ஈகை நபியையா இரக்கம் இல்லாதவர் போர்க் குணமும் பழி வாங்கும் எண்ணமும் உடையவர் என்கிறார்கள் பாவிகள்?
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்கள் தலைமையில் சென்றவர்களுக்கு ஆதரவாக அல்லாஹ்வே ஆயத்தை அருளி விட்டதைப்
பார்த்தோம். அதன் பிறகுதான் அவர்கள் செய்த செயலை ரசூல்(ஸல்) ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த ஆயத்து அருளப்பட்டதும். அல்லாஹ் உடைய துாதருக்கு மன ஆறுதல் கிடைத்தது. தமது தோழர்களின் செயலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான். அல்லாஹ் நம்மை குற்றம் பிடித்து விடுவானோ என்று அஞ்சினோம்.
அல்லாஹ்வின் துாதர் அல்லாஹ்வுக்குத்தான் அஞ்சினார்கள். உலகத்துக்கு அல்லாஹ்வின் துாதர் எப்போதுமே பயந்தது இல்லை. ஒரு சில நேரங்களில் இந்த உலகத்துக்காக ஒரு சில காரியத்தை செய்தாலும் உடனே
அல்லாஹ் அதனை சுட்டிக் காட்டி விடுவான். கண்டித்து விடுவான்.
தனது மனைவிக்கு விரும்பம் இல்லை என்பதற்காக இனிமேல் நான்
தேன் சாப்பிட மாட்டேன் என ரசூல்(ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள். அப்போது அல்லாஹ் அதை சுட்டிக் காட்டி (திரு மறையில் 66-1-4) கண்டித்தான்.
அதே மாதிரி, ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி)அவர்களுக்கும். ஏதோ ஒரு காரணத்துக்காக தலாக் என்ற அளவுக்கு போய் விட்டது. அந்த நிகழ்வின் போது ரசூல் (ஸல்) மனிதருக்கு (33-37) பயந்ததை சுட்டிக் காட்டி
கண்டித்தான். அஞ்சுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான். ஊர் உலகம் கிடையாது என்பதை பறை
சாற்றினான்.
‘நக்லா’ சம்பவத்தை மனிதர்கள் விமர்சிக்கிறார்களே என ரசூல் (ஸல்) அஞ்சி இருந்தால் அல்லாஹ் சுட்டிக் காட்டி கண்டித்திருப்பான். ‘நக்லா’ விஷயத்தில் புனிதமிகு
மாதத்தில் நமது தோழர்கள்
தாக்குதல் நடத்தி விட்டார்களே. அல்லாஹ் என்ன செய்வானோ தெரியவில்லையே என்ற ஒரு அச்சம்தான்
ரசூல் (ஸல்) அவர்கள் உள்ளத்தில் இருந்து
கொண்டே இருந்தது.
அல்லாஹ் அதை அங்கீகரித்துக்
கொண்டு. அதைவிட பெரும் பாவங்கள் செய்தவர்கள். நான்கு விதமான பெரும் பாவங்கள்
செய்தவர்கள். அப்படிப்பட்டவர்களிடம்தான். வேறு வழியின்றி
நிர்ப்பந்தத்தில் இதனை செய்துள்ளார்கள். என அல்லாஹ்
அதை அங்கீகரித்துக் கொண்டான்.
அல்லாஹ் அவர்களை மன்னித்த உடன். ரசூல்(ஸல்) அவர்களுக்கு
ரொம்பவும் சந்தோஷம் ஆகி விட்டது. அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு
எப்படி இருந்தது? அந்த ஆயத்து அருளப்பட்ட
உடனே. இரண்டு
கைதிகளையும் விடுதலை செய்து விட்டார்கள்.
அம்பு எய்தலின் போது இறந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈட்டையும் கொடுத்து
அனுப்பினார்கள். இறந்தவர்களின்
குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுப்பதிலும் இறைத்துாதரே முன் மாதிரி. இதில் அல்லாஹ்வின் துாதரே முன் மாதிரி என்று
சொல்ல வேண்டியவர்கள். அம்மாவே முன் மாதிரி என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இடத்தில்
இதற்கு முன்பு நடந்தவற்றில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. நக்லாவிலிருந்து தப்பி ஓடிய நவ்ஃபல் என்ற மக்காவாசி அங்கு போய் நடந்து விட்ட
சம்பவத்தைச் சொன்னார். ஒருவர் இறந்து விட்டார். இரண்டு பேர்களை பிடித்து கொண்டு போய் விட்டார்கள் என்று.
அந்தக் கால முறைப்படி பிடித்து விட்டு போய் விட்டார்கள் என்றால் பணம் கொடுத்து
மீட்டிக் கொள்ளலாம் என்பது மரபாக இருந்தது. போர் சண்டைகளில்
ஆட்களை கொண்டு போய் விட்டால் பணத்தையோ பொருளையோ கொடுத்து மீட்டிக் கொள்வது
எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது.
ஏதாவது ஒரு
பிரச்சனைகளை ஒட்டி அந்த ஊர்க்காரர்களை இந்த ஊர்க்காரர்கள் பிடித்துக் கொண்டு
போனாலும். இந்த ஊர்க்காரர்களை அந்த ஊர்க்காரர்கள்
பிடித்துக் கொண்டு போனாலும். எந்த ஊர்க்காரர்களாக இருந்தாலும்
பிடிபட்டவர்களை மீட்க துாதுக் குழுவினர் பணத்துடன் போவார்கள். போய் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
இவ்வளவு பெற்றுக்
கொண்டு எங்கள் ஆளை தந்து விடுங்கள் என்று கேட்பார்கள். அந்த அடிப்படையில் மக்காவாசிகள் வந்து ரசூல்(ஸல்) அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு பேரை விட்டு விடும்படி கேட்டுக்
கொண்டார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் அந்த இரண்டு பேர்களையும் விடவில்லை. விட்டு விடுவேன்
ஏன் இப்பொழுது விடவில்லை என்றால். நக்லாவுக்கு சென்ற எனது ஸஹாபாக்களில் இன்னும்
இரண்டு பேர் வந்து சேரவில்லை. அவர்கள் வந்த பின்தான் இவர்களை விட முடியும் என
கூறி விட்டார்கள்.
ஸஅது இப்னு
அபீவக்காஸ், உத்பா இப்னு கஸ்வான் ஆகிய இரு தோழர்கள் ஒட்டகத்தைக் காணோம் என்று
தேடிப் போய் விட்டார்கள். இதுவரை வரவில்லை. இதில் ரசூல்(ஸல்) அவர்கள் நிலை என்ன? மக்காவாசிகள் எதுவும் பண்ணி இருப்பார்களோ? அவர்கள் பிடிக்கப்பட்டு இருப்பார்களோ என்பதுதான்.
ஆனால் அவர்கள் பிடிபடவில்லை. ஒட்டகத்தை தேடிவிட்டு மெதுவாக வந்து கொண்டுதான்
இருக்கிறார்கள். அவர்கள் வராததால் ரசூல்(ஸல்) அவர்கள் சொல்லி விட்டார்கள். எங்கள் ஆட்கள் இரண்டு பேர் வரும் வரை உங்கள் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள். அந்த இரண்டு பேரும் வந்து விட்டால் இவர்களை விட்டு விடுவோம். அந்த இரண்டு ஆட்களுக்கு ஏதாவது ஆகி விட்டால் இவர்களை விட மாட்டோம். இந்த இரண்டு பேரும் அவர்களுக்கு பதிலாக இங்குதான் இருப்பார்கள் என்று கூறி
விடாமல் தடுத்து வைத்து விட்டார்கள்.
இந்த நிலையில் ஸஅது இப்னு அபீவக்காஸ், உத்பா இப்னு கஸ்வான் ஆகிய இரு தோழர்கள் அவர்களது ஒட்டகத்துடன் வந்து
விட்டார்கள். அந்தக் கால மரபுப்படி
இரண்டு பேர்களை மீட்க மக்காவாசிகள் பணத்தோடு வந்து இருந்தார்கள். பேச்சு வார்த்தையும் நடத்தி
முடித்து காத்து இருந்தார்கள். இரண்டு பேர் வந்த உடன் பேசியபடி ஈட்டுத் தொகையை
பெற்றுக் கொண்டு விடுதலை செய்ய வேண்டிய ரசூல்(ஸல்) அவர்கள்
என்ன செய்தார்கள்?
சூரத்துல் பகராவின் 217ஆவதான அந்த ஆயத்து அருளப்பட்ட சந்தோஷத்தில் இரண்டு கைதிகளையும் சும்மாவே விடுதலை செய்து விட்டார்கள். அது மட்டுமா? ஹழ்ரமீயின் குடும்பத்துக்கு நஷ்ட ஈட்டையும் கொடுத்து
அனுப்பினார்கள்.
இப்படிப்பட்ட ஈகை நபியைத்தான். இரக்கம் இல்லாதவர், போர்க் குணம் உடையவர், பழி வாங்கும் எண்ணம்
உடையவர் என்று பேசி வருகிறார்கள் நொண்ணன்களான பாவிகள். நபி(ஸல்) போர்க்
குணம் உடையவர் என்றால் எதிரிகளிடம் ஈகையுடன் நடந்து
இருப்பார்களா?
இறைத்துாதரின்
உயரிய பண்பு இவ்வாறு இருக்கிறது. மக்காவிலோ காபிர்கள் பெரிய ஆத்திரத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நம்மில் முக்கியமானவரான ஹழ்ரமியை கொன்று
விட்டார்கள். வியாபாரப் பொருட்களை தடுத்து எடுத்துக் கொண்டார்கள். ஷாம் பகுதிக்கு
வியாபாரத்துக்கு போகாமல் நமது வாழ்க்கை எப்படி நடத்த முடியும்? அந்த வழிப்
பகுதியில் முஹம்மது இருப்பது நமக்கு பெரிய இடையூறுதான் என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இதுவரை
நடைபெற்றுள்ள 8 முயற்சிகளும் தற்காப்பு முயற்சிகளே. யாரையும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. நக்லாவுக்கு முந்தையை 7 முயற்சிகளிலும் யாரும் கொல்லப்படவும் இல்லை. பொருளாதார தடை சட்டத்தின் கீழ் எந்த ஒரு
பொருளாதாரமும் தடுத்து நிறுத்தப்படவில்லை.
குருஸ் இப்னு
ஜாபிர் அல்ஃபஹ்ரி என்பவன் வந்து கால்நடைகளை கொள்ளை அடித்தான். மேய்ச்சல்
நிலங்களையும் அழித்து விட்டு போனான். அதன் பிறகுதான் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு
ஏற்பட்டது.
அதற்கு முன்பு வரை தற்காப்பு நடவடிக்கை என்ற எண்ணம்தான் இருந்தது.
எதிர் நடவடிக்கை என்பது இல்லாமல் இருந்தது. இரண்டு பேர் பிடிக்கப்பட்டு கைதிகள்
ஆனது. ஒருவர் இறந்தது ஆகியவை இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான்.
நக்லா
சம்பவத்துக்குப் பிறகு. குறைஷிகள் அதிகமாக பயப்பட ஆரம்பித்து
விட்டார்கள். அவர்களுடைய பயம் எந்த அளவுக்கு ஆகி விட்டது
தெரியுமா? இவ்வளவு துாரம் (300 மைல்கள் சுமார் 450 கி.மீ.) வரை மக்கா அருகில் வரை வந்து முஹம்மது உடைய ஆட்கள் நம்மை எதிர் கொண்டு வந்து
விட்டார்கள். கைது செய்யும் அளவுக்கு முஸ்லிம்கள் பலம் பெற்று விட்டார்களா? அவ்வளவு எண்ணிக்கை அவர்களுக்கு சேர்ந்து விட்டதோ? இதற்கு மேல் நாம் அவர்களை விட்டு வைக்கக் கூடாது.
ஏற்கனவே நாம்
திட்டமிட்டபடி அந்த மதீனாவிலேயே அவர்களுக்கு சமாதி கட்டி விட வேண்டும். இனிமேல் முஸ்லிம்களை விட்டு வைக்கக் கூடாது. விட்டு வைத்தால்
நம்முடைய வியாபார போக்கு வரத்து என்பது கற்பனையாக ஆகி விடும். எவ்வளவு தொலை துாரத்துக்கு வந்து விட்டார்கள்.
விரல் விட்டு
எண்ணக் கூடியவர்கள் வந்து மக்காவிலிருந்து தாயிபுக்கு போனவர்களில் ஒருவர் இறக்கவும். இருவர் கைது செய்யப்படவும் காரணமாக
இருந்து விட்டார்கள். இவர்களை இதற்கு மேல் விட்டு வைக்கக் கூடாது. இதற்கு
தாமதிக்காமல் நாம் ஏதாவது செய்து ஆக வேண்டும். என்று துாண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
துாண்டி விடுபவர்களால் தானே கேடுகள் வரும்.
முஸ்லிம்களை
மதீனாவில் வைத்தே அழித்து விடுவதற்கு ஏற்கனவே பல முயற்சிகளை செய்து
இருக்கிறார்கள். பல திட்டங்களை தீட்டிக் கொண்டும் இருந்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் அபு சுப்யான் தலைமையில்
ஒரு குழு வியாபாரத்துக்காக ஷாமுக்கு போய் இருக்கிறது. அதில் வரக் கூடிய முழுப்
பொருளாதாரத்தையும் போருக்கு செலவு செய்வது என்று மக்காவில் உள்ளவர்கள் முடிவு
செய்தார்கள். வியாபாரத்துக்கு சென்றது ஒரு
சாரார். அதை அப்படியே போருக்கு செலவு செய்வோம் என முடிவு செய்வது
இன்னொரு சாராரா? என்ற கேள்வி நமக்கு வரலாம்.
சொந்த வீட்டுக்காக போகாத பிள்ளைகள் சொந்தக்காரர்களுக்காக போகுமா?
முந்தைய தலைப்பு
Comments