உதயமான தினத்தன்று நடத்தியது வெற்றி விழாவா விடுதலை வேண்டலா?

[2/8, 3:36 PM] ‪+91 95003 22485‬: கட்டிங் - எடிட்டிங் பொறுக்கிகள்.....
இன்று நடந்த சிறைவாசிகள் மீட்பதற்கான கோரிக்கை ஆர்பாட்டத்தில் , பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசிய வீடியோவில் ஒரு 16செகண்ட் மட்டும் கட் செய்து சில பொறுக்கிகள் பரப்பிவருகிறார்கள்.
சட்டமன்றத்தில் சிறைவாசிகள் சம்பந்தமாக பேசிய விவரங்களை சொல்லிவிட்டு,
"இப்போது ஏன் வீதியில் நின்று போராட்டம் நடத்துகிறோம் என்றால், இந்த அரசு சிறைவாசிகளுக்கு கருனை காட்ட வேண்டும் , அப்படி கருணை காட்டினால் மீண்டும் அதிமுகவை 2016 ல் ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த ஆர்பாட்டம்"
இது தான் பேராசிரியர் பேசியது, ஆனால் சில மன நோயாளிகள் அதை கட் செய்து 
'மீண்டும் அதிமுகவை 2016 ல் ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த ஆர்பாட்டம்"
என்பதை மட்டும் வீடியோவாக வெளியிடுகிறார்கள்....
இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும்...

[2/8, 4:45 PM] ‪+974 5533 7896‬: Mushthaq bhai Admin கண்டு கொள்ள மாட்டார் காரணம் அவருடைய மகன் தான் தலைமையேற்று இவ்வாதங்களை நடத்துகிறார் அவருக்கு எதிரான அல்லது அவருடைய கொள்கைக்கு எதிரான ஒருவராக இருந்தால் எப்பொழுதோ தூக்கியிருப்பார் இது தான் உலகம்

[2/8, 4:48 PM] ‪+974 5533 7896‬: சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டால் அதிமுகவை ஆட்சியில் அமர வைப்போம் என்பதை கட் செய்து போலியாக அதிமுகவை அமர வைப்போம் என்று சொன்னதை மட்டும்  பரப்புவோர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்

உங்களின் மரணம் வெகு தூரமில்லை.. அல்லாஹ்வின் சாபத்தை வாங்கி கொள்ளாதீர்கள்

[2/8, 1:54 PM] ‪+971 52 930 3016‬: உலகில் எத்தனையோ அரசியல் கட்சிகள்
இருக்கிறது. அத்தனை அரசியல் கட்சிகளும் ஒரு
சம்பரதாய பேச்சுக்காக வருடம் முழுவதும்
மக்களுக்காக போராடினாலும் கட்சி
உதயமான தினத்தன்று வெற்றி விழா
என்ற பெயரில் பெரும் விழா எடுத்து
கட்சியின் தலைவர்களை புகழ்பாடி இனிப்பி
வழங்கி பெரும் விழாவாக
கொண்டாடுவர்.
ஆனால் மாற்று சிந்தனைகளையும், மாற்று
அரசியலையும் முன்னெடுத்து தமிழக
அரசியல்வானில் தவிர்க்கமுடியாத
சக்தியாக உருவெடுத்திருக்கும் மனிதநேய
மக்கள் கட்சி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து
எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
பிப்ரவரி - 07 ஆகிய இன்று சிறைவாசிகளின்
விடுதலைக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தி
முக்கிய நகரங்களான மதுரை, கோவை,
சென்னை ஆகிய நகரங்களை மக்கள்
வெள்ளத்தால் முழ்கடித்து
ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்
ளாக்கியிருக்கிறது.
எங்கள் கட்சி இன்றைய போராட்டம் மூலம் ஒரு
கருத்தை விதைத்திருக்கிறது.
இங்கு சமத்துவமும் இல்லை.....
சமநீதியும் இல்லை ....
ஆகையால் போராளிகளாகிய எங்களுக்கு
வெற்றி விழாக்கள் இல்லை.
எங்கள் கட்சி உதயமான தினத்தை
அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் தினமாக
வரலாற்றில்
பதிவு செய்திருக்கிறோம்
பலருக்கு "அரசியல்" அடாவடியாக
தெரிகிறது.
சிலருக்கு தீண்டத்தகாததாக இருக்கிறது.
இன்னும் சிலருக்கு பணம் கொட்டும்
தொழிலாக இருக்கிறது.
ஆனால் எங்களுக்கோ சேவையாக இருக்கிறது.
தாய்க்கழக பயிற்சி பாசறையில்
வார்த்தெடுக்கப்பட்ட நாங்கள்
போராளிகளாகவே மரணிக்க ஆசைப்படுகிறோம்.
எங்களுக்கு இவ்வுலக பதவி தேவையில்லை
மறுமைப்பதவியே தேவை.
எங்கள் இறைவன் கூறிய
எம்பெருமானார் வாழ்ந்துகாட்டிய
ஆன்மீகமும், அரசியலும் கலந்த
வாழ்க்கையை விரும்புகிறோம்
அந்த விருப்பமும்
நாளை மறுமை வெற்றிக்கு
வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையில்
பயணிக்கிறோம்.
கூடிய கூட்டங்களை கண்டு
எங்களுக்கு இறுமாப்பு இருந்ததில்லை.
ஆனால் இறை பயம் இருக்கிறது.
இறுமாப்புடன் எங்களுடன் இருந்த சிலரை
நாங்களே விரட்டியிருக்கிறோம். இன்னும் சிலர்
அவர்களாகவே விலகி சென்றனர்.
இவை அனைத்தும் இறை நாட்டமே என
பயணிக்கிறோம்.
எங்கள் வாழ்நாள் முழுவதும்....
பேரியக்கத்தின் தொண்டனாய்
அநீதியை எதிர்த்து நிற்கும் போராளியாய்
மக்கள் சேவனாய்
பயனிக்கவே விரும்புகிறோம்.
[2/8, 2:28 PM] ‪+966 57 674 8502‬: அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழகத்தின் மூன்று பெருநகரங்களில் இரண்டுவாரகாலத்தில் அதிகாரவர்கம் மிரண்டு போகும் வகையில் உணர்வுபூர்வமாக களத்தில் உழைத்த அனைத்துசகோதர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
மதுரையில்......
காவல்துறை பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்டநிலையில் போராட்டத்திற்கு 100க்கும் குறைவான வாகனங்களில்தான் மக்கள் வருவார்கள் என்ற உளவுதுறையின் கணக்கை நம் கருப்புவெள்ளை போராளிகள் தகர்த்து 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்து போராட்டகளத்திற்கு வந்ததால் மதுரையின் அனைத்துபகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது ...
தமுமுக,மமகவின் போராட்ட வியூகங்களை இதுவரை அறிந்திடாத மதுரைமாநகர காவல்துறை 
மேடைக்கு தடைபோட்டது.......
கண்டெய்னர் லாரியை மேடையாக மாற்றினோம்....
வயதுமுதிர்ந்த
கைகுழந்தைகளோடு களத்திற்கு வருகின்ற தாய்மார்களுக்காக வைத்திருந்த நாற்காலிகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துசென்றார்கள்......
எடுத்துச்சென்ற நாற்காலிகள் எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இல்லைஎன்றால்...
வரக்கூடியவாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆங்காங்கே சாலைகள்மறிக்கப்படும் என அறிவிப்பு செய்தோம் ....
மக்கள் களத்தில் திரள
தொடங்கினார்கள்
நாற்காளிகள் தாமாக வந்தது,
இளைஞர் அணி சகோதரர்கள் களமிரங்கினார்கள்
களத்தில் இருந்து காவல்துறையினர் விலகி பார்வையாளர்களாக மாறினார்கள்,
மக்கள்வெள்ளத்தால் நிறைந்தது போராட்டக்களம்....
நெல்லை ஏர்வாடியில் இருந்து வந்திருந்த சிறைவடிவ வாகனம் அனைவரையும் ஈர்த்தது
பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது
தங்களின் உடல்ஊனத்தை பற்றி கவலைப்படாமல் 17ஆண்டுகாலம் சிறைகளில்வாடும் சமுதாய உறவுகளுக்காக சக்கரநற்காலிகளில் வந்த சகோதரர்களை பார்த்தவுடன் திரண்டிருந்த மக்கள் அல்லாஹ்அக்பர் என்று முழக்கங்களை அதிரவிட்டார்கள்..
நிகழ்ச்சிகள் துவங்கின...
நிகழ்ச்சிகளை தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் தொகுத்து வழங்குவார் என பொதுச்செயலாளர் அறிவிப்பு செய்தார்,
இறைவசனத்தில் துவங்கி தமுமுக, மமக மாநில நிர்வாகிகளும் சிறப்புஅழைப்பாளர்களும் உரையாற்றினார்கள்
கூட்டத்தில் பேசிய அருண்சவ்ரி அவர்கள் நீண்டகாலமாக சிறைவாசிகளை விடுதலை செய்யகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது, இனி சிறை உடைப்பு போராட்டங்கள்தான் நடத்த வேண்டும் என்றார்
வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள்
சிறையில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு  முஸ்லிம்கள் என்ற காரணமல்ல அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடினார்கள் என்பதுதான் காரணம் என்றார்
ஹென்றி டிபென் அவர்கள்
சிறைகைதிகளுக்கான விடுதலை என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி இந்தநாட்டிலேயே போராட்டம் நடத்திய அரசியல் அமைப்பு மனிதநேயமக்கள்கட்சி மட்டும்தான் அதற்காக நான் முதலில் மமகவிற்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன் என்றார்
கொளத்தூர் மணி அவர்கள்
இந்த நாட்டில் தேசதந்தை காந்தியை கொன்ற கோட்சேவிற்கெல்லாம் விடுதலை வழங்கி இருக்கிறார்கள்
ராஜீவ்காந்தியை கொன்றதாக சொல்லப்படுபவர்களை வெளியே விட மறுக்கிறார்கள்
என்றார்
உரைகளுக்கு இடையே ...
பழனி பாருக் , சிவகாசி முஸ்தபா ஆகியோர்களின் கோரிக்கை முழக்கங்கள் வின்னை பிழந்தது
பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது அவர்கள்
சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கோவைகலவரம்,இராஜிவ் கொலைவழக்கில் இழைக்கப்பட்ட அநிதீகளை பட்டியலிட்டார்
இந்த போராட்டம் முடிவல்ல இதுதான் துவக்கம் சிறைகதவுகள் திறக்கப்படும் வரை எங்கள் போராட்டம் ஒயாது என்றார்
இறுதியாக பேசிய மூத்ததலைவர் ஹைதர் அலி அவர்கள்
முஸ்லிம் சிறவாசிகளின் அவலங்களையும் சங்பரிவாரிகளுக்கு காட்டப்படும் சலுகைகளையும் பட்டியலிட்டார்
மதுரை மாநகர காவல்துறைக்கு
தனக்கே உரித்தான பாணியில் எச்சரிக்கை விடுத்தார்
எங்களை ஒடுக்கநினைத்தால் அந்த காவல்துறை அதிகாரியின் சட்டைகழட்டப்படும் என்றபோது திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது......
மீண்டும் முழக்கங்களுடன்
கருப்பு வெள்ளை பட்டாளம்
கலைந்தது........
மதுரை மிரண்டது......
களத்தில் உழைத்த அனைத்து சகோதர்களுக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க பிராத்திக்கிறேன் 
--------  பழனி பாருக் ,தமுமுக ---------

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழகத்தின் மூன்று பெருநகரங்களில் இரண்டுவாரகாலத்தில் அதிகாரவர்க்கம் மிரண்டு போகும் வகையில் உணர்வு பூர்வமாக களத்தில் உழைத்த அனைத்துசகோதர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
மதுரையில்......
காவல்துறை பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்டநிலையில் போராட்டத்திற்கு 100க்கும் குறைவான வாகனங்களில் தான் மக்கள் வருவார்கள் என்ற உளவுதுறையின் கணக்கை நம் கருப்புவெள்ளை போராளிகள் தகர்த்து 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்து போராட்டகளத்திற்கு வந்ததால் மதுரையின் அனைத்துபகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது ...
தமுமுக,மமகவின் போராட்ட வியூகங்களை இதுவரை அறிந்திடாத மதுரைமாநகர காவல்துறை 
மேடைக்கு தடைபோட்டது.......
கண்டெய்னர் லாரியை மேடையாக மாற்றினோம்....
வயதுமுதிர்ந்த
கைகுழந்தைகளோடு களத்திற்கு வருகின்ற தாய்மார்களுக்காக வைத்திருந்த நாற்காலிகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துசென்றார்கள்......
எடுத்துச்சென்ற நாற்காலிகள் எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இல்லைஎன்றால்...
வரக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆங்காங்கே சாலைகள் மறிக்கப்படும் என அறிவிப்பு செய்தோம் ....
மக்கள் களத்தில் திரள
தொடங்கினார்கள்
நாற்காலிகள் தாமாக வந்தது,
இளைஞர் அணி சகோதரர்கள் களமிறங்கினார்கள்
களத்தில் இருந்து காவல்துறையினர் விலகி பார்வையாளர்களாக மாறினார்கள்,
மக்கள்வெள்ளத்தால் நிறைந்தது போராட்டக்களம்....
நெல்லை ஏர்வாடியில் இருந்து வந்திருந்த சிறைவடிவ வாகனம் அனைவரையும் ஈர்த்தது
பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது
தங்களின் உடல்ஊனத்தை பற்றி கவலைப்படாமல் 17ஆண்டுகாலம் சிறைகளில்வாடும் சமுதாய உறவுகளுக்காக சக்கரநற்காலிகளில் வந்த சகோதரர்களை பார்த்தவுடன் திரண்டிருந்த மக்கள் அல்லாஹ்அக்பர் என்று முழக்கங்களை அதிரவிட்டார்கள்..
நிகழ்ச்சிகள் துவங்கின...
நிகழ்ச்சிகளை தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் தொகுத்து வழங்குவார் என பொதுச்செயலாளர் அறிவிப்பு செய்தார்,
இறைவசனத்தில் துவங்கி தமுமுக, மமக மாநில நிர்வாகிகளும் சிறப்புஅழைப்பாளர்களும் உரையாற்றினார்கள்
கூட்டத்தில் பேசிய அருண்சவ்ரி அவர்கள் நீண்டகாலமாக சிறைவாசிகளை விடுதலை செய்யகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது, இனி சிறை உடைப்பு போராட்டங்கள்தான் நடத்த வேண்டும் என்றார்
வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள்
சிறையில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு  முஸ்லிம்கள் என்ற காரணமல்ல அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடினார்கள் என்பதுதான் காரணம் என்றார்
ஹென்றி டிபென் அவர்கள்
சிறைகைதிகளுக்கான விடுதலை என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி இந்தநாட்டிலேயே போராட்டம் நடத்திய அரசியல் அமைப்பு மனிதநேயமக்கள்கட்சி மட்டும்தான் அதற்காக நான் முதலில் மமகவிற்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன் என்றார்
கொளத்தூர் மணி அவர்கள்
இந்த நாட்டில் தேசதந்தை காந்தியை கொன்ற கோட்சேவிற்கெல்லாம் விடுதலை வழங்கி இருக்கிறார்கள்
ராஜீவ்காந்தியை கொன்றதாக சொல்லப்படுபவர்களை வெளியே விட மறுக்கிறார்கள்
என்றார்
உரைகளுக்கு இடையே ...
பழனி பாருக்  அவர்களின் கோரிக்கை முழக்கங்கள் விண்ணை பிளந்தது
பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது அவர்கள்
 சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கோவைகலவரம்,இராஜிவ் கொலைவழக்கில் இழைக்கப்பட்ட அநிதீகளையும் பட்டியலிட்டார்
இந்த போராட்டம் முடிவல்ல இதுதான் துவக்கம், சிறைகதவுகள் திறக்கப்படும் வரை எங்கள் போராட்டம் ஒயாது என்றார்
இறுதியாக பேசிய மூத்ததலைவர் ஹைதர் அலி அவர்கள்
முஸ்லிம் சிறைவாசிகளின் அவலங்களையும் சங்பரிவாரிகளுக்கு காட்டப்படும் சலுகைகளையும் பட்டியலிட்டார்
மதுரை மாநகர காவல்துறைக்கு
தனக்கே உரித்தான பாணியில் எச்சரிக்கை விடுத்தார்
எங்களை ஒடுக்கநினைத்தால் அந்த காவல்துறை அதிகாரியின் சட்டைகழட்டப்படும் என்றபோது திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது......
மீண்டும் முழக்கங்களுடன்
கருப்பு வெள்ளை பட்டாளம்
கலைந்தது........
மதுரை மிரண்டது......
களத்தில் உழைத்த அனைத்து சகோதர்களுக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க பிராத்திக்கிறோம்.
--------  சிவகாசி நகர மமக ---------

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.