இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது எது? தண்டிப்பா? மன்னிப்பா?


நாம் உபதேசங்களை செய்த பிறகும் அவர் திருந்தவில்லையே! நேர் வழி பெறவில்லையே! நம்மால் முடிந்த உதவிகளை செய்த பின்னரும் அவர் அந்த சிரமத்தில் இருந்து மீளவில்லையே. இப்படி கவலை படக் கூடாது. இப்படி கவலைப் படுவது முஃமினுக்குரிய தகுதி அல்ல.

அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களிடமே அல்லாஹ் அப்படித்தான் கூறுகின்றான். (நபியே) நிச்சயமாக நீங்கள் விரும்பியோரை நேர் வழியில் செலுத்த உம்மால் முடியாது. (திரு குர்ஆன்28;56)  யார் விரும்பியோரை நேர் வழியில் செலுத்துவான்


தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நேர் வழியில் செலுத்துவதை அவனுடைய கைவசம் வைத்துள்ளான். யாரை நேர் வழியில் செலுத்த வேண்டும். யாரை அப்படியே வழி கேட்டில் விட்டு விட வேண்டும். இது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. இறைத் துாதருக்கே இந்த பொறுப்பு இல்லை என்றால். நாம் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்.


உலகத்தில் வாழக் கூடிய ஒவ்வொரு முஃமினும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். நம்மை பற்றிய விசாரணைக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். அதற்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பரீட்சையிலே நடத்தப்பட்ட பாடத்திற்குத்தான் கேள்வி கேட்பார்கள். நடத்தப்படாத பாடத்திற்கு கேள்வி கேட்டால் பதில் எழுத முடியுமா? முடியாது. அந்த மாதிரி கேள்வி கேட்கவும் மாட்டார்கள். தவறாகவோ மறந்தோ கேட்கும் ஆசிரியர்களும் உண்டு. ஏனென்றால் அவர்கள் மனிதர்கள், மறதியாளர்கள். அல்லாஹ் அப்படியா?


என் இறைவன் (அல்லாஹ்) தவறவும் மாட்டான். மறக்கவும் மாட்டான் (அல்குர்ஆன் 20:52)  


ஆகவே அல்லாஹ் நம்முடைய சக்திக்கு அப்பால்பட்ட எதையும் கேட்கவே மாட்டான். இப்பொழுது உலகில் பரவலாக உள்ள கேள்வி. இன்ன இன்ன நாட்டில் முஸ்லிம்கள் சிரமப்படுகிறார்களே! ஜிஹாது செய்ய அங்கு போகலாமா? ஜிஹாது செய்ய போகாமல் இருப்பது சரியா? இது ஒரு காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கன் போன்ற நாடுகளில் கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தது. இப்பொழுது அரபக டி.வி.க்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வியாக ஆகி இருக்கிறது.


இது சாத்தியமா? இன்றைய கால கட்டத்தில் சாத்தியம் இல்லாத ஒன்று. அதற்காக நாம் ஏன் அலைய வேண்டும்? நம்முடைய பெற்றோர்களை, மனைவி மக்களை பார்ப்பது பராமரிப்பது நம்மீது கடமையாக இருக்கிறது. போர்(கிதால்)படைக்கு பெயர் கொடுத்த ராணுவ வீரரையே மனைவியுடன் ஹஜ்ஜுக்கு செல்லுங்கள் என அனுப்பி வைத்தார்கள். கண்ணிய நபி (ஸல்) அவர்கள்

தாயும், தந்தையும் உயிருடன் ருக்கின்றார்கள் என்றால்,  அவ்விருவருக்கும் பணிவிடைகள், உதவிகள் எனும் ஜிஹாத் (உழைப்பு) செய்யுங்கள். இவ்வாறு அறிவுரை கூறி விரும்பி வந்தவரையே திரும்பி அனுப்பினார்கள் கருணை நபி (ஸல்) அவர்கள்.


காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் கணிவான இந்த அழகிய வழிகாட்டுதல்கள் கண் முன்னே இருக்கின்றது. அதை விட்டு விட்டு கண்மூடித்தனமாக ஜிஹாது ஜிஹாது என்றார்கள். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தைக் கொடுத்தார்கள். அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்குரிய உதாரணங்களில் இன்றைய சிரியா மட்டும் அல்ல. ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், துருக்கி மற்றும் எல்லா வளைகுடா நாடுகளும்தான் உதாரணங்களாக ஆகி விட்டன. ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொண்டால் அதன் பாதிப்புகளை எழுதி முடியாது.


ஒரு தலைமுறையே கல்வி என்றால் என்னவென்று தெரியாத கை நாட்டாக ஆகி விட்டது. ஆப்கன் வாலிபர்களில் 99 சதம் கை நாட்டாகத்தான் இருக்கிறார்கள். இது மட்டும் அல்ல, கையெழுத்து போடத் தெரியாதவர்கள்தான் கை நாட்டு வைப்பார்கள். இந்த நிலை உலக அளவில் மாறி வருகிறது. 

எவ்வளவு பெரிய படிப்பு படித்தவராக இருந்தாலும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வரும்பொழுது கையெழுத்துடன் கை நாட்டும் வைக்க வேண்டும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக வந்த பின் கண் ரேகைகள், கை ரேகைகள் எடுத்தார்கள். இப்பொழுது மனுச் செய்யும்பொழுதே விரல் ரேகையையும் இணைத்தே மனுச் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாருக்கும் வர உள்ளது.


ஜிஹாது மூலம்தான் மறுமையில் நாம் வெற்றி பெற முடியும் என்று சொன்னவர்கள் யார்? சொல்ல வைத்தவர்கள் யார்? பின்னணியில் உள்ளவர்கள் யார்? இப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜிஹாது என்றால் புனிதப் போர் என்ற தவறான விளக்கத்தை ஏற்று. அதை துாக்கிப் பிடித்தார்களே! அவர்கள் எல்லாருமே இவர்களை அடையாளம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். வாய்ப்பு அமைந்தால் அவர்களைப் பற்றி நாமும் பின்னர் விரிவாகப் அடையாளம் காட்டுவோம். 


சுருக்கமாகச் சொல்வது என்றால். வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்பது போலத்தான். அவர்களது செயல்கள் இருக்கும். ஜிஹாது என்று சொன்னால் எல்லாம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பார்கள். இனி ஜிஹாது பற்றி மட்டுமே பேசுவேன். மற்ற தஃவா பணி எதுவுமே செய்ய மாட்டேன் என்பார்கள். நெருக்கடி வந்ததும் ஒட்டு மொத்தமாக ஜிஹாதுக்கு முழுக்கு போட்டு விடுவார்கள்.


அவர்களால் உருவாக்கப்பட்டவர்களை அம்போ என விட்டு விடுவார்கள். தங்களைக் காத்துக் கொள்ள காட்டிக் கொடுத்து சாட்சியும் சொல்வார்கள். அமெரிக்க சிறைக்குள்ளும் அனுப்பி விடுவார்கள். அது மட்டுமல்ல நேற்றுவரை ஜிஹாது ஜிஹாது என்று பேசிய அவர்கள் வாய். இஸ்லாத்தில் ஜிஹாதே இல்லை என்பது போல பேச ஆரம்பித்து விடும். கடைசியாக இஸ்லாத்துக்கு மாற்றமாக விளக்கம் கொடுத்து தப்ஸீர் எழுத போய் விடுவார்கள். இதுதான் ISIS தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி போன்றவர்கள் நிலை


நமக்கு முன் மாதிரி யூதர்களின் கைக் கூலிகள் அல்ல. நமக்கு வழி காட்டி யூதர்களாலும், உளவுத்துறைகளாலும் இயக்கப்பட்டவர்கள் அல்ல. நமக்கு முன் மாதிரி, வழிகாட்டி யார்? அல்லாஹ்வால் இயக்கப்பட்டவர். அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்தவர். அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும்தான்.


அவர்கள் முன்னின்று போர் புரிந்து இருக்கிறார்கள். ஆனால் எப்போது? 24 மணி நேரமும் போர் புரிந்து கொண்டு இருந்தார்களா? எதிர் தரப்பினர் கைதிகளாக தங்கள் கஸ்டடிக்கு வந்த பிறகு ஒருத்தரையாவது தண்டனைக்கு உட்படுத்தினார்களா? சதா சண்டை, வம்பு சண்டை என்பதை அல்லாஹ் உடைய துாதர் கற்றுக் கொடுத்தார்களா? இல்லை. அப்படியானால் இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது எது? தண்டிப்பா? மன்னிப்பா


நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவுக்கு நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்களோ அந்த அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் (தண்டிக்காமல் அவர்களைப்)  பொறுத்துக் கொண்டால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. (அல் குர்ஆன் 16:126


தண்டனைக்குரியவர்களை தண்டிக்க அணுமதி அளித்த இஸ்லாம் அதிலும் அளவு (வரம்பு) மீறக் கூடாது என்கிறது. மேலும் எதை சிறந்தது என்கிறது? பொறுத்துக் கொள்வதைத்தான் சிறந்தது என்கிறது. இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது மன்னிப்பு. மிகக் குறைவாக இருப்பது தற்காப்புக்கான தண்டிப்பு.



நல்லறிவு உடையவர்களே கொலைக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு (தற்காப்பு) உள்ளது. (அல்குர்ஆன் 2:179) 

ஆக தற்காப்புக்காகத்தான் தண்டிப்பே. சண்டை நிரந்தர பகை என்பதை அல்லாஹ் உடைய துாதர் கற்றுக் கொடுக்கவே இல்லை. அது ஷைத்தான் கற்றுக் கொடுத்தது. இதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்

நபி வழி என்று சொல்லிக் கொண்டு வம்புச் சண்டைகளை விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள். அதை வியாபாராமாக ஆக்கி அதையே பிழைப்பாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள். போர் எப்பொழுது கடமையாக்கப்பட்டது என்பதை விட ஏன் கடமையாக்கப்பட்டது?. அதை அறிய வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. என்ன காரணங்கள்?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி மக்கள் உரிமை.

முந்தைய தலைப்பு

யாரைப் பற்றி நாம் விசாரிக்கப்படுவோம்?


அடுத்த தலைப்பு
இதுதான் அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய வெற்றி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.