அதிர்கிறது கலக்குகிறது. கொந்தளித்த உலமாக்கள்...கோர்ட்டுக்கு போய் உள்ளார்கள்.
ஒரு ஊர் பள்ளியில் சம்பள பணத்தையும்
சர்வீஸ்(?) பணத்தையும் கணக்கு முடித்து பெற்றுக் கொண்டார் ஒரு ஆலிம். பிறகு ஜும்ஆ பிரசங்கம் செய்தார். அந்த மவுலவியின் உரையால் மண்டைகள் உடைந்து, சண்டைக்களம் காண வைத்தது. ஆதாரங்களுடன் பேஸ் புக்கில்
பார்தோம்.
இன்னொரு
ஊர் மவுலவிகள் பிரச்சனை. அதிர்கிறது கலக்குகிறது. கொந்தளித்த உலமாக்கள்....தொடரட்டும் என் ஆலிம் சமூகத்தின் புரட்ச்சி....! ஆலிம்களின் தலைமை எடுத்து இருக்கும் முடிவு
1. பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு எதிராக மாவட்ட
ஆட்ச்சியாளரிடம் மனு கொடுத்து விட்டார்கள்.
2 பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு
எதிராக பிட்நோட்டிஸ் அடித்து ஜும்வில் கொடுப்பதற்கு
தயாராக உள்ளது
3. பள்ளிவாசல்
நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்கிறார்கள்.
இதனால்
பள்ளி நிர்வாகிகளை அதீதமான கலக்கத்தில்
ஆழ்த்தி உள்ளது. இப்படி வாட்ஸப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
உடன் பிறந்தவர்களான இரண்டு
ஆலிம்கள் நடு ரோட்டில் சண்டையிட்டார்கள். சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டிக்
கொண்டார்கள். காரித் துப்பினார்கள். அதில் ஒருவர் வாட்ஸப்களில் குர்ஆன் வசனங்களைக்
கொண்டே பிரச்சாரம் செய்வார். சிறந்த பேச்சுத் திறமை கொண்ட நாவலர்ர். நல்லவர் என்று
தவறாகப் படித்து விடாதீர்கள். நாவலர் என்றுதான் போட்டு உள்ளேன்.
ஒரு மவுலவி தொழ வைத்தார்
நன்றாக பயான் பண்ணினார். நான் பணியில் சேர வேண்டும் என்றால் 15 ஆயிரம் மாத சம்பளம்
வேண்டும். பள்ளியில் நெட் வசதி செய்து தர வேண்டும். ஹதீஸ் ஆய்வு செய்ய கம்யூட்டர் வேண்டும்
என்றெல்லாம் கேட்டார். நிர்வாகிகளும் சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.
ஆலிமும் சூப்பராக ஊராருக்கு
உபதேசம் செய்தார். ஊருக்குத்தானே உபதேசம். திடீரென வரவில்லை. காரணம்
சண்டையாளிகளான 2 ஆலிமில் ஒரு ஆலீம் இவருக்கு உறவுக்காரர்.
உறவுக்கார ஆலீமின் உடன்
பிறந்த சகோதரரான சண்டைக்கார ஆலீம் இவர் வேலைக்கு சேர்ந்த பள்ளிக்கு தொழ வந்தார். நிர்வாகிகளுடன் பேசினார். பயான் செய்ய இருந்தார். அதனால் இவர் நின்று
விட்டார். இதைச் சொல்லாமல் வேறு காரணம் கூறி 3 நாளைக்குப் பிறகு கடிதம் கொடுத்து உள்ளார்.
கடைசியில் இந்த மாதம் முழுவதும் வருவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார். அந்த வாக்குறுதியையும்
நிறைவேற்றவில்லை.
கடிதத்தில் கூறி உள்ள
காரணம் உண்மை என்றால் அல்லாஹ் அவருக்கு நல்லது செய்வான். நாமும் துஆச் செய்வோம்.
பொய் என்றால் பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்று ஆலிம்கள் உபதேசம் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
கொதித்துப் போன ஆலீம்கள் கோர்ட்டுக்கு போய் உள்ளார்கள். இவற்றை படித்து கொதிக்கும்
உள்ளங்கள் அல்லாஹ்வின் கோர்ட்டில் மன்றாடட்டும். அவன் அத்து மீறும் அநியாயக்காரர்களுக்கு
சரியான பாடம் புகட்டுவான்.
என்று ஊருக்கு உபதேசித்து விட்டு. கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை குர்ஆன் ஹதீஸ் பெயரால் வளர்த்தால் இதுதான் நடக்கும்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/07/blog-post_4.html
தங்களுக்கு
தேவை எனில் இளைய மவுலவி எழுச்சி மவுலவி என்பார்கள். வயதில் சிறியாராக இருந்தாலும்
அனுபவத்தில் பெரியார், ஆத்திக பெரியார் என்று புகழ்வார்கள். கழட்டிவிடும் கட்டம்
வந்ததும் கழட்டி விட்டு ஓடவும் வைத்து விடுவார்கள்.
பிறகு
எடுபிடிகளைக் கொண்டு சிறியார் செய்த
வெள்ளாமை விளைந்தாலும் வீடு வந்து சேராது என்று வியாக்கியானம் சொல்ல வைப்பார்கள்.
ராஜினாமா செய்து விட்டு ஓடி விட்டார் என்கிறார்கள். எதற்காக ஓடினார் என்பது இதுவரை தெரியவில்லை என்கிறார்கள்.
ஓடி விட்டார் என்கிறீர்களே யாரோடு ஓடினார்?
என்று கேட்டால் பதில் சொல்ல வக்கற்றவர்கள். அலி போனான், புலி போனான் என்று அடுக்கிக் கொண்டு போகிறார்கள். புலியைப் பற்றி கேட்கவில்லை. உங்களால் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட அந்த சிங்கத்தைப் பற்றித்தான் கேட்கிறோம். சொல்ல அசிங்கமாக இருக்கிறதா?
ஏதோ
ஒரு பெரியவாளை தலைவராக ஆக்கத்தான் சிரியவாளை யாரோடோ ஓடச் செய்து விட்டார்கள். எல்லாம்
சங்கர மட கதைதான். எல்லா பழையவாளுக்கும் தெரிந்த விஷயம்தான்.
اتَّبِعُوْا
مَنْ لَّا يَسْــٴَــلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ
36:21. எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ... அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள். (IFT)
36:21. உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். (அவர்கள் நேர்வழியைப் போதிப்பவர்கள் மாத்திரம் அன்றி) அவர்கள்தாம் நேர்வழி அடைந்தவர்கள். (அப்துல் ஹமீது பாகவி)
Comments