எது வெற்றி எது தோல்வி? - நன்றி மக்கள் உரிமை

மக்கா காபிர்கள் சும்மா இருக்கவில்லை. முஸ்லிம்களை சும்மா இருக்கவும் விடவில்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் பொருளாதாரத் தடை என்ற முடிவுக்கு வந்தார்கள். வழியிலே வரக் கூடிய முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வைத்துள்ள அவர்களிடம் உள்ள பொருளை முடக்கினால் அவர்களது பொருளாதாரம் குறையும். பொருளாதாரம் குறைந்து விட்டால். அவர்கள் கொட்டம் அடங்கும். நம்மைக் கண்டு அவர்கள் அஞ்சக் கூடிய நிலை ஏற்படும். நம்மை நம்பி வந்த முஹாஜிர் மக்கள். மதீனாவிலே நமக்கு உதவி செய்த மக்கள். நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகுக்க முடியும். இந்தக் காரணத்தால்தான் இந்த முடிவு எடுத்தார்கள்.


அதன் அடிப்படையில் முதன் முதலில் நடந்த நிகழ்ச்சி. ஹிஜிரி முதலாம் ஆண்டு ரமழான் மாதம். கணிப்பின் அடிப்படையில் கி.பி. 623 மார்ச் மாதம்

கி.பி, கி.மு. என்பது 200ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கணித்து உருவாக்கப்பட்டதுதான். ஹிஜிரி ஆண்டு உமர்(ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. எனவே இதில் கி.பி. என்பதைக் காணும்பொழுது அப்பொழுதே, நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்த ஆங்கில ஆண்டு இருந்ததாக எண்ணி விடக் கூடாது.


கடற்கரை வழியாக (சிரியாவிலுள்ள) ஷாம் நகரை நோக்கி குறைஷிகள் செல்லும் தகவல் கிடைக்கிறது. முஹாஜிர்களை நபி (ஸல்) அவர்கள் ஒரு பகுதிக்கு அனுப்பினார்கள். து பத்ருக்கு முன்னாள் நடக்கக் கூடிய முயற்சிகளில் ஒன்று. இதற்குத் தலைவராக ஹம்ஸா(ரலி) அவர்களை ரசூல்(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹம்ஸா(ரலி) அவர்கள் யார் என்றால் ரசூல்(ஸல்) அவர்களுடைய சிறிய தந்தை.


மக்காவிலிருந்து ஷாமுக்குப் போய் வியாபாரம் செய்து விட்டு திரும்பி வரக் கூடிய அவர்கள் 300 பேர். அந்த முன்னுாறு பேரை மடக்க அனுப்பப்படுவது எத்தனை பேர்? வெறும் முப்பது பேர்தான். ஒன்றுக்கு பத்து என்ற நிலைதான். அந்த முப்பது பேரும் முஹாஜிர்கள். அன்சாரிகள் இதில் இல்லை. ஏன் இல்லை?


அகபா உடன் படிக்கை என்று எல்லாரும் அறிந்து இருக்கிறோம். முஹாஜிர்கள் அன்சார்களோடு செய்த அந்த அகபா உடன்படிக்கையில் மதீனாவுக்குள் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்தான் உள்ளது. ஊரை விட்டு வெளியே போய் உதவ வேண்டும் என்ற அம்சமோ நிபந்தனைகளோ கோரிக்கைகளோ அந்த ஒப்பந்தத்தில் இல்லை. அதனால் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் ஊரை விட்டு வெளியே போகும் இது போன்ற நிகழ்வுகளுக்கு அன்சாரிகளை அழைப்பது இல்லை. முஹாஜிர்களை மட்டும் அனுப்புவார்கள்.


முஹாஜிர்கள் மக்காவில் இருந்து வந்தவர்கள். அதனால் அவர்கள் எல்லா இடங்களுக்கும் போவார்கள். அதற்கான தைரியமும் அவர்களிடம் இருந்தது. பிற்காலத்தில் பார்த்தால் பத்ரில் முஹாஜிர்களை விட அதிகமாக பங்கு வகித்தவர்கள் அன்சாரிகள். இது அல்லாஹ்வின் துாதரையே நெகிழ வைத்த ஒரு சம்பவம். அதை பத்ரில் பார்ப்போம்.


முதல் முயற்சியில் 30 பேர்களை ஹம்ஸா(ரலி) அவர்களை தலைவராகக் கொண்டு அனுப்புகிறார்கள். ஆனால் வரக் கூடியவர்களோ முன்னுாறு பேர். அவர்களுக்கு தலைவராக வருவது யார்? அபுஜஹ்ல். “ஈஸ்என்ற நகரத்தின் ஓரத்தில்  ”ஸைபுல் பஹ்ர்என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கு தான் இரு அணிகளின் சந்திப்பும் நடை பெற்றது. அதனால் இதற்குஸைபுல் பஹ்ர்போர் என்று பெயர் ஆயிற்று.


ஸைபுல் பஹ்ர் என்ற இந்த இடத்தில் இரண்டு அணியினருக்கும் சண்டை செய்வதற்கான சூழல்கள் உருவானது. அதாவது போர் செய்வதற்கான வாய்ப்புகள் சரியாக அமைகிறது. எட்டு முயற்சிகளில் இது முதல் முயற்சி. கடைசி முயற்சியில் ஒருவர் கொல்லப்படுகிறார். இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். மத்தியில் உள்ள 6 முயற்சிகளும் தோல்விதான்.


தோல்வி என்ற உடன் துவண்டு விடக் கூடாது. முயற்சிகளின் தோல்வியும் முஃமின்களுக்கு வெற்றிதான். நாம் சொல்லவில்லை அல்லாஹ் சொல்லி உள்ளான்.  இந்த விபரத்தை நாம் கட்டுப்படுவது யாருக்கு?” என்ற உட்தலைப்பில் (27) பார்த்து இருக்கிறோம். 


ஸஹாபாக்களெல்லாம் உம்ரா செய்யச் சென்றார்கள். யார் தலைமையில்? நபி(ஸல்) அவர்கள் தலைமையில். அந்த முயற்சி தோல்வியாக ஆனது. அல்லாஹ்வோ (நபியே!) நிச்சயமாக தெளிவான மாபெரும் வெற்றியை உங்களுக்கு நாம் தந்தோம் என்று கூறினான்.(அல்குர்ஆன் 48:1-5)

முஸ்லிம்களுக்கு எது வெற்றி எது தோல்வி? இந்த விபரத்தைத்தான் தன் மூலம் அல்லாஹ் அழகான அருமையான ஒரு பாடத்தை முஸ்லிம்களுக்கு கற்றுத் தந்துள்ளான்.

வெற்றி தோல்வி என்று தீர்மானிக்கப்படுவது  குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தின் நிகழ்வின் முயற்சியின் சாதனையைக் கொண்டு அல்ல. இழப்பைக் கொண்டு அல்ல

ஒரு கொள்கையின் வெற்றியே உண்மையான வெற்றி. தோல்வி என்பது ஒரு கொள்கையின் தோல்வியே உண்மையான தோல்வி. ஒரு முயற்சியின் நிகழ்வால் ஏற்பட்ட தோல்வியைக் கண்டு முஸ்லிம்கள் துவண்டு போய்விடக் கூடாது, ஏனெனில் அது கொள்கையின் தோல்வி அல்ல. உண்மையில் அந்த நிகழ்வு கொள்கைக்கு ஒரு பெரிய வெற்றியையே கொண்டு வந்து சேர்த்தது.

ஆக நபியின் முதல் முயற்சி தோல்வி அடையவில்லை. சரியாக போருக்கான அனைத்து வாய்ப்புகளும் அமைந்து விடுகிறது. ஆனால் அல்லாஹ்வின் துாதா் இதில் செல்லவில்லை. ஹம்ஸா(ரலி) அவர்கள் தலைமையில்தான் 30 பேரும் சென்றார்கள். 300 பேரையும் எதிர் கொள்ள தயார் ஆகி விட்டார்கள். அந்தக் கால முறைப்படி போர் அணிவகுப்புகள் எல்லாம் செய்து விட்டனர்.


இரண்டு அணியினருக்கும் நண்பராக இருக்கக் கூடிய ஒருவர். மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர். இவர் யார் என்றால் மதிப்பு மிகுந்த ஒரு யூதர். இரண்டு சாராருக்குமே தெரிந்தவர். முஸ்லிம்களுக்கும் பழக்கம் ஆனவர். மக்கத்து காபிர்களுக்கும் பழக்கம் ஆனவர். 


முஸ்லிம்களாலும் அபுஜஹ்லாலும் மதிக்கப்படக் கூடிய ஒரு மனிதர். அந்த மரியாதையின் அடிப்படையில் சண்டை எல்லாம் வேண்டாம். இரண்டு சாராரும் போங்கள் என்றார். அபுஜஹ்லைப் பார்த்து உன் வேலையை பார்த்துக் கொண்டு போ. முஸ்லிம்களுக்கு இனி இடையூறு பண்ணாதே. என அறிவுரைவும் சமாதானப் பேச்சுமாகப் பேசினார். அதன் மூலம் அந்தப் போர் நடக்காமல் ஆவதற்கு அவர் காரணமாக அமைந்து விட்டார்.


எனவே மக்காவாசிகளான வியாபார கூட்டத்தினர் 300பேரும் பிரச்சனைகள் இன்றி போய் விடுகிறார்கள். முஹாஜிர்களும் மதீனாவுக்கு திரும்பி விடுகிறார்கள். இந்த முயற்சிக்கு போகும்போது. அல்லாஹ்வின் துாதர் கொடுத்த கொடி வெள்ளை நிறத்தில் இருந்தது. வெறும் வெள்ளை அதில் எதுவும் எழுதப்படவில்லை. வேறு எந்தக் கலரும் அதில் சேர்க்கப்படவில்லை. இதை ஏன் குறிப்பிடுகின்றோம்?


இன்று உலகில் ஏகப்பட்ட கலர்களில் கொடிகள் உள்ளன. அதில் ஏதேதோ வாசகங்கள் சின்னங்கள் அமைத்துள்ளார்கள். பிறகு அதுதான் ரசூலுல்லாஹ் பிடித்த கொடி, கொடுத்த கொடி, நின்ற கொடி, வென்ற கொடி என்ற வசனங்கள் வேறு பேசுகிறார்கள். ரசூலுல்லாஹ் கொடுத்த கொடி, கறுப்பு வெள்ளை ஆகிய இரண்டு கலரில்தான் இருந்தது. இதையும் பத்ரில் பார்ப்போம்.  


இன்னொரு சாரார், கொடி பிடிக்கும் கூட்டம் அல்ல நாங்கள். கொள்கையை துாக்கிப் பிடிக்கும் கூட்டம் என்றார்கள். உண்மையிலேயே கொள்கையை காக்கச் சென்றதாகக் கூறியவர்கள் கொடி பிடித்துதான் திரிகிறார்கள். ஸைபுல் பஹ்ர் என்ற நிகழ்வுக்கு போகும்போது ரசூலுல்லாஹ் கொடுத்த கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள். இதுதான் இறைத்துாதர் நிறுவிய முதல் கொடியாகும்.


எல்லா போர் தடுப்பு முயற்சிகளுக்கும் போர்களுக்கும் எந்த இடத்தில் வைத்து அந்த சம்பவம் நடக்கிறதோ அந்த இடத்தின் பெயர்தான் அந்த நிகழ்வின் பெயராக அமைந்திருக்கிறது. அது போல் பத்ர் என்பதும் ஒரு இடத்தின் பெயர்தான். 


ஹஜ்ஜுக்கு வாருங்கள். உம்ராவுக்கு  வாருங்கள் என்று அழைப்பது போல் பத்ருக்கு வாருங்கள் என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். 

அது ஒரு வணக்கம் போல் உலகம் முழுவதும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹஜ்ஜு, உம்ரா போல் பத்ர் ஒரு வணக்கம் அல்ல. இதை மனதில் பதிய வைக்க கடமைப்பட்டுள்ளோம்

ஸைபுல் பஹ்ர் என்ற இடத்தில் போர் நடக்காவிட்டாலும். நுால்களில் ஸைபுல் பஹ்ர் போர் என்றே எழுதப்பட்டு இருக்கின்றது. இரண்டாவதாக நடந்த முயற்சி எது?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்


அடுத்த தலைப்பு
ந்த அணியிலிருந்து விலகி நம் பக்கம் வந்துவிட்டவர்கள் யார்? யார்?



படித்து விட்டீர்களா?


தேர்தல் முடிவுகள் இறை வசனத்தின் பார்வையில்

முந்தைய தலைப்பு

நபி(ஸல்) கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருந்தார்களா?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு