நபித்தோழர்களான
ஸஹாபாக்களும் குர்ஆனில் சேராத எந்த ஒன்றையும் சேர்த்து எழுதியதில்லை.
ஸஹாபா பெருமக்களைக் கொண்ட பேரறிஞர் குழுவினர்தான் குர்ஆனை
தொகுத்து எழுதினார்கள். அவர்களின் மாபெரும் பரிசீலனையுடன்தான் அல் குர்ஆன் ஒன்று திரட்டப்பட்டது. அத்தவ்பா தவிர எல்லா அத்தியாயங்களின் மேலேயும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற வசனத்தை எழுதி இருந்தார்கள்.
ஸஹாபா பெருமக்கள் மிகுந்த
சிரமப்பட்டு தொகுத்த குர்ஆனில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று ஒவ்வொரு அத்தியாயத்தின் மேலேயும் எழுதப்பட்டிருந்தது. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள ஒரு பகுதி தான் என்பதற்கு இவை வலுவான ஆதாரங்களாகவும் சான்றுகளாகவும் உள்ளன. .இன்னுமுள்ள ஆதாரங்களை இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/07/67-2.html
நன்றி ; மேலப்பாளையம்
மஸ்ஜிதுர் ரய்யான் கேள்வி பதில் நிகழ்ச்சி
அடுத்த கேள்வி
அடுத்த கேள்வி
Comments