மஹரை நுள்ளி, கிள்ளி கொடுக்காதீர்கள் தகுதிக்கு ஏற்ப அள்ளி கொடுங்கள் .
மேலப்பாளையம் த.மு.மு.க. ஏற்பாடு செய்த இலட்சிய திருமணம் த.மு.மு.க. தலைவர் மவுலவி J. S. ரிபாஈ ரஷாதி தலைமையில் இனிதே நடைபெற்றது.
மஹரை நுள்ளி, கிள்ளி கொடுக்காதீர்கள் தகுதிக்கு ஏற்ப அள்ளி கொடுங்கள். த.மு.மு.கவின் இலட்சிய வேண்டுகோளை ஏற்று மாப்பிள்ளை பெண்ணுக்கு மூன்று லட்சம் வரதட்சணை கொடுத்தார்.
மணமகன் மணமகளுக்கு வழங்கிய மஹர் எனும் வரதட்ணை மொத்தம் ரூபாய் மூன்று
இலட்சம். ரூபாய் 1,25,000(ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) பெறுமானமுள்ள 50கிராம்
தங்க ஜெயின். . மேலும் 5ஆண்டுகளுக்குள் மாநகர எல்கைக்குள்
தரமான வீடு ஒன்றை கட்டியோ
வாங்கியோ மணமகள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும்
என எழுதப்பட்ட காஜா நாயகம் தெரு வெள்ளை மீரான் ஜும்ஆ
பள்ளி திருமண பதிவேட்டில் மணமகன் மணமகள்
கையெழுத்திட்டார்கள்.
அதன்
பின் மணமகளின் அண்ணன் மசூது திருமணம் செய்து
வைத்தார். தி.மு.க. தலைவர்
கருணாநிதி அனுப்பிய வாழ்த்து மடலை தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் அவர்களும்
தமிழ் மாநில
காங்ரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அனுப்பிய வாழ்த்து மடலை
மண்டல தலைவர் எம்.ஏ.எஸ். அப்துல் காதர் அவர்களும்
மணமகனிடம் வழங்கி வாழ்த்தினர்.
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் T.P.M. மைதீன் கான் M.L.A.
த.மு.மு.க மாநில துணைத் தலைவர் குணங்குடி
R.M. ஹனீபா
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்
மில்லத் இஸ்மாயில்
த.மு.மு.க மாவட்ட
செயலாளர் அப்பாஸ்ஹில்மி
பொருளாளர் அலிப் மீரான்
முஸ்லிம் லீக் மாவட்ட
பொறுப்பாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அதிரை தாருத் தவ்ஹீது ஜமீல்காகா, முன்னாள் எஸ்.பி. கோவை சிவா, மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி, ஸ்டார் இபுறாஹீம்
முன்னாள் நகர தந்தை அல்ஹாஜ் எம்.ஏ.எஸ்.
அபுபக்கர் ஸாஹிப்,
ம.தி.மு.க. நிஜாம்
சேனாதிபதி மைதீன் பிச்சை, தீன்சுடர் ஷம்சு. டி.எஸ்.எம்.ஓ. அப்துல்
மஜீத், தி.மு.க. மண்டல செயலாளர் அப்துல் கையூம், துணை செயலாளர் ஞானியார், முன்னாள் செயலாளர் ஆ.மு பக்கர், சாகுல் ஹமீது, குலாம் ரசூல், செய்யது மைதீன், அ.தி.மு.க. ஷாஜஹான், செய்யது அலி ரிபாஈ, கூலி ஷம்சுத்தீன், கே.என். ஷேக் மைதீன், மவுதலி காஜா, நாமியா அசன், மொன்னி பெஸ்ட்
ரசூல், அஜீஸ், பிஸ்கட் சுல்தான். , மவுலவிகள் அப்துல் காதர்,
இல்யாஸ் உஸ்மானி, இப்றாஹீம் மஹ்ழரி, ஜலீல் அஹ்மது உஸ்மானி, முஹம்மது மைதீன் ஞானியார் மற்றும்
பிரமுகர்களும் பொது
மக்களும் கலந்து கொண்டனர்.
Comments