மார்க்க தீர்ப்பு யாருக்கு நெருடலான விஷயமாக இருக்கும்

தஞ்சை சகோதரர் ஒருவர் நம்மை பார்க்க வந்தார். அந்த ஜமாத்தைச் சார்ந்த தங்கள் குடும்பத்தார் திருமணம் மண்டபத்தில் வைத்தார்கள். அதனால் அந்த ஜமாத்தினர் தஃப்தர் உண்டு! தாயீ இல்லை! என்று சொல்லி பிறகு தாஹியையும் அனுப்ப மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள் என்றார்.
அந்த ஜமாத்தினரின் அந்த தீர்ப்பு சரி இல்லை. நன்கு ஆய்ந்து உங்கள் மனசாட்சிப்படி முடிவு செய்யுங்கள். யாரும் யாரையும் கண் மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வார்கள். தங்களை கண் மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள்.
 
அவர்களது தீர்ப்பு முன்னுக்கு பின் முரணான தீர்ப்பு என்று கூறினேன். அவர்கள் சொல்லி உள்ள தீர்ப்பையே எடுத்து படித்துக் காட்டினேன். தீர்ப்பில் உள்ள முன்னுக்கு பின் முரணானவற்றையும் மார்க்க விரோத நிலையையும் சொல்லிக் காட்டினேன்.
திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில்
ஒரு வரையறை  இல்லை. அவ்வாறு ஒரு வரையறை வைக்க  முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து”  என்று அந்த தீர்ப்பின் ஆரம்பத்தில் சொல்லி உள்ளார்கள்.
மார்க்கத்தில் ஒரு வரையறை இல்லை என்றால் என்ன அர்த்தம் அல்லாஹ்வும் அவனது துாதரும் அளித்த தீர்ப்பு அது என்பதுதானே. அல்லாஹ்வும் அவனது துாதரும் அளித்த தீர்ப்பை நெருடலான விஷயம் என்று சொல்லி உள்ளார்கள் என்றால் அவா்கள் யார்?
சொல்லி உள்ளார்கள் என்று பேச்சு வழக்கில்தான் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் வாயால் சொல்லவில்லை, எழுத்தால் எழுதி உள்ளார்கள். சொல்லி உள்ளார்கள் என்றால் நாக்கு நழுவிய வார்த்தை, கவனக் குறைவு என்று நல் எண்ணம் வைக்கலாம்.
 
அவர்கள் எழுத்தால் எழுதி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளர்கள். நெட்டிலும் போட்டுள்ளார்கள். திட்டமிட்ட எழுத்து திடமான எழுத்து அது.
மார்க்க தீர்ப்பு யாருக்கு நெருடலான விஷயமாக இருக்கும். யாருக்கு ஈமான் இல்லையோ யார் மூமீனாக இல்லையோ அவர்களுக்குத்தான் மார்க்க தீர்ப்பு அதிருப்தியாக நெருடலான விஷயமாக இருக்கும். நாம் சொல்லவில்லை அல்லாஹ் சொல்கிறான். 4ஆவது அத்தியாயம் 65ஆவது வசனத்தில். இவர்கள் யார் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். (இன்ஷாஅல்லாஹ் தொடரும்)



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு