சிறிய ஹஜ். பெரிய ஹஜ் சின்ன பத்ரா? பெரிய பத்ரா?

ஹிஜ்ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ”பூவாத் நடந்தது. இதற்கு செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆத்(ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிரதிநிதியாக நியமித்தார்கள். 

ஒவ்வொரு முறையும் உடன் செல்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. எப்படியாவது போர் வராமல் முறியடிக்க வேண்டும் என்பது ரசூல்(ஸல்) அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால் எல்லா முயற்சிகளும் ஏதோ ஒரு காரணத்தினால் தட்டி கழித்து போய்க் கொண்டே இருக்கிறது. எல்லாம் அல்லாஹ் உடைய நாட்டம்தான்.


இதற்கு 200 தோழர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். எதிர் தரப்பில் 2500 ஒட்டகங்களும் 100 குதிரைகளும் வந்தன. மிகப் பெரிய வாணிபக் கூட்டம் அது.  மக்கத்து குறைஷிகளில் முக்கிய பிரமுகரான உமய்யா இப்னு கலஃப். இந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். 

ரழ்வாஎன்று சொல்லப்படும் மலைக்கு அருகில் தான் பூவாத்என்று சொல்லக் கூடிய இடம் உள்ளது. இது எல்லாமே ஷாமுக்கும் மக்காவுக்கும் போகின்ற வழியில் உள்ளதுதான். ஷாம்(சிரியா)வுக்கும் மக்காவுக்கும் வருகின்ற போகின்ற வழியில் மதீனா வராது. ரோடுகள் போடப்பட்டுள்ள இந்தக் காலத்திலும் மதீனாவிலிருந்து ஏறக் குறைய 100 கி.மீ. வந்தால்தான் மக்கா சிரியா போக்கு வரத்து ரோட்டுக்கு வர முடியும். அந்த மாதிரி இடத்தில்தான் பத்ர் என்ற இடமும் இருக்கிறது.



பூவாத்என்ற இடத்திற்கு ரசூல்(ஸல்) அவர்கள் வந்தார்கள். ஆனாலும் இவர்கள் வந்து காத்து இருந்த நேரத்தில் அந்தக் கூட்டம் கண்ணுக்கு தென்படவில்லை. வியாபாரக் கூட்டத்தினர் எங்கே போனார்கள் என்ற விபரம் இல்லை என்றும். அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டார்கள் என்றும் இரண்டு வித செய்திகள் உள்ளன. திலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

ஆறாவதாக போர் என பதியப்பட்டுள்ள நிகழ்ச்சி ஹிஜ்ஜிரி 2 ஆம் ஆண்டு. ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நடக்கிறது. இது ரொம்ப முக்கியமானது. குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்ரி என்பவன் மக்காவில் இருக்கக் கூடிய ரொம்பவும் வீரமான ஒரு ஆள். மக்கா காபிரான இவன் முஷ்ரிக்களில் உள்ள வீரமான சில இளைஞர்களை மதீனாவுக்கு அழைத்து வருகிறான்

வந்து மதீனாவின் புறநகர் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களை நாசப்படுத்தி விடுகிறான். மேலும் அங்கு இருந்த கால் நடைகளையும் கொள்ளை அடித்துக் கொண்டு ஓடி விடுகிறான். புறநகர் என்பதால் ஊருக்குள் இருந்த மதீனாவாசிகளுக்கு தெரியாமலேயே இது நடந்து விடுகிறது.

இதை அறிந்த உடன் நபி (ஸல்) அவர்கள் அவனை பிடிக்க விரட்டிக் கொண்டு போனார்கள். ஒருவன் தாக்கி விட்டு போய் விட்டான் என்ற உடன் விரட்டிக் கொண்டு போனது யார்? ஆட்சித் தலைவரான முஹம்மதுநபி (ஸல்) அவர்கள்தான். வேறு ஒரு குழுவையெல்லாம் அனுப்பவில்லை. அனுப்புவதற்கு ஆலோசித்து கொண்டிருக்கவில்லை. 

நாசப்படுத்தியவன்கள் பயந்து ஓடுகிறார்கள். அவன்களை விரட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் போகிறார்கள். அவர்களோடு எழுபது தோழர்களும் விரைந்தார்கள். அவனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று விரட்டிப் போனார்கள். எவ்வளவு வேகமாக போயும். அவனுகளை பிடிக்க முடியவில்லை.

இந்த அளவுக்கு ஊருக்கு உள்ளே புகுந்து. நிலங்களை அழித்து ஒழித்து விட்டு. கால் நடைகளையும் கொள்ளையடித்து விட்டுப் போனால் யார்தான் சும்மா விடுவார்கள்? ரசூல்(ஸல்) அவர்கள் தானாகப் போய் எதுவும் செய்யவில்லை. இதை நன்கு கவனிக்க வேண்டும். 

மக்காவை நோக்கியோ, மக்காவாசிகளை நோக்கியோ போகவில்லை. பறிக்கப்பட்ட தங்களுடைய பொருட்களை மீட்க வேண்டும் என்றுதான் போனார்கள். எந்த அளவுக்கு தங்களுடைய பொருட்கள் பறிக்கப்பட்டதோ. எந்த அளவுக்கு தங்களுடைய பொருட்கள் அவர்களிடம் உள்ளதோ அந்த அளவுக்கு அவர்களிடம் இருந்து எடுக்க வேண்டும் என்றுதான் போனார்கள். 

தம்முடைய சமுதாயம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதிரிகளுடைய அச்சுறுத்தல் இல்லாமல் வாழ வேண்டும். இதுதான் ரசூல்(ஸல்) அவர்களின் எண்ணமாக இருந்தது. இவை போர்களா? போராட்டங்களா?

நாலாபுரமும் வரம்பு மீறினார்கள். அப்துல்லாஹ் இப்னு உபையை கையில் எடுத்துக் கொண்டு வம்பு பண்ணி கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்கு எதிரான நடவடிக்கைகள்தான் செய்தார்கள். ஒரு நாட்டின் அரசாங்கம் அந்த நாட்டின் மக்களை பாதுகாக்க என்ன என்ன வேலைகளை செய்யுமோ. அதைத்தான் அந்த கடமையைத்தான் ரசூல்(ஸல்) அவர்கள் செய்தார்கள்

பத்ருக்கு அருகிலுள்ள ஸஃப்வான்என்ற இடம் வரை சென்றும் குருஸையும் அவனது ஆட்களையும் பிடிக்க முடியாததால் திரும்பினார்கள். இந்த நிகழ்வு பத்ருக்கு ஒட்டிய இடமாக இருப்பதால் பத்ர் அல் ஊலா (முதல் பத்ர்) என்பார்கள்.  வரலாற்று ஆசிரியர்களும் நபி (ஸல்) காலத்திலேயும் இதையும் பத்ர் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பத்ர் என்பார்கள். சின்ன பத்ரா? பெரிய பத்ரா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு பழக்கமாக ஆகி இருந்தது.

உம்ரா என்ற வார்த்தை பிற்காலத்தில்தான் வந்தது. அதற்கு முன்பெல்லாம் சிறிய ஹஜ். பெரிய ஹஜ் என்று சொல்கின்ற வழக்கம்தான் இருந்தது. 'ஹஜ்ஜுல் அக்பர் (பெரிய ஹஜ்)' உடைய நாள் என்பது இந்த 'யவ்முன் னஹ்ர்' (துல்ஹஜ் 10ம் நாள்) தான். இது, 'பெரிய ஹஜ்' என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்ராவைச்) 'சிறிய ஹஜ்' என்று அழைத்ததேயாகும். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) (புகாரி 3177) 

சின்ன ஹஜ் என்றால் உம்ரா. பெரிய ஹஜ் என்றால் துல்ஹஜ் மாதம் செய்யும் ஹஜ். அந்த மாதிரிதான் பத்ரைப் பற்றிச் சொல்வார்கள். இதை சின்ன பத்ருப் போர் என்றும் முதல் பத்ருப் போர் என்றும் சொல்வார்கள். ஆனால் போரே நடக்கவில்லை. விரட்டிக் கொண்டுதான் போனார்கள். பிடிக்க முடியவில்லை. திடீரென விரட்டிப் பிடிக்க போன நேரத்திலும் ஜைது இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை தனது பிரதிநிதியாக நியமித்து விட்டுத்தான் போனார்கள். திலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.

ஏழாவது முயற்சி ”துல் உஷைராஹிஜ்ரி இரண்டு. ஜுமாதா அல்ஊலா (ஜமாஅதுல்அவ்வல் கி.பி. 623 நவம்பர்) மாதம். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர் தோழர்களுடன் புறப்பட்டார்கள். கலந்து கொள்ளும்படி யாரையும் நிர்ப்பந்திக்கவோ வற்புறுத்தவோ இல்லை. 

நாங்கள் போகிறோம் நீங்களும் வந்தாக வேண்டும் என்ற கட்டாயமே இல்லை. விரும்பினால் வாருங்கள் என்றுதான் அழைத்தார்கள். அந்த அழைப்பை ஏற்று   150 லிருந்து 200  வரை தோழர்கள் வந்து விட்டார்கள். 

இருந்தது 30 ஒட்டகங்கள்தான். எவ்வளவு சிரமம். மாறி மாறி நீங்கள் கொஞ்ச நேரம் இருங்கள் நான் நடக்கிறேன். நான் கொஞ்ச நேரம் இருக்கிறேன். நீங்கள் நடங்கள். இப்படி ஒருவர் மாறி ஒருவராக 30 ஒட்டகங்களில் பயணித்தனர். மதீனாவில் அபூஸலமா இப்னு அப்துல் அஸத் அல்மக்ஜூமி (ரழி) அவர்களை நபி (ஸல்) தனது பிரதிநிதியாக நியமித்து விட்டு போனார்கள்.

மக்காவிலிருந்து ஷாமுக்கு குறைஷிகள் போய்க் கொண்டிருந்தனர். போகும்போதே முடக்குவது என்பதுதான் திட்டமாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் துல் உஷைராஎன்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது. இதே வியாபாரக் கூட்டம்தான் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு ஷாமிலிருந்து திரும்பி வருகிறது. அப்போதுதான் பத்ருப் போர் நடைபெற்றது. போகும்போது அவர்களை மறிக்க முடியவில்லை. அதற்கு முன் அந்த இடத்தை தாண்டி சென்று விடுகிறார்கள்.

திட்டமிட்ட இடத்தைத் தாண்டி ஊர் ஊராகப் போய் எதுவும் செய்ய முடியாது. இவர்களுக்கு கிடைக்கிற இடத்தைத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும். 100 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய வாகனம் எதிரி இடம் இருக்கும். அதைவிட வேகமாக 150 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய வாகனம் நம்மிடம் இருக்கும். 

அரபு நாடுகளில் 200கி.மீ, 250 என இருக்கும். அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால் அந்தக் காலத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மக்காவாசிகளிடம் என்ன மாதிரியான வாகனங்கள் இருந்ததோ அதே மாதிரி ஒட்டகம், குதிரை போன்ற  வாகனங்கள்தான் மதீனாவாசிகளிடம் இருக்கும். இவர்களிடம் எந்த மாதிரி ஆயுதங்கள் இருக்கின்றதோ அதே மாதிரி ஆயுதங்கள்தான் அவர்களிடம் இருக்கும். யாருமே வேறுபாடுகள் உடையவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஒரு நாள் துாரத்தில் அவர்கள் முந்தி போய் விட்டார்கள் என்றால் அவர்களை விரட்டிப் போய் பிடிக்க முடியாது. திரும்பி வந்து விட வேண்டியதுதான். எனவே திரும்ப வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என திரும்ப வந்து விடுகிறார்கள். ஆக ஏழாவது முயற்சியும் கை கூடவில்லை

நபி (ஸல்) ஜுமாதா அல்ஊலா கடைசியில் இப்போருக்காக வெளியேறி ஜுமாதா அல்ஆகிரா தொடக்கத்தில் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள். முஸ்லிம்கள் மீது அத்துமீறக் கூடாது என முத்லிஜ், ழம்ரா மற்றும் அவர்களுடைய நட்பு கிளையினருடன் இப்பயணத்தில் நபி (ஸல்) ஒப்பந்தம் செய்தார்கள். இதிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது.  இதை ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

எட்டாவது நிகழ்வுக்கு சென்றவர்களிடம் நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி கொடுத்தார்கள். இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த கடிதத்தில் அல்லாஹ்வின் துாதர் (ஸல்) என்ன எழுதி இருந்தார்கள்?
http://mdfazlulilahi.blogspot.in/2016/06/blog-post_26.html 

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
அடுத்த தலைப்பு
அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்கள்?


முந்தைய தலைப்பு

தேர்தல் நேரங்களில் தண்ணி பட்ட பாடாகப் படுவது எது?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு