தனி மனித புகழ்ச்சி, இகழ்ச்சிகளுடன் சங்கைக்குரிய மாதத்தில் சண்டைகள் சரியா?

பி.ஜே. உடல் நலம் பெற நாமும் துவா செய்வோம் .. !  நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று தடா அப்துல் றஹீம் ஒரு பதிவை போட்டு இருந்தார். 


அத்துடன் நின்று இருக்க வேண்டும். அல்லது அதுபோல் உள்ள நல்ல வார்த்தைகளை துஆக்களை தொடர்ந்து இருக்க வேண்டும். அதுதான் உடல்நிலை சரி இல்லாதவர்கள் விஷயத்தில் உள்ள அணுகுமுறை. அதற்கு மாற்றமாக, அப்போதானே ... என தொடர்ந்து எழுதி உள்ளதை எதிரிகளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதில் உள்ள  குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தாலும் அதைக் கூறும் தருணம் இது அல்ல. கூறிய முறையும் சரி அல்ல. 


இதே குற்றச்சாட்டை ஏர்வாடி காசிம் மேலப்பாளையம் பொதுக் கூட்டத்தில் கூறினார்.  உடனே அதற்காக அந்த மேடையிலேயே மன்னிப்பு கேட்டவர்தான் இந்த தடா. அப்பொழுது மன்னிப்பு கேட்ட தடா இப்பொழுது ஏன் எழுதினார்?  இவருக்கு பதில் அளித்து வந்துள்ள வார்த்தைகள். 

திராணியற்ற_ஒம்போது_பொட்டை_தடா_ரஹீம்_செருப்படி_பதில்! சாக்கடையில் புரளும் சண்டாளப் பன்றி கெடா மார்க் சொரி நாய் மானங்கெட்டவனே! பப்ளிசிட்டிக்காகவும், பணத்திற்காகவும் கூட்டிக்கொடுக்கக் கூடத் தயங்கமாட்டான். கபோதி வயசுக்கு வந்த பருவக்குமரி போல பச்சை ஓலைக்குள் பாவடை கட்டிக் கொண்டு பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்து, அயோக்கியப் பயல்.. இப்படி போகிறது.

#கெடா ரஹீமே! நீ பொது மக்களிடம் அடிவாங்கி சாகக் கூடாது. அப்படி செத்து விட்டால் நீ செய்த கட்டப்பஞ்சாயத்து ரவிடியிசம் பொருக்கியிசம் என இந்த சமுதாயத்தை தீவிரவாதியாக மாற்றிய அயோக்கியத்தனத்துக்கு இந்த சமுதாயம் உனக்கு தரும் படிப்பினையை நீ பார்ப்பதற்காக நீடூடி வாழ வேண்டும். அதற்காக அந்த அருளாளனிடம் இந்த ரமலான் மாதத்தில் கையேந்துகிறேன். இப்படி முடிகிறது.  இவற்றைப் பார்த்த ஒருவர். 

எதற்கெடுத்தாலும் தலைமை சார்பில் அறிக்கை விடுகிறார்கள். இது பொய் என்றால் என்ன செய்ய வேண்டும்? இது உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர் மீது அல்லாஹ்வின் சாபம்  உண்டாகட்டும். இது பொய்  என்றால் பொய்யை இட்டுக்    கட்டியவர் மீது  அல்லாஹ்வின் சாபம்  உண்டாகட்டும்   இமாம்அலி, ஹைதர் அலி, முஸ்தபா ரஷாதி போன்ற இளைஞர்களை  பிற மாநிலத்தி்ல் தங்க வைத்தவன். வீடுகள் ஏற்பாடு செய்து கொடுத்து ஜிஹாது பெயரால் சமுதாய இளைஞர்களை தீவிரவாதியாக மாற்றிவிட்டு கைதுக்கு பயந்து பல்டி அடித்த அயோக்கியன்களுக்கு சரியான பாடம் புகட்டு யா அல்லாஹ் என துஆ செய்யவும் என  வேண்டுகோள் வைக்கலாமே . மற்றவற்றுக்கெல்லாம் துஆ  செய்யவும் என்று தொண்டர்களுக்கு அறிக்கை  அனுப்புவார்கள்  இதில்  மட்டும் துஆ செய்யவும் என கூற ஏன் தயங்குகிறார்கள் புரியவும். என்று எழுதி இருந்தார். 

பத்ர் கண்ட சமூகம் பரிதவிக்கிறது உலகம் முழுக்க,,, பத்ர் வரலாறைப்பேசிக்கொண்டே என்னோட #பத்ருக்கு_வரீயா.,.,,,! என்று ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை இன்று அழைப்பு விடுக்கிறான் !!! அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.கண்ணீர்தான் வருகிறது இன்று சிலரின் எழுத்துக்களையும், பேச்சிகளையும் பார்க்கும் போது.,,,, இப்படி ஒருவர் எழுதி இருந்தார். 

சங்கைக்குரிய மாதமும் சண்டைகளும்

முத்தாய்ப்பாக இஸ்லாமிய பிரச்சாரகர் பெரம்பலுார் நாஸர் அலி கான் அவரது கருத்ஆதை டியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹு ஜல்ல ஷானஹு வதஆலாவின் நல்லடியார்களே! எனதருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! சங்கைக்குரிய ஒரு முபாரக்கான மாதத்திலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

இந்த மாதம் வந்து விடுமேயானால் அல்லாஹ் உடைய  ரசூல்(ஸல்). அதிகம் அதிகமாக தர்மம் செய்வார்கள். சூறைக் காற்றைப் போல். அதிகம் அதிகமாக நீண்ட நேரம் நின்று தொழுவார்கள். பாவ மன்னிப்பை கேட்பார்கள். பொய் பேசுவதிலிருந்தும் மோசடியிலிருந்தும் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் உபதேசம் செய்து இருக்கின்றார்கள்.

ஆக சங்கைக்குரிய இந்த மாதத்திலே அல்லாஹ்வை புகழுங்கள். ஷய்த்தானுடைய அடிச்சுவடுகளை இனம் காட்டுங்கள். இதன் மூலம் சமுதாயம் நேர் வழி பெற முடியும். இதன் மூலம் நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறவும் முடியும்.

இஸ்லாம் என்பது ஓர் கொள்கை. இதற்குள்ளால் பல்வேறு கொள்கைகள் என்பது இல்லை. தவ்ஹீது என்ற ஒரு கொள்கையை தனிப்பட்ட ஒரு இஸமாக ஆக்கி. இஸ்லாம் என்பது வேறு தவ்ஹீது என்பது வேறு என்ற நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்.

அல்லாஹ் உடைய துாதர் ரசூல்(ஸல்) இஸ்லாம் ஓர் கொள்கை என்று நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதில் இருக்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இன்னமல் முஃமினுான இக்வா. திரும்பத் திரும்ப பட்டதாரிகளாக படித்து விட்ட நம் மக்களுக்கு பழையபடி நம்முடைய ஒன்னாம் வகுப்பு பாடத்தை எடுக்க வேண்டிய நிலையில் இன்று நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இதை மறந்து விட்டு உங்களுடைய பதிவுகளை வெளியிடாதீர்கள். அல் முஸ்லிமு அகுல் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுடைய சகோதரர்.

சகோதரருடைய மாமிசங்களை உண்ணாதீர்கள். தனி மனிதனுடைய புகழை இந்த மாதத்தில் அல்ல எப்போதுமே பாடாதீர்கள். ஒரு மனிதனால் இந்த மார்க்கம் உயர்ந்து விடப் போவதும் இல்லை. பல பேர் சேர்ந்தாலும் இந்த மார்க்கம் அழிந்து விடப் போவது இல்லை. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்.

நரகத்துக்கு உரியவர்களைக் கொண்டும் போரை வெற்றி பெறச் செய்து இருக்கிறான் அல்லாஹுதஆலா. ஆக ஒரு மார்க்த்துக்காக உழைத்தவர் ஒருவர் இருந்தால் அதற்கான பலனை அவர் அல்லாஹ்விடத்திலே அடைய போதுமானவர். அவர் தவறுகள் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனை பெற அல்லாஹ் போதுமானவன்.

ஆகவே தனிப்பட்ட ஒரு மனிதரை புகழ்வதிலும் இகழ்வதிலும் இந்த ரமழான் மாதத்தின் உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்காமல். அல்லாஹ்வை புகழ்ந்து அதிகமதிகம் அல்லாஹ்வை தொழுது நீண்ட நெடிய நேரம் இரவிலே நின்று வணங்கி. உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா? என்று கவலைப்படுங்கள். ஏன் இன்னும் பாவங்களை அதிகமாக சேகரித்துக் கொள்கிறீர்கள்.

குள்ளமாக இருப்பவர்களை குள்ளமாக என சொன்னது. மிகப் பெரிய ஒரு குறை கூறியதாக அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்) கூறி உள்ளார்கள். அந்த வார்த்தையை கடலில் போட்டால் கடல் நீரும் நாறி விடும் என அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை கண்டித்துள்ளார்கள்.

அந்த ஹதீஸுகளை அடிக்கடி கேட்போம். ஆனால் அதற்கு மாற்றமாக நாம் செயல்படுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு. ஷைத்தானுடைய வலையிலே வீழ்ந்து. மனிதர்களுடைய புகழ்ச்சிக்காகவும். மனிதர்களுடைய இகழ்ச்சிக்காகவும். இயக்கங்களுடைய வெறிக்காகவும் உங்களுடைய வாழ்க்கையை மறந்து விட்டு. எந்த ஒரு இயக்கத்தின் பெயரையும் பதிவிடுவதினால் மறுமையில் நிச்சயமாக வெற்றி பெற்று விட முடியாது

அல்லாஹ்வுக்கும் அல்லாஹ் உடைய துாதருக்கும் கொடுக்கக் கூடிய அந்த முக்கியத்துவத்தில் எத்தனையோ நேரத்தை நாம் இயக்கங்களுக்கும் இயக்க தலைவர்களுக்காகவும் அதை செலவிட்டு கொண்டு இருந்தோம். இதிலிருந்து வல்ல நாயன் நம் அனைவரையும் பாதுகப்பானாக!

அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய துாதரையும் நினைத்து அதன் அடிப்படையில் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ளாமல். தனிப்பட்ட மனிதர்கள், மார்க்க அறிஞர்கள். இவர்களெல்லாம் நல்லதும் சொல்வார்கள். கெட்டதும் சொல்வார்கள்.

ஒரு மார்க்க அறிஞர் சிறந்து விளங்குவதற்கு மார்க்க அறிஞர் அல்ல காரணம். மார்க்கம் காரணம். உணவை உண்டு முடித்த உடன் அல்ஹம்துலில்லாஹ் என்று (அல்லாஹ்வை புகழச்) சொல்ல சொல்லி உள்ளது நமது மார்க்கம். அந்த உணவை தயாரித்தவரை புகழ்ந்துவிடச் சொல்லவில்லை. அந்த உணவில் குறை இருந்தாலும் அவர்களை குறை சொல்லாதீர்கள் என்று சொன்ன மார்க்கம்.

பாருங்கள் எவ்வளவு அழகான மார்க்கம். இந்த மார்க்கத்திற்காக யாரேனும் பாடுபட்டு மார்க்கம் மேலோங்கி இருந்தால். அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுங்கள். அல்லாஹ்வை புகழுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கம் உண்மையானதாக இருந்ததால்தான் அதை எடுத்துக் கூறக் கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

பாதிலான ஒரு மார்க்கத்திலே நாம் இருந்திருப்போமேயானால் நம்மால் ஒருவர் கேட்கக் கூடிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. இதில் பெருமை நமக்கு இல்லை. வல்ல நாயனுக்கே பெருமை. மார்க்கமும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது.

அது போல ஒரு உணவை உண்ணும்பொழுது உணவை உருவாக்கிக் கொடுத்த அல்லாஹ்வுக்கே நன்றி செலுத்துங்கள். அதே நேரத்தில் அதில் உப்பு அதிகமாக இருந்தால் தயாரித்தவரை குறை கூறாதீர்கள். அல்லாஹ்வுடைய துாதர்(ஸல்) அவர்கள். எந்த ஒரு உணவையும் குறை கூற மாட்டார்கள். இதிலிருந்து நமக்கு அழகான படிப்பினை இருக்கின்றது.

மார்க்க அறிஞர்கள் ஆய்வு செய்து சரியாகச் சொல்லி விட்டால் அவர்களுக்கு இரண்டு நன்மையும். தவறான தீர்வைக் கொடுத்து விட்டால் ஒரு நன்மையும் உண்டு. தவறான தீர்ப்புக்கு அல்லாஹ் தண்டிக்க மாட்டான். அல்லாஹ் நாடினால் மன்னித்து விடுவான். ஆகவே அறிஞர்களுடைய தவறுகளை அல்லாஹ்விடத்தில் விட்டு விடுங்கள்.

அவர்களுடைய சிறப்புகளைக் கண்டு அல்லாஹ்வை புகழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நம் அனைவருடைய பாவங்களை மன்னித்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற வைக்க போதுமானவன். நாம் ஒன்றுபட்ட சகோதரர்களாக வாழக் கூடிய வாய்ப்பினை இந்த ரமழான் மாதத்தில் அல்லாஹ் நம் அனைவருக்கும் ஏற்படுத்தி தருவானாக.

வஆகிர் தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.  வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு